ஏனிந்த இழி நிலைமை ?



(பீ. எம். கமால், கடையநல்லூர்)


புத்தகங்கள் ஏந்தி
புத்தொளியைத் தந்தவனின்
தத்துவங்கள் செத்து
தரையில் விழுந்ததேனோ ?


கப்பரைகள் கைகளிலே
கவனமெல்லாம் பொய்களிலே
அக்கறையே இல்லாமல்
ஆனதுவும் தான்யேனோ ?


புதையலுக்கு மேலமர்ந்து
போவோரிடம் எல்லாம்
கைநீட்டி பிச்சை
கேட்பதுவும்தான் ஏனோ ?


முத்துக் களைவீசி
மூலையிலே எறிந்துவிட்டு
கிளிஞ்சல் களைப் பொறுக்க
கீழிறங்குவ தும்ஏனோ ?


அள்ளக் குறை யாதநல்ல
அறிவமுதம் நம்மிடத்தில்
தெள்ளிய நீரோடைபோல்
தெரிந்தும் நாம் தெருவோரம் !


மருத்துவத்தின் மகத்துவத்தை
மன்பதைக்கு தந்தவர்கள்
நோயாளிப் படுக்கையிலே
நொம்பலப் படுகின்றோம் !


ஏனிந்த இழிநிலைமை ?
எண்ணிட நாம் வேண்டாமா ?
எப்போது நமை உணர்ந்து
எழுந்து நிற்கப் போகின்றோம் ?

No comments:

Post a Comment