Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

News

News

News

News


கடந்த 2012 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திருச்சியை சேர்ந்த தமீம் அன்சாரி என்ற வெங்காய வியாபாரி இலங்கைக்கு வியாபார நிமித்தமாக சென்று திரும்பிய போது விமான நிலையத்தில் தமிழக கியூ பிரிவுப் போலீசார் பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கொடுக்க முயன்றனர் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டார்..கைது செய்யப்பட்ட நபர் முஸ்லிம் என்றவுடன் வழக்கம் போல நமது ஊடக எலிகள் வழக்கமான பொய் செய்திகளுடன் பல நாட்களுக்கு இந்திய ராணுவ ரகசியத்தை விற்க முயன்ற முஸ்லிம் தீவிரவாதி , தமிழகத்தில் முக்கிய நகாரங்களை தாக்க திட்டம் , பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகம் ஊடுருவும் முயற்சி கண்டுபிடிப்பு , கம்யுனிஸ்ட் போர்வையில் தனது தீவிரவாத நடவடிக்கையை அரங்கேற்றி வந்தவர் என பல புரளிகளுடன் பல நாட்களுக்கு செய்திகள் பஞ்சமின்றி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.இந்திய அளவிலும் பொய் பிரட்சாரங்கள் கொண்டு செல்லப்பட்டன...ஆனால் முடிவில் நீதி மன்றம் இது பொய்யான தகவல் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அன்சாரி நிரபராதி என்றும் விடுதலை செய்தது...வழக்கம் போல இந்த உண்மையை எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!!!நன்றி- Ahamed Kabir

News

News

தட்பவெப்ப நிலைகளில் திடீர் மாற்றங்கள்

மூன்று பக்கம் கடல், ஒரு பக்கம் நிலத்தால் சூழப்பட்ட அழகான தீபகற்ப நாடு இந்தியா. உலக அளவில் தட்பவெப்ப நிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. காலம் தவறி மழை, ஓரிடத்தில் அதிக மழை, அருகே உள்ள பகுதியில் கடும் வெயில் என காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை வதைக்கிறது. வானிலையை கணிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்களும் திணறுகின்றனர். இதுபோன்ற தட்பவெப்ப நிலை மாற்றங்கள் அனைத்திற்கும் “கடலில் ஏற்படும் மாற்றங்களே’’ காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றங்களால் உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தமிழகத்தையும் தாக்க தொடங்கியுள்ளது. தட்பவெப்ப வேறுபாடுகளால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 2050ம் ஆண்டில் இந்தியவைச் சுற்றியுள்ள கடல்களின் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும் என்று ஐஎப்எம்ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடல் மட்டம் உயரும்போது அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று இப்போதே எச்சரித்துள்ளது அந்நிறுவனம். தமிழக கடலோரப் பகுதியின் நீளம் 1076 கி.மீ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்கள் கடலோரத்தில் உள்ளன. 13 மாவட்டங்களும் கடல் மட்டத்தில் இருந்து 5 முதல் 10 மீட்டர் வரை தாழ்வாக உள்ளன. எனவே கடல் மட்டம் 1 மீட்டர் உயரும்போது 1091 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி முழுவதும் நிரந்தரமாக தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதனால் தமிழகத்தில் சுமார் ஸி1.27 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலோரத்தில் உள்ள துறைமுகங்கள், மின் நிலையங்கள், விவசாய நிலங்கள், சாலைகள், நிலங்கள் முழுவதும் பாதிக்கப்படும். துறைமுகங்களில் ஸி36,595 கோடி அளவிற்கும், மின் நிலையங்களில் ஸி13,814 கோடி, விவசாய நிலங்களில் ஸி14,608 கோடி, சாலைகளில் ஸி3,145 கோடி, நிலங்களில் ஸி61 லட்சத்து 15,471 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். கடலோரங்களில் மூன்றரை லட்சம் மீனவர்கள் உட்பட ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படும். இந்த பகுதிகள் கடல் மட்டத்தைவிட மிகத் தாழ்வாக உள்ளன. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும் இப்பகுதியில் அதிகமாக இருக்கும். சென்னை, கடல் மட்டத்தில் இருந்து 5 மீட்டர் தாழ்வாக உள்ளது. சென்னையில் கடலோரத்தில் பல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இவை அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தரமணி, வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இன்னும் 20 ஆண்டுகளில் கடல் நீர் சூழ்ந்துவிடும் என்று மற்றொரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள்

