சூரா கஹஃப்புடைய முதல் 10 வசனங்களை ஏன் படிக்க வேண்டும்

1) நபி (ஸல்) நம்மை சூரா கஹஃப்பை படிக்கச் சொன்னதால் படிக்கிறோம்
அவர் எதைச் செய்தாரோ அதைத் தான் நம்மைச் செய்யச் சொன்னார்.  அதனால் அதை ஒரு சுன்னத் என்பதாலும் பின்பற்றுகிறோம் (நபி (சல்) அவர்கள் மட்டுமல்ல, அவருடைய பல தோழர்கள், அவர்களைப் பிந்தொடர்ந்தவர்களும் கூட இதைப் பின்பற்றினார்கள்).
இதைத் தவிர வேறு எந்த சூராவையோ வசனங்களையோ மனப்பாடம் செய்யச் சொல்லவில்லை.
“சூரத்துல் கஹஃப்புடைய முதல் பத்து வசனங்களை மனனம் செய்பவர், தஜ்ஜாலுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப் படுவார்.” [முஸ்லிம்]
சூரா ஃபாத்திஹா போன்ற சூராக்கள் தொழுகைக்கு அவசியமாகின்றன.  ஆனால் சூரா கஹஃப்புடைய முக்கியத்துவம் சிறப்பாக பேசப்படுகிறது. ஆறாவது வசனத்தில் [(நபியே!) இந்த (வேதஅறிவிப்பில்அவர்கள்நம்பிக்கைகொள்ளாவிட்டால்அவர்களுக்காகவியாகூலப்பட்டுநீர்உம்மையேஅழித்துக்கொள்வீர்கள்போலும்!] கூறப்பட்டிருப்பது போல், நபி (ஸல்) நம்மைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டதால், நாம் குறைந்த பட்சம் அவர்களுடைய அறிவுரையையாவது பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.
2) மனப் பாடம் செய்வது மிகவும் முக்கியம்
நம்மில் பெரும்பாலோர் மனப்பாடம் செய்வதை ஒரு கூடுதல் வேலையாக நினைக்கிறோம்.  ஆனால், பின்வரும் ஹதீஸிலிருந்து, குர்’ஆனுடைய வசனங்கள் இல்லாத போது நம்முடைய ஆன்மாக்கள் எத்தனை வெறுமையாக இருக்கும் என்பது தெரிகிறது.
குர்’ஆனுடைய எந்த பகுதியையும் மனனம் செய்யாதவர் ஒரு பாழடைந்த வீட்டிற்கு சமமாவார்.  [திர்மிதி]
நீங்கள் கேட்கலாம், இந்த 21ஆம் நூற்றாண்டில் அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பிரதிகளும், விரல் நுனியில், கை பேசிகளிலும், இன்னும் பல கையடக்க மின் சாதனங்களிலும் இருக்க, நாம் ஏன் அதை மனப்பாடம் செய்ய வேண்டும், என்று.
ஏனென்றால், ஒரு வசனம் மனதில் பதிய வேண்டும் என்றால், அதை மனப்பாடம் செய்தாக வேண்டும்.  மனனம் செய்வதால் தரமான, nநம் உடல் சார்ந்த வித்தியாசனமான ஒரு ஞானத்தைப் பெறுகிறோம்.  குர்’ஆன் வசனங்களை   உங்களுக்குள் வாங்கிக் கொள்வதால், வேறு எந்த சாதனத்தின் உதவியும் கொண்டு படிப்பதை விட ஆழமான  நிலையில் அவற்றை அறிவீர்கள். உங்கள் வாழ்வில் தற்செயலாக ஏற்படும் சந்தர்ப்பங்களில், மனதில் பதிந்துள்ள வசனங்களை நினைவில் கொண்டு வந்து நடைமுறை வாழ்வில் பயன் படுத்துவது எளிதாக இருக்கும். குர்’ஆனை எடுக்கவோ, செல் பேசியைப் பார்க்கவோ அவசியமிருக்காது.
குர்’ஆன் தன்னில் அடக்கியுள்ள விவேகத்தினால், அதை உங்கள் மனதில் பதிய வைப்பது உங்களையும் ஒரு விவேகியாக ஆக்கும்.
3) நீங்கள் குர்’ஆனை மனப்பாடம் செய்வதால் உங்களுடைய அந்தஸ்து உயரும்.
நாம் எந்த அளவு மனப்பாடம் செய்கிறோமோ அதற்கேற்றாற்போல் நம் அந்தஸ்து உயரும்.
ஓதியவாறு, உயருங்கள், ஒவ்வொரு வசனத்துடனும் உங்கள் வெகுமதி அதிகரிக்கும்[திர்மிதி]
மனப்பாடம் செய்வது என்பது உங்கள் மனதில் வசனங்களை சேமித்து வைப்பது மட்டுமல்ல, அதை ஆழமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் – எந்த அளவுக்கென்றால், குர்’ஆனை உங்களிடம் பார்க்க முடிய வேண்டும்.  மக்கள், உங்களைப் பார்க்கும்போதே நீங்கள் குர்’ஆன் முழுவதையும் அல்லது அதன் சில பகுதிகளை மனப்பாடம் செய்துள்ளீர்கள் என்று கூறும்படியாக இருக்க வேண்டும்.
- See more at: http://www.understandqurantamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/

ஆயத்துல் குர்ஸி தமிழில்

Gaza Aid Appeal: BANNED by the BBC and SKY