இந்திய இரயில்வே பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய உதவும் இணையதளங்கள்

திருவிழாக்கால இரயில் பயணசீட்டுகளை http://irctc. co.in இணையதளம் தவிர்த்து மற்ற இணையதளங்கள் வழியாக முன்பதிவு செய்வது எப்படி?

சென்னையிலும், பெங்களூரிலும் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் திருவிழா காலங்களில் பயணம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பயணசீட்டுகளை முன்பதிவு செய்தாலும் பெரும்பாலும் காத்திருப்போர் பட்டியலில் தான் பயணசீட்டு கிடைக்கிறது.அனைத்து பயணசீட்டுகளும் ஐந்தே நிமிடங்களில் காலியாகிவிடுகின்றன.

இணைய இணைப்பு இல்லாதோர், முன்பதிவு மையங்களுக்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பே சென்று வரிசையில் நின்று கால்கடுக்க காத்திருக்க நேரிடுகிறது.

இணைய இணைப்பு உள்ளோர், http://irctc. co.in இணையதளத்திற்கு சென்றால், Bad Request அல்லது The server is currently busy போன்ற பிழை செய்திகள் வருகின்றன.

அத்தகைய நேரங்களில் பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட இணைய தளங்கள் உங்களுக்கு கைகொடுக்கலாம். முயற்சித்து பாருங்கள். பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய இந்த தளங்களில் உங்களுக்கு ஒரு Login Account உருவாக்கிக் கொள்ளுங்கள்.

http://www.cleartri p.com/trains
http://www.thomasco ok.in/indus/ indianRail/ indus/IRHome. do
http://www.yatra. com/trains. html
http://www.makemytr ip.com/railways/
http://www.ezeego1. co.in/rails/ index.php

GPRS வசதி உள்ள செல்பேசிகளிலிருந்து பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய ngpay என்ற அப்ளிகேசனை, தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

http://www.ngpay. com
http://www.ngpay. com/site/ howitworks. html

ngpay இணைய தளத்திற்கு சென்று உங்கள் செல்பேசி எண்ணை கொடுத்தால் தரவிறக்கம் செய்யும் வழிமுறைகள் உங்கள் செல்பேசிக்கு குறுந்தகவல் வாயிலாக அனுப்பப்படும்.

No comments:

Post a Comment