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள கடல் மட்டத்தைவிட 100 மீட்டர் தாழ்வாகவே கடல்மட்டம் இருந்துள்ளது என்றும், கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில்தான் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது என்றும் டைட்டஸ் என்ற விஞ்ஞானி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளார். 2100ம் ஆண்டில் 10 செ.மீ வரை கடல்நீர் மட்டம் உயரும் என்று ஹாப்மேன் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு 1 முதல் 2 மி.மீ வரை கடல் மட்டம் உயருகிறது என்று வாரிக் மற்றும் ஆர்லமென்ட்ஸ் என்ற விஞ்ஞானிகள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி நிரூபித்து உள்ளனர். கடலில் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகள் அனைவருமே கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்றுதான் தெரிவித்துள்ளனர்.

அப்துல் கலாம் கருத்து

இந்தியாவில் தட்பவெப்ப மாறுபாட்டால் நீர் நிலைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசாக மாறுவதற்கு நீர்நிலைகளும் நமக்கு முக்கிய தேவை. நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்தால் விவசாயம் குறைந்து விடும். 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த நீர்நிலைகளின் நிலையை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பல விஷயங்கள் புரியும். ஆந்திராவில் உள்ள கோதாவரியில் மழை பெய்யும்போது மட்டும் 2,500 டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. சாதாரண நாட்களில் 700 டிஎம்சி வீணாகிறது. இதேபோல எல்லா மாநிலங்களிலும் தண்ணீர் வீணாகிறது. வீணாகும் தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த நடவடிக்கைகள் தேவை.

அழிவை தடுக்க என்ன வழி

கடலோரப் பகுதிகளில் முழுமையான பகுப்பாய்வுகள் நடத்தப்பட வேண்டும். கடலோர பகுதிகள் குறித்த மிக விரிவான மற்றும் உண்மையான தகவல்களை சேகரிக்க வேண்டும். கடலோர கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் தட்பவெப்ப மாற்றத் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். முன் எச்சரிக்கை கருவிகளை முக்கிய இடங்களில் வைக்க வேண்டும். மண் அரிப்பை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மெரினா மூழ்கும் அபாயம்

சென்னையில் 1 மீட்டர் கடல் மட்டம் உயரும்போது மெரினா கடற்கரை மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. இது ஒரே நாளில் நடக்காது. ஆனால் சிறிது சிறிதாக கடலின் ஆதிக்கம் அதிகரித்து இது நடக்கும் என்கின்றனர். மெரினா போலீஸ் நிலையம் பின்புறமுள்ள நொச்சிக் குப்பம், மாட்டான் குப்பத்தை சேர்ந்த வயதான மீனவர்கள் கூறும்போது, “நாங்கள் சிறுவனாக இருந்த காலத்தில் கடல்நீர் மட்டம் ரொம்ப தூரத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிக அருகில் உள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர்மட்டம் உள்ளே வந்துள்ளது’’ என்றனர்.

சிரபுஞ்சியில் குடிநீர் இல்லை

இந்தியாவில் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடமாக இமயமலை அருகே உள்ள சிரபுஞ்சி இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்குள்ள மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிரபுஞ்சியில் தற்போது லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.

கடலுக்குள் கபாலீஸ்வரர் கோவில்
சாந்தோம் ஆலயத்துக்கு பின்புற கடல் பகுதியில்தான் உண்மையான கபாலீஸ்வரர் கோவில் இருந்தது. அந்த இடத்தை கடல் நீர் ஆட்கொண்ட பிறகுதான் மயிலாப்பூரில் புதிய கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. கடலுக்குள் இன்னும் பழைய கபாலீஸ்வரர் கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்குள் புற ஊதா கதிர்கள் தாக்கம்

புவி வெப்பம் அடைவதால் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளையின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் புற ஊதாக் கதிர்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நிலப் பகுதிகளை மட்டும்தான் புற ஊதாக் கதிர்கள் தாக்குகிறது என்று நினைத்திருந்த ஆராய்ச்சியாளர்கள், கடலிலும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடலின் மேற்பரப்பில் இருந்து 10 மீட்டர் ஆழம் வரை புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிகமிக அதிகமாக உள்ளது என்று “ஸ்மித்’’ என்ற விஞ்ஞானியின் தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கடல்நீரின் வெப்பம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இன்னும் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உயர்ந்தால் 80 சதவீத கடல்வாழ் உயிரினங்கள் இறந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சுனாமி அலைகளும், பெரிய புயல் சின்னங்கள் உருவாகி நிலப்பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!


பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை கண்டித்து சமூக அக்கறையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)
இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. ‘பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்…!’ என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வது?  ஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப்  பெற்றிருக்கிறார்கள்.


இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்) 
பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும்.  இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.

நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர்உச்சநீதிமன்றம்)
 பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான்.  சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்…1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது

தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு(பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)
மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை  இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)
வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும்  பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.

ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்-நானி பால்கிவாலா
(பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)
நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.


முஸ்லிம்களை போல இந்துக்கள் அமைதியாக இருப்பார்களா?-குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)
பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை  முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.
பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.
சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)
இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?
வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.


அநீதியின் வெளிப்பாடு-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)
இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது….ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக ‘அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்’ என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)
16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!
இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.

அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு!!!


லண்டன்,ஜன.23:காந்தஹார் மாகாணத்தில் அர்கந்தாத் நதியின் பள்ளத்தாக்கில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய குண்டுவீச்சில் ஒரு கிராமமே அழிந்து போனதாக செய்தி ஒன்று கூறுகிறது.

தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறித்தான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டீஷ் பத்திரிகையான டெய்லி மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இக்கிராமத்திலிருந்து போராளிகளை விரட்டியடிக்க இரண்டு முறை நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அக்கிராமத்தையே முற்றிலும் அழித்தொழிக்க அந்நிய ஆக்கிரமிப்பு கூட்டுப்படையின் கமாண்டர் லெஃப்டினண்ட் கர்னல் டேவிட் ஃப்ளின் மூளையில் உதித்த கொடூர எண்ணத்தினால் அந்த கிராமத்தையே அழித்தொழிக்க உத்தரவிட்டார்.

குண்டுவீச்சிற்கு முன்பும் பிறகும் எடுத்த புகைப்படங்களை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டரோக் கலோசே (Tarok Kolache) என்ற ஆப்கான் கிராமம்தான் அமெரிக்க வெறி ராணுவத்தின் அழித்தொழிப்புக்கு ஆளாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பிறரை அக்கிராமத்தின் பக்கம் அனுமதிக்காததால் எத்தனை சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. 25 டன் குண்டுகளை அமெரிக்க பயங்கரவாத ராணுவம் அக்கிராமத்தின் மீது வீசியுள்ளது.

போலி' அரசியல் கட்சிகள்!



