Exercise


As Received  From  Brother Jamal Mohammed

உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்


உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று சமீபகலாமாக எனது உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம்சாப்பாட்டைக்குறை உடற்பயிற்சி செய்மட்டன் சாப்பிடுவதை விட என ஏகப்பட்ட அறிவுரைசரி உடற்பயிற்சி ஒரு 2 வருடங்களுக்கு முன்னால் செய்ததுதிருமணத்திற்கு அப்புறம் விட்டு விட்டேன் உடற்பயிற்சி செய்ய கொஞ்சம் அறிவுரை தேவை என நண்பர்களிடம் விசாரித்தபோது டாக்டர் முரளி அவர்கள்எழுதிய அற்புதமான இக்கட்டுரையை என் நண்பன் தனபால் எனக்கு பரிந்துறை செய்தார்எனக்கு மிகவும் உபயோகமான இத்தகவலை உங்களுக்கும்பகிர்கிறேன்.

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாததுஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறானஅறிவுரையாலும்கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறதுமேலும்நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள்"பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்என்றும்மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டுகிடைக்கும்என்று கூறுகின்றனஇந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும்தவறான கருத்துக்களைநீக்கிதெளிவு பெற்றுநோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும். 
கருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்குபயிற்சி கொடுக்க வேண்டும்.
இது ஒரு தவறான கருத்துநம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோஅந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சிகொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம்ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால்நாம் பயிற்சிகொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லைஇப்படிச் செய்வதற்கு பதில்நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும்கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்துதொந்தி குறையும்.
கருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.
இதுவும் தவறான கருத்துஎப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோஅதுபோல மிதமான உடற்பயிற்சியும்நமக்கு தினசரி தேவை.ஏனென்றால்உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ளமுடியும்ஆகவே நமது தசைகளும்அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்தசுவாசசெரிமான உறுப்புகளும் உறுதியாகவும்நல்ல நிலையில் இயங்ககுறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
கருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதுவும் ஒரு தவறான கருத்துவியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும்அது நமதுஎடையைக் குறைக்க உதவாதுவேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின்அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும்இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக்கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
உண்மைநடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறதுஇதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்)கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.
    நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோநின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால்நமது கால்களில் உள்ள இரத்தக்குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லைஇதனால் இரத்த ஓட்டம் உடலின்எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லைநடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கிஅருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்திஇரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றனஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்தஉடற்பயிற்சி ஆகும். 
கருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம்இதனால் நமது உடல் எடைவிரைவாகக் குறைகிறது.
மிகத் தவறான கருத்துநாம் ஒடினாலும்நடந்தாலும்நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவுசெய்கிறோம்இங்கு வேகம் ஒரு பொருட்டல்லஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போதுஅதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம்கடக்கிறோம்தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும்எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றனஎனவே அவரவர் வயது மற்றும் உடல்திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.
கருத்து:6 தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும்சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும்வளைந்து கொடுக்கும்தன்மையும் கிடைக்கும்.
இதுவும் தவறான கருத்துஇம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும்உதாரணமாக குனிந்து நிமிர்வதுஇடுப்பு தசைகளைமுறுக்கும் (Twisting) பயிற்சிகள்மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில்இறுக்கம் ஏற்பட்டு வலியும்தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாகஆனால் திரும்பதிரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும்பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.
கருத்து:7 நமது சுவாசமும்இதயத் துடிப்பும்உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.
சரியான கருத்துஉடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும்சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சிகொடுத்து விட்டோம் என்று பொருள்அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன்அடுத்த நாள் களைப்பையும்சோர்வையும்உண்டாக்கிவிடும்ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும்குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.
கருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம்செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின்இயக்கம்முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளனநாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400தசைகளுக்கும் நீட்டவும்மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும்இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது.குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
     வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பதுநாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம்உடல் தகுதி முதலியவை (Physical Fitnes)எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும்சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம்ஆனால் ஒன்று நிச்சயம்.எவராக இருப்பினும்நாளைநாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும்தவறாமலும்ஒழுங்காகவும் செய்து வந்தால்வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும்முழு உடல் தகுதியுடனும்ஆரோக்யமாக வாழலாம்.

நன்றி டாக்டர் முரளி M.D.S.

No comments:

Post a Comment