14th September 2015 Makkah Fajr Sheikh Humaid

திப்புசுல்தானாக ரஜினி நடிக்கக் கூடாது: இந்து முன்னணியின் பிணம்தின்னி அரசியல்


Thanks Ippodhu.com
Source:http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8/
சந்தர்ப்பங்களை உருவாக்கியேனும் மதவெறியை முன்வைக்கும் அமைப்பு இந்து முன்னணி. திப்புசுல்தானாக ரஜினி நடிக்க வேண்டும் என்று கன்னடப்பட தயாரிப்பாளர் அசோக் கெனி விடுத்த அழைப்பு, வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்து முன்னணிக்கு கிடைத்த அவல். திப்புசுல்தானை இந்து விரோதியாக்கி மதவெறியை மென்று துப்பியிருக்கிறது, இந்து முன்னணியின் தலைமை.
இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம.கோபாலன் இது குறித்து துவேஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“திப்புசுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும்.
தமிழர்களை துரத்தியடித்த திப்புசுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப் படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர்.
எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாம் வாழும் காலத்தில், மும்பையில் தமிழர்களை அடித்துத் துரத்திய சிவசேனாவையும், பால்தாக்கரேயையும் விமர்சிக்க இந்து முன்னணி அமைப்பாளருக்கு அன்று வாயோ, வார்த்தைகளோ இருக்கவில்லை. சாதியின் பெயரால் தினந்தோறும் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். அந்த இந்துக்களுக்காக பேச இந்து முன்னணிக்கு நாவில்லை.
ஆனால், சரித்திரத்தை திரித்து இவர்கள் கூறும் புரட்டு கதைகளை நம்பி, திப்புசுல்தான் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது. நடித்தால் அது தமிழையும், தமிழரையும் அவமதிக்கும் செயல் (ரஜினி இந்தப் படத்தில் இந்து முன்னணி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்).
நிகழ்காலத்தில் நடக்கும் சமூக கொடுமைகளுக்கு கள்ள மவுனம் இருந்துவிட்டு, இறந்தகாலத்தை தோண்டியெடுத்து மதவெறி அரசியல் செய்யப் பார்க்கிறது இந்து முன்னணி.
இந்த தேசவிரோத செயலை கண்டிப்பதும், புறக்கணிப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.