நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் .


நீங்கள் உங்கள் குழந்தைகளுடன்
இப்பொழுதெல்லாம் நகரங்களில் பெரும்பாலும் குடியிருப்புகள் அபார்ட்மென்ட்ஸ் எனப்படும் அடுக்கு மாடிகளிலேதான் அமைகின்றன. அதில் வாழும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பது இல்லை. இதற்கு பாதுகாப்பு மற்றும் சில சூழ்நிலைகள் காரணங்களாகின்றன. அந்த குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை இருக்கலாம். மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் சரியான பழக்கம் இல்லாத காரணத்தினால் மற்றவர்களின் குழந்தைகளோடு விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.இத்தகைய சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகள் சரியான காற்றோற்றம் மற்றும் சூரிய வெளிச்சம் தங்களின் உடலில் படாமல் சிலவித உடல் கோளாறுகளினால் பாதிக்கப் படுகிறார்கள். போதிய சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் படாததால் வைட்டமின் - டி குறைவு ஏற்படுகிறது. இதனால் அபார்ட்மென்ட்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு வகையான நோயால் பாதிக்கப் படுகிறார்கள். இந்நோய் முடி வளர்ச்சி, தோல் குறைபாடு மற்றும் சில பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோர்கள் கூட நகரங்களில் அதிகாலையிலேயே அலுவலம் சென்று, உணவு, குடிநீர் மற்றும் அனைத்து தேவைகளையும் தங்கள் அலுவலகங்களிலேயே முடித்து கொண்டு இரவு வீடு திரும்புகிறார்கள். இதில் எங்கே அவர்களுக்கு போதிய வைட்டமின் - டி, சூரிய ஒளியினால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது? நமது உடலுக்கு தேவையான வைட்டமின் - டி, இலவசமாகவும், பெருமளவும் கிடைக்கக் கூடிய ஒரே ஆதாரம் சூரிய ஒளி மட்டுமே.எனவே பெற்றோர்களே! தினமும் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வெளியே சென்று சூரிய ஒளியினால் கிடைக்கும் மகத்தான வைட்டமின் - டி யை பெற தவறாதீர்கள். எவ்வளவுக்கெவளவு நாம் இயற்கையை விட்டு விலகுகிறோமோ அவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூடிய மட்டும் இயற்கையோடு ஒத்து வாழ்ந்து நலமுடன் வாழ முயற்சிப்போம்.

Thanks to...
இப்னு ஹாஷிம்.

No comments:

Post a Comment