தாய்



(பி. எம். கமால்கடையநல்லூர்)
நற்றாய் ! எனைப் பெற்றாய் ! மிக
              நலமுடனே வளர்த்தாய் !
முற்றாய் உனைத் துறந்தாய் ! என்
               முழு வாழ்விலு மிணைந்தாய் !
பற்றாய் நீ இருந்தாய் நான்
                பயந்தாலும்  அணைத்தாய் !
இர்றாய்  நீ     எனக்காக
                 எல்லாமே இழந்தாய் !
சினந்தால் நீ சிரித்தாய் என்
                  சிறு பிழையும் பொறுத்தாய் !
மனதாலே உயர்ந்தாய் என்
                   மனதில் நீ நிறைந்தாய் !
உழைத்தாய் உன் திருமேனி
                    ஓடாகித் தேய்ந்தாய் !
களைத்தாய் நீ எனக்காக
                     கண்ணீரில் நனைந்தாய் !
விரைந்தாய் நான் நோயென்று
                       விழுந்தால் நீ பயந்தாய் !
கரைந்தாய் சந் தனமாய் நீ
                        கடிதாக மணந்தாய் !

No comments:

Post a Comment