Beware!!!

காரைக்குடி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 35). பில்டிங் கான்டிராக்டரான இவர் சமீபத்தில் தெலுங்கு மொழி டி.வி.யில் வந்த விளம்பரத்தைப்பார்த்தார். அதில் அதிநவீன வசதிகளுடன் கூடிய செல்போன் பற்றி கவர்ச்சிக்கரமான விளம்பரம் ஒளிப்பரப்பானது. 

இதைப்பார்த்த சிவராஜ் அந்த செல்போனை வாங்க விரும்பி தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார். இந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசும் சிவராஜ் 20 நிமிடங்களுக்கு மேலாக அப்பெண்ணிடம் பேசி, தனக்கு அந்த செல்போனை அனுப்புமாறு ஆர்டர் செய்தார். 

மறுநாள் டெல்லி நிறுவனத்தில் இருந்து சிவராஜிற்கு செல்போன் மெசேஜ் வந்தது. அதில் அவர் கேட்ட செல்போன், ஆர்டர் நம்பர் உள்பட சில விவரங்கள் இருந்தது. ரூ.3ஆயிரத்து 40 ஐ கட்டி காரைக்குடி தபால் அலுவலகத்தில் பார்சலை எடுத்துக்கொள்ளுமாறும் அதில் கூறப்பட்டிருந்தது மேலும் இந்த செய்தியை அனுப்பியது அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்சியூட்டிவ் என்றிருந்தது.

பின்னர் தான் வைத்திருந்த பணம் போதவில்லை என்பதால் தனது மனைவியிடம் கூடுதலாக பணம்பெற்றுக்கொண்டு தபால் அலுவலகம் வந்து தனக்கு வந்த பார்சல் பற்றி கேட்டார். அங்கிருந்த ஊழியர் பார்சலை காண்பிக்க அது பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக ஏராளமான கம்ப்யூட்டர் குறியீடுகளோடு இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த சிவராஜ் ரூ.3ஆயிரத்து 40ஐ தபால் ஆபீஸ் கவுண்டரில் செலுத்தி பார்சலை பெற்றுக் கொண்டார். உடனே ஆவல் மிகுதியால் பார்சலை அங்கேயே பிரித்து பார்த்தார், அதில் பழைய பேப்பர்களை சுற்றி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். உடனே இதுகுறித்து ஏற்கனவே பேசிய டெல்லி கம்பெனியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண்ணில் பேசிய நபர் இது கூரியர் நிறுவனம் என்றும், செல்போன் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி லைனை கட் செய்துவிட்டார். 
  
மீண்டும் தபால் அலுவலகம் சென்ற சிவராஜ் நடந்த மோசடி குறித்து தெரிவித்து பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தர தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டவுடன் கவலையுடன் திரும்பினார். பின்னர் வேறு ஒரு எண்ணில் இருந்து டெல்லி எண்ணை தொடர்பு கொண்ட போது வழக்கம் போல் ஒரு பெண் செல்போன் பற்றி கவர்ச்சிக்கரமாக பேச ஆரம்பித்தார். சிவராஜ் விஷயத்தை சொன்னவுடன் அந்த பெண் உடனே தொடர்பை துண்டித்து விட்டாராம். ‘என்னை கதை சொல்ல சொன்னா... என்ன கதை சொல்லுறது...‘ என்று சோகத்துடன் திரும்பினார். [தினத்தந்தி] 
  
இதுபோன்று உங்களுடைய மொபைல் நம்பர் லக்கி நம்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை பரிசை வென்றுள்ளது; மேலதிக விபரங்களுக்கு இந்த மெயில் ஐ.டி. யை தொடர்பு  கொள்க. என்று நமது மொபைல்களுக்கு சில நேரத்தில் sms  வரும். குறிப்பிட்ட மெயில் ஐ.டி.யை தொடர்பு கொண்டவர்கள் கதை அம்பேல்தான். 
  
 இதே போன்று உங்களுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக கிடைத்துள்ளது என்றும் sms வரும். தொடர்பு கொண்டால் பட்டை நாமம்தான்.  மேலும், உங்கள் நிலத்தை எங்கள் செல்போன் டவர் அமைக்க வாடைக்கு தாருங்கள் என்று அப்பாவி நில உரிமையாளர்களிடம்  பேசும் சில போலி 'டிப்டாப்' ஆசாமிகள், உங்கள் நிலத்தின் பட்டா காப்பியையும், ஒப்பந்த செலவிற்காக ஐயாயிரம் ரூபாயும் கொடுங்கள் என்று வாங்கிக்கொண்டு கம்பி நீட்டுகின்ற  செய்திகளும்  உண்டு.  
  
இவ்வாறாக  மோசடிகளின் வகைகள் பற்றிய  பட்டியல் ஏராளம்  உண்டு என்றாலும், இத்தகைய மோசடிகள்  எல்லாம் அறிமுகமற்றவர்களால் நடத்தப்படுவதாகும். ஆனால், உலக மக்களுக்கு அறிமுகமான ஒருவர், தன்னைப் போன்றே உலக மக்களுக்கு அறிமுகமான மற்றொருவரின் அமைப்பை தனது குடும்ப உறுப்பினர்கள்- உறவினர்கள் மூலமே துணிந்து செய்த மோசடிக்கு முன் ''இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல'' என்கிறார்கள் 'மோசடியை' வெறுக்கும் நடுநிலையாளர்கள்.

No comments:

Post a Comment