தேர்தல் ஆணையம் என்கிற அமைப்பு ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்பதும், அது சக்திவாய்ந்த அதிகாரம் படைத்த அரசியல் சட்ட அமைப்பு என்பதும் டி.என். சேஷன் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதுதான் பெருவாரியான பொதுமக்களுக்கே தெரியவந்தது. வானளாவிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்பதையும், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டிய தேவையில்லை என்பதையும் டி.என். சேஷன் உணர்த்தியபோது, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் கைகோத்துத் தேர்தல் கமிஷனருக்குக் கடிவாளம் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். தேர்தல் கமிஷன் மூன்று பேர் கொண்ட குழுவாக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற பதவியும் ஏற்படுத்தப்பட்டது.
டி.என். சேஷனுக்குப் பிறகு பதவி வகித்த தலைமைத் தேர்தல் ஆணையர்கள் அனைவருமே, ஏதாவது ஒருவிதத்தில் இந்தியத் தேர்தல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், முறையாகத் தேர்தல்கள் நடத்தப்படவும், தவறுகள் திருத்தப்படவும் தங்களது பங்களிப்பை நல்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட எம்.எஸ்.கில், லிங்டோ, நவீன் சாவ்லா போன்றவர்கள்கூட தலைமைத் தேர்தல் ஆணையர்களாகப் பணிபுரிந்தபோது தாங்கள் வகித்த பதவிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாமல் பணியாற்றினர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியும் இதற்கு விதிவிலக்கல்ல.
குரேஷி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு வெளிப்படுத்தி இருக்கும் பல கருத்துகள் பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. வாக்காளர்களின் வயது வரம்பைப் பதினாறாகக் குறைக்க வேண்டும் என்கிற அவரது கருத்தைத் தவிர, ஏனைய கருத்துகள் அனைத்துமே மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு, தேர்தல் விதிகளில் தக்க மாற்றங்களை ஏற்படுத்த உதவுபவை.
2003-ல் இயற்றப்பட்ட ஒரு சட்டம் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 5%தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க வழிகோலியது. இந்த நன்கொடைகள் வங்கிக் காசோலைகள் மூலம் தரப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நன்கொடைகள் முழுமையாக வரிவிலக்குப் பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
தங்களது பெயர் வெளியில் தெரியாமல், அரசியல் கட்சிகளுக்கு ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்க ஒரு நிறுவனம் விரும்பினால், தான் நன்கொடையாக வழங்கிய தொகைக்கு வரி விலக்குக் கோராமல் இருந்தாலே போதும். இதைத்தான் இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஊழலின் ஊற்றுக்கண் என்று சுட்டிக்காட்டித் திருத்தச் சொல்கிறார்.
ஏர்டெல் நிறுவனம் கடந்த 2008-09-ல் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 10 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இதேபோல, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி என்று எல்லா கட்சிகளுமே பெரிய தொழில் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்றிருக்கின்றன. மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பெரிய தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாகச்  சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நன்கொடைகளைப் பெறக்கூடும் என்பதுதான் இந்தச் சட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய பலவீனம்.
முந்தைய தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி கடந்த 2006 ஜூலை 31 அன்றே பிரதமருக்கு இந்த நன்கொடைகளின் பின்னணிகள் பற்றி சந்தேகம் இருப்பதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை அடியொற்றி, இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இந்தச் சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பு நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தேர்தல் அறக்கட்டளைகளை உருவாக்கி, இந்த அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கு மத்திய அரசு வழிகோலி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியே நடக்கிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி.
சமீபகாலமாகத் தொழில் அதிபர்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துவோர், சாராய அதிபர்கள் என்று பலரும் அரசியல் கட்சிகளைத் தொடங்குவதன் ரகசியமே, கணக்கு வழக்கில்லாமல் தங்களிடம் குவியும் பணத்துக்கு வரி விலக்குப் பெறுவதற்குத்தான். இந்தியாவில் இருக்கும், சுமார் 1,200 கட்சிகளில் 200 கட்சிகள் மட்டுமே, அதாவது 16% மட்டுமே, உண்மையாக முழுநேர அரசியலில் ஈடுபட்டிருப்பவை. ஏனைய கட்சிகள் அனைத்தும், அளவுக்கு அதிகமாகத் தாங்கள் சேர்க்கும் பணத்தை அரசியல் நன்கொடை என்கிற பெயரில் தங்களால் நடத்தப்படும் "செயல்படாத' அரசியல் கட்சிக்கு வாரி வழங்கி, அரசை ஏமாற்றுகின்றன என்று துணிந்து வெளிப்படுத்தி இருக்கிறார் குரேஷி.
இதுபோன்ற கட்சிகள் தாங்கள் நன்கொடையாகப் பெற்ற பணத்தை கட்சியின் பெயரில் இடங்களை வாங்குவது, நகைகள் வாங்குவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று பயன்படுத்துவதாகவும் அதனால் இந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்து. வருமானவரிச் சட்டத்தைப் "போலி' அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டால், வருமான வரி விலக்குப் பெறுவதற்காகவே புதியதாகப் பல கட்சிகள் காளான்போல் உருவெடுக்கும் ஆபத்து இருப்பதைச் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார் குரேஷி.
அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடாத "போலி' கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் கணக்கை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கோ, தலைமைத் தணிக்கை ஆணையருக்கோ வழங்கப்பட வேண்டும். அதுதான் இதற்கு ஒரே தீர்வு!

துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி


26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரசு நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறிடிவிட்டர்முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறிஇறுதியில் புரட்சி வென்றது. “இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!” என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.
துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிகலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவுதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.
உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. “மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று” வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளைத்தான் பரப்பி வந்தன. “கலாச்சார மோதல்” தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். “அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை,” என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.
மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரசு அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள்.
துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.
துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிதுனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். “முஸ்லிம் நாடுகளான” துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது.
“சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.
2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.
எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.
துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, “மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக” நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது.
_________________________________________________________
- கலையரசன்
_________________________________________________________

நாடு போற போக்கு; இதிலுமா இலவசம்...?


வாக்குகளை வளைத்துப்போட வண்ணத் தொலைக்காட்சிப்  பெட்டி இலவசம், 'ஆட்சியாளர்களின் இருப்பை' கண்டுகொள்ளாமல் இருக்க இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், மின்சாரமின்றி எரியும் மக்களை கட்டுப்படுத்த எரிவாயு அடுப்பு இலவசம், இவ்வாறாக பல்வேறு பெயர்களில் தொடரும் இலவசங்கள் வழங்க அரசின் கஜானாவை நிரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பது 'டாஸ்மாக்' எனப்படும் அரசின் மது விற்பனை நிலையங்கள் தான் என்றால் அது மிகையல்ல.
 
'டாஸ்மாக்' என்ற பெயரில் அரசே என்றைக்கு மது விற்பனையை தொடங்கியதோ அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையின் இலக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2010  ம் ஆண்டு அரசு நிர்ணயித்த மது விற்பனை இலக்கான  15 ஆயிரத்து 981  கோடியையும் தாண்டி, டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக "டாஸ்மாக்' கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.
இவ்வாறு இலக்கு வைத்து மக்களை குடிகாரர்களாக ஆக்கும் அரசு ஒருபுறம் என்றால், பண்டிகை காலங்களில் 'ஒன்று வாங்கினால்  ஒன்று இலவசம்' என்று துணிகள்- அழகு சாதனப் பொருட்கள்- வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்குவார்களே அது போன்று, திருப்பூரில் உள்ள பார் ஒன்றில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த,  "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என நோட்டீஸ் விநியோகித்துள்ளார்கள்.
 
வெங்காய விலை விண்ணை முட்டிக்கொண்டிருக்கையில், மக்களைக்  கெடுக்கும் மதுபானம் இனாமாக கிடைப்பதில் 'குடிமக்கள்' வேண்டுமானால் மகிழலாம். ஆனால் சாமான்யர்கள் அரசின் மீது சரி கோபத்தில் உள்ளதை உணர்ந்து விரைவில் பூரண மதுவிலக்கை கொண்டுவர கருணாநிதி முயற்சிக்க வேண்டும். இல்லையேல் ஆறாவது முறை முதல்வராகும் எண்ணம்  ஆற்றில் கரைத்த உப்பாக ஆகிவிடும் என்பதை உணர்ந்துகொண்டால் சரி!
முகவைஅப்பாஸ்.

ஜிமெயில் - உங்களுக்கு வரும் இமெயிலை அரசும் படிக்கும்!!!


ஜிமெயில் - உங்களுக்கு வரும் இமெயிலை அரசும் படிக்கும்: பாதுகாப்பு காரணங்கள் கருதி இனி இந்தியர்களின் ஜிமெயில் மின்னிதழை மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் படிக்க வாய்ப்பு உண்டு. இதற்கான வசதியை இந்திய ஜிமெயில் நிர்வாகத்திடம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலின் காரணமாக சந்தேகப்படும் நபர்களின் மின்னிதழை அணுகும் வசதியை மத்திய அரசு ப்ளாக் பெர்ரி, நோகியா உள்ளிட்ட சர்வதேச தொலை தொடர்பு நிறுவனங்களோடு பெற்றுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் ஜிமெயில் நிர்வாகத்திடமும் இந்த வசதியை கோரியுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான வசதியை அரசாங்கம் பெறும் பட்சத்தில், இந்திய கணிணிகளோடு செயல்படும் அனைத்து ஜிமெயில் மின்னிதழ்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வர வாய்ப்புண்டு. இது குறித்து பேசிய உள் துறை செயலர் ஜி கே பிள்ளை, சந்தேகப்படும் நபர்களின் மின்னிதழ்களை மட்டும் தான் அரசு அனுகும், எனினும் தனி நபரின் தனிமை விஷயத்தில் அரசு கவனமாக இருக்கும் என்றார்.
2008 ஆண்டிடின் தொழில்நுட்ப சட்ட திருத்த மசோதா, இவ்வாறான மின்னிதழ்களை படிக்கும் உரிமையை அரசுக்கு வழங்குகிறது என்பது குறீப்பிடத்தகக்கது
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]

ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!


ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.) 

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்! 

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ. 

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான். 

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ. 

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். 

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை. 

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை. 

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி) 

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997. 

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன. 

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது. 

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது. 

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை

ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையும்; இந்தியாவின் அடவாடித்தனமும்!


இங்கிலாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் உள்ள விமான நிலையத்தில் 2007ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியர் சபீல் அகமது கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சபீல் அகமதுவின் உறவினர் ஹனீப். இவர் ஒரு டாக்டர். இவர் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள கோல்டு கோஸ்ட் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். அவரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்து நாட்டுக்கு ஹனீப் சென்றபோது, அவர் தன் மொபைல் போன் மற்றும் சிம்கார்டுகளை சபீல் அகமதுவின் வீட்டில் தவறுதலாக விட்டு விட்டு வந்தார். இதை தொடர்புபடுத்தி அவர் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் 12 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். இது இந்திய மக்களை கோபப்படுத்தியது. இதன் பிறகு கிளார்க் கமிஷன் விசாரணை நடத்தி ஹனீப் குற்றமற்றவர் என்று அறிவித்தது. இந்த நிலையில் ஹனீப் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
மானநஷ்ட வழக்கை கைவிடுவதற்காக அவருடன் ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் அவர் வழக்கை கைவிடுவது என்றும், அதற்கு பதிலாக அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்பது என்றும், அதோடு இழப்பீடாக ஒரு தொகை வழங்குவது என்றும் முடிவானது.அதன்படி ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது என்று பத்திரிக்கை செய்திகள்  கூறுகின்றன.
 
இந்த செய்தியின் மூலம் இந்தியாவின் அதிகார வர்க்கத்திற்கு ஒரு படிப்பினை உள்ளது. அது என்னவெனில், இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும், அதற்காக முதலில் சந்தேகப்பார்வை பார்க்கப்படுபவர்களும், கைது செய்யப்படுபவர்களும் முஸ்லிம்களே என்ற எழுதப்படாத சட்டம் இந்தியாவில் நிலவுகிறது. மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் கூட உண்மையான இந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னால், அந்த பழியும் முஸ்லிம்கள் மீதே  பதிந்தது.
 
ஒரு தீவிரவாத  சம்பவம் நடந்த உடனேயே அதுபற்றி விசாரணை தொடங்கும் முன்பே, அந்த தீவிரவாத செயலை பொறுப்பேற்று  கொண்டதாக ஒரு முஸ்லிம் அமைப்பு [அப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பது தனி விஷயம்] பெயரை பத்திரிக்கைகளில் பரவவிடுவது; பின்பு அதே கோணத்தில் விசாரணையை கொண்டு சென்று சில முஸ்லிம்களை கைது செய்வது; பின்னர் சில மாதங்களில், அல்லது சில ஆண்டுகள் கழித்து அந்த முஸ்லிமுக்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று விடுவிப்பது.
 
ஒரு தீவிரவாத சம்பவத்தில் ஒரு முஸ்லிம் கைது செய்யப்படும்போது அதுபற்றி முகப்பு செய்தியில் போட்டு தமது முகத்தை காட்டும் பத்திரிக்கைகள், அதே முஸ்லிம் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படும் செய்தியை பத்திரிக்கையின் ஒரு மூலையில் கூட போடத் தயாரில்லை. அவன்  செய்யாத தவறுக்கு அடைந்த தண்டனையும், ஏற்பட்ட அவமானத்திற்கும் யார் நஷ்டஈடு தருவது? உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்ட மதானி தொலைத்த ஒன்பது ஆண்டுகால இளமையை, அவர் இழந்த வருமானத்தை, அவரும் அவரது குடும்பமும் பட்ட அவமானத்தை யார் சரிசெய்யமுடியும்?
 
ஆனால், இதற்கும் ஆஸ்திரேலியா முன்மாதிரியாக உள்ளது. டாக்டர் ஹனீபிடம் மன்னிப்பு கேட்டதோடு, உரிய இழப்பீடும் வழங்கியுள்ளது. இதேபோன்று இந்தியாவும் ஒரு வழக்கில் கைது செய்யப்படும் ஒருவன், அது சாதாரண பிட்பாக்கெட் வழக்காக இருந்தாலும், பெரிய பயங்கரவாத வழங்காக இருந்தாலும் அவன் குற்றமற்றவன் என்று விடுதலை  செய்யப்பட்டால் அவனிடம் சம்மந்தப்பட்ட துறையினர் மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் அவனுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்டஈடு சம்மந்தப்பட்ட துறையினரிடமே வசூலித்து வழங்கவேண்டும். மேலும் அவனைப்பற்றி எந்த பத்திரிக்கையில் குற்றவாளியாக காட்டப்பட்டானோ, அதே பத்திரிக்கையில் அவன் குற்றமற்றவன் என்ற செய்தி இடம்பெறச் செய்யவேண்டும். அப்போதுதான் எடுத்தேன்-கவிழ்த்தேன் பாணி கைதுகளும், மததுவேஷ கைதுகளும், முன்விரோத கைதுகளும் குறையும். செய்யுமா இந்தியா?

WikiLeaks unlikely to release Swiss bank data soon


LONDON (Reuters) - WikiLeaks is unlikely anytime soon to make public material provided to it this week by Swiss bank whistleblower Rudolf Elmer, according to WikiLeaks founder Julian Assange and sources close to Elmer.
At a London news conference on Monday, Elmer, former chief of the office of the Julius Baer Bank in the Cayman Islands, handed to Assange what he said were two discs containing information on about 2,000 offshore banking clients.
Assange said WikiLeaks would treat the information provided by Elmer like "all other information" the website received, which would include public revelations. However, he said, before any of the material is released, "it could be weeks. It could be longer."
Assange indicated WikiLeaks and possibly media organizations would review Elmer's material before making it public. He said this would take at least "a couple of weeks."
Two sources familiar with the material said it was dense and not self-explanatory. One of the sources said the material contained a handful of names that might be recognizable.
Even in cases where names seemed familiar, the source said, there is no way to be sure from the material supplied to WikiLeaks of the identities of account holders and further investigation would have to be done to confirm the account holders' identity.
Jack Blum, a former Congressional investigator and Washington lawyer who has been advising Elmer, said Elmer would not be releasing any names or corporate names from the data cache because the account data outlined financial "structures" which are "difficult to figure out what is going on."
Blum also cautioned that even if account holders' identities can be confirmed, this does not constitute evidence that such people are engaged in offshore tax evasion.
Blum said government investigators would be in the best position to confirm the identities of people involved in transactions documented by Elmer's material.
Sources close to Elmer said some, if not most, of the material in his cache had been made available to government investigators in countries whose identities remain unknown.
Assange said WikiLeaks might hand over some of the material to Britain's Serious Fraud Office.
Elmer, who was fired by Julius Baer in 2002, is due to go on trial inSwitzerland on Wednesday for breaching bank secrecy. The bank has accused Elmer of pursuing a vendetta against the company.
Elmer and his lawyer maintain the Swiss prosecution is unfair because the material he allegedly leaked -- including some material on alleged offshore tax evasion abuses published by WikiLeaks -- originated in the Cayman Islands, where Swiss authorities arguably lack jurisdiction.
(Editing by Janet Lawrence)

என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!




என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்! தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!
 காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
2008&ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர்.
ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. 
ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர்.
போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். 
அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார்.
இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது.
இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார்.
அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது.
1993&லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது.
1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560.
2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது.
3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320.
5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502.
6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998.
7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224.
8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது.
9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.
இத்தனை அரிய பட்டியலை  வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்.
டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை.
போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது.
16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும்.
போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது.
 குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?) 
அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.
உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம்.
மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர்.
காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம்  பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர்.
இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன.
கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில்
1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும்,
2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும்
3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும்
4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும்
4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும்
5. பீகாரில் 14 முஸ்லிம்களும்
5. டெல்லியில் 11 முஸ்லிம்களும்
6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது.
குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும்.
அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது.
51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று.
-அபூஸாலிஹ்

www.tmmk.info
http://kilakaraitmm k.blogspot. com