இந்திய கடற்படையில் மாலுமியாகப் பணிபுரிய வாய்ப்பு



 
First Published : 14 Dec 2010 05:49:05 PM IST

Last Updated :

இந்தியக் கடற்படையில் ஆகஸ்ட் 2011-ல் தொடங்கும் மாலுமிகள் பயிற்சிக்காக திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
விண்ணப்பதார் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்
 
கல்வித் தகுதி: கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களை கட்டாயமாகவும் வேதியியல், உயிரியல், கணிப்பொறியியல் ஆகிய பாடங்களில் ஒன்றையும் எடுத்து பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் மேற்கூறிய பாடங்களில் சராசரியாக 55% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
வயது: 01.08.1991க்கும் 31.07.1994-க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்
 
ஊதியம்: பயிற்சியின்போது மாதம் ரூ.5700. பணியில் சேர்ந்த பிறகு ரூ.5200 - 20200 + இதர படிகள்.
 
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் தகுதிகள் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், அறிவியல், பொது அறிவு, கணிதப் பாடங்களில் கொள்குறி வகையில் கேள்விகள் இடம்பெறும்.
 
தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, அரக்கோணம், கொச்சி
 
விண்ணப்பிக்கும் முறை: www.nausena-bharti.nic.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழை காணும் இணைப்பை கிளிக் செய்யவும் விண்ணப்பப்படிவம்
 
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 15.01.2011-ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
 
POST BOX NO. 476 GOL DAK KHANA,
GPO, NEW DELHI - 110 001.
 
கூடுதல் தகவல்கள்
விண்ணப்பப்படிவம்

News source: Dinamani 14.12.2010
__._,_.___

No comments:

Post a Comment