மும்பை பங்கு சந்தையில் ஷரியாக்கு மாறில்லாத 50 நிறுவனங்களின் சுட்டெண் அறிமுகம்!


செய்தி: காயல்பட்டணம்.காம்
This page has been viewed 129 times | View Comments (0) <> Post Your Comment

மும்பை பங்கு சந்தையில் ஷரியாக்கு மாறில்லாத 50 நிறுவனங்களின் சுட்டெண் (Stock Index) திங்களன்று (டிசம்பர் 27) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 50 பங்குகள், மும்பை பங்கு சந்தையின் முக்கிய சுட்டெண் (Stock Index) - BSE 500 க்குள் உள்ளடங்கியவை. 50 நிறுவனங்களின் விபரம் இங்கே.

BSE TASIS Shariah 50 என பெயரிடப்பட்டுள்ள இச்சுட்டெண் - Taqwaa Advisory and Shariah Investment Solutions (TASIS) என்ற நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் சாராயம், புகை, ஆயுதங்கள் போன்ற தொழில்களில் ஈடுபடாதவை.

இவ்வறிமுகம் குறித்து பேட்டி அளித்த மும்பை பங்கு சந்தை நிர்வாக இயக்குனர் மது கண்ணன் - இது இந்தியாவில் உள்ள 16 கோடி முஸ்லிம்கள் பங்கு சந்தையில் பங்கு பெற வழிவகுக்கும் எனவும், முஸ்லிம்கள் தவிர சாராயம், புகை, ஆயுதங்கள் போன்ற விஷயங்களில் விருப்பம் இல்லாதவர்களும் பங்கு சந்தையில் பங்குபெற வழிவகுக்கும் எனவும் கூறினார். இதன் தொடர்ச்சியாக, இதனை அடிப்படையாக கொண்டு, Mutual Fund போன்றவை தனியார் நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

TASIS நிறுவனம் 50 நிறுவனங்களையும் கண்காணிக்கும் என்றும், ஷரியா விதிகளை மீறும் நிறுவனங்கள் மாதம் ஒரு ஒருமுறை ஆய்வில் நீக்கப்படும் என்றும், புதிதாக நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷரியா 50 சுட்டெண் மற்றும் BSE 500 சுட்டெண் - இரண்டும் கடந்த இரு ஆண்டுகளில் எவ்வாறு செயல்புரிந்தன என ஒப்பிடும் போது ஷரியா 50 நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என காணமுடிகிறது.

No comments:

Post a Comment