Showing posts with label Exercise. Show all posts
Showing posts with label Exercise. Show all posts

நடைப்பயிற்சி அவசியம் ஏன்?


நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.

கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.

ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.

இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.

எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.
நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.

நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.

பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு
"ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன. 

பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை.

மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.
75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.

நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.
நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.
நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர்.

பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்.
Thanks
Ahamed Imam

Exercise


As Received  From  Brother Jamal Mohammed

உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்


உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று சமீபகலாமாக எனது உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம்சாப்பாட்டைக்குறை உடற்பயிற்சி செய், மட்டன் சாப்பிடுவதை விட என ஏகப்பட்ட அறிவுரை. சரி உடற்பயிற்சி ஒரு 2 வருடங்களுக்கு முன்னால் செய்ததுதிருமணத்திற்கு அப்புறம் விட்டு விட்டேன் உடற்பயிற்சி செய்ய கொஞ்சம் அறிவுரை தேவை என நண்பர்களிடம் விசாரித்தபோது டாக்டர் முரளி அவர்கள்எழுதிய அற்புதமான இக்கட்டுரையை என் நண்பன் தனபால் எனக்கு பரிந்துறை செய்தார். எனக்கு மிகவும் உபயோகமான இத்தகவலை உங்களுக்கும்பகிர்கிