பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்..


தந்தையர்
ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி “அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா
தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி
ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல்குர்ஆன் 31:14
பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244

பெண்கள்

எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல:் முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957
அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான்.
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59
எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு ந்க ஹ்லைதான்.
அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் “அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?” முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்” என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.
பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!
பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ
பெற்றோரின் திருப்தி
பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி
பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்
ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)
அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக!
நன்றி:அபூஃபைஸல்



Thanks to ....
Shaik  Dhawood
Mobile: +971 50 3017 495

என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!




என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்! தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!
 காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
2008&ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர்.
ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. 
ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர்.
போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். 
அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார்.
இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது.
இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார்.
அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது.
1993&லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது.
1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560.
2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது.
3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320.
5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502.
6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998.
7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224.
8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது.
9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.
இத்தனை அரிய பட்டியலை  வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்.
டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை.
போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது.
16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும்.
போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது.
 குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?) 
அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.
உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம்.
மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர்.
காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம்  பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர்.
இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன.
கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில்
1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும்,
2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும்
3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும்
4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும்
4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும்
5. பீகாரில் 14 முஸ்லிம்களும்
5. டெல்லியில் 11 முஸ்லிம்களும்
6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது.
குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும்.
அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது.
51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று.
-அபூஸாலிஹ்

www.tmmk.info
http://kilakaraitmm k.blogspot. com

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?



அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால்  ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்

தாய்
ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?

மகன்
சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

உங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
தந்தை
ஏன்டா! மகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்கு சின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன்! 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன்! 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே! தந்தை ஸ்தானத்திலிருந்துநான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே? இந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன்! ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா?
மகன்
என்னப்பா? உனக்கு அறிவு இருக்கா! சின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்ப சொல்லிக் காட்டுறியே? நீ எல்லாம் ஒரு அப்பனா? இது உனக்கு நல்லா இருக்கா? வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா! இப்ப என்ன உனக்கு காசுதான வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிடு இதுக்கப்பறம் காசு கீசுன்னு எங்கிட்ட வந்துடாத! மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள்! என்ன தொல்லை பண்ணாத!
உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள்! நீங்களோ அவரை சமாளித்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

உங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
மனைவி
என்னங்க! நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டது! அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானம் அபரிமிதமாக இருக்கு! இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லுங்கள்?ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்க நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்?
   
கணவன்
என்ன ரொம்பத்தான் ஓவரா பேசுரே! பொம்பளைன்னு பார்க்கறேன் இல்லன்னா நடக்கறதே வேற? கணவன் என்கிற மரியாதை போயிடுச்சா? இந்த பேச்சே போதுமே உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப!

எனக்கு வயசு இருக்கு, வருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா............ ......... ......... ......... ...????(சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டே இருக்கும்)

உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்!! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம்!
அல்லாஹ்
ஆதமின் சந்ததியைச் சேர்ந்தவனே! என் அடிமையே! நான் உனக்கு
·                    நல்ல பெற்றோரை கொடுத்தேன்!

·                    நல்ல மனைவி மக்களை கொடுத்தேன்!

·                    அறிவுத் திறமையும் செல்வத்தையும் கொடுத்தேன்!

·                    சொத்துக்கள், சுகங்களை கொடுத்தேன்!

·                    கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்!

·                    உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்!

·                    நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும் அணுப்பினேன்

முஸ்லிமாக வாழந்து, 5 வேளை தொழுகைகளை பேணி, ஜகாத் கொடுத்து, ஹஜ் செய்து உலகில் வாழந்து வந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்?
படைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?
நீங்கள்
?

அன்புச் சகோதர, சகோதரிகளே வாழந்து விட்டால் போதுமா? நாலு காசு சம்பாதித்தால் போதுமா? சொத்து சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா?

இந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம். அதே நேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை தங்குமிடமாக எண்ணி நிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவையா? சகோதர சகோதரிகளே

நம்முடைய அராஜக குணத்தால்
·                    பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,
·                    வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்
·                    கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்
·                    ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்

மேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள் அல்லாஹ்விடம் வெற்றி கொள்ள முடியுமா?

வாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய விதத்தில் இருந்தால் நமக்கு இலாபமா? நட்டமா?

இதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்!
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோஅவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)

'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்''
(திருக்குர்ஆன், 5:72)

நபிமொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இறைவனுக்கு இணை கற்பிப்பதும்மனிதனைக் கொலை செய்வதும்தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், 'பொய் கூறுவதும்'அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.  இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி)அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'பெரும் பாவங்கள்என்று வந்துள்ளது.

(புகாரி 6871)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.  என இப்னு அப்பாஸ்(ரலி)அறிவித்தார். (புகாரி 6882)

அன்புச் சகோதர சகோதரிகளே!
மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை! இணைவைப்பதை அல்லாஹ் மன்னிப்பதில்லை!

சிந்திப்பீர்!  செயல்படுவீர்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

குறிப்பு
இந்த கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் இந்த நிகழ்வுகளை உணர வேண்டும் என்பதற்காகவே நீங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். (தவறாக தென்பட்டால் மன்னிக்கவும்)


Regards,
Shadhuly A. Hassan
Admn. & Mgmt. Assistant
Modern Machinery Co. Ltd.
Riyadh, Saudi Arabia
Tel: 00966-1-4030745     Fax: 00966-1-4036410
Mobile: 00966-504259841

மாநபி வழியை பேணு


கருப்பு நீக்ரோ பிலாலை
கருத்தோடு முதலில் பாங்கைப்
பொருத்தமாய் முழங்க வைத்து
வருத்தும் நிறவேறி நீக்கிய நெறிமுறை.
தனிமனித பெருமையும் உரிமையும்
இனியும் இல்லை என்று
முன்னால் வருபவரே முதலில்
முன் நின்று தொழும் சமத்துவம்.
அரும்பொருள் உடையார் கணக்கிட்டு
தரும்பொருளைத் தக்கார்க்குக்
தகவழங்கி
இல்லாமை இருளகற்றி எல்லாரும்
எல்லாமும் பெறசெய்யும் ஜகாத்.
உறுபசி உணர்ந்து நலிந்தவர்
பெறுதுயர் துய்த்து பாரில்
பசிபோக்க பக்குவப் படுத்தும்
உசிதமான உன்னத நோன்பு.
பகரும் மொழிபேத மின்றி
பகட்டில்லா இஹ்ராம் உடையில்
பன் னாட்டு மக்களும் இணைந்து
நன் னயம் காணும் சகோதரத்துவம்.
குப்பையைத் தினமும் கொடுரமாய்த்
தப்பாது கொட்டி கொக்கரித்து
நகைத்த பெண்நலமுற உதவிய
பகைவருக் கருளும் பாங்கு.
தேரிடா குறைஷிகள் சீறி வந்து
போரிட்ட பத்ரு களத்தில்
நீரின்ரி தவித்த எதிரிக்கு
நீரளித்த சீரான மேன்மை.
பெண்ணுக்கும் கல்வியைக் கற்பித்து
கண்ணான சொத்திலும் பங்கு தந்து
விதவை மறுமணம் நடத்தி
உதவி காட்டிய மறுமலர்ச்சி.
தனித்துவம் தவிர்த்து சேர்ந்துண்ண
மனிதர்களைச் சேர்த்து வைத்து
இனப்பிரிவை இல்லாமல் ஆக்கியது
இனிய நபி இயம்பிய வழியே.
மனித நேயம் காண
மாநபி வழியை பேணு
மு.அ. அபுல் அமீன் நாகூர்.
ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி, செல்பேசி :-9943469691
தலைவர்:- P.T.A; G.P.S; Nagore. V.E.C: Nagapattinam.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியம் பெறுவோர் சங்கம். நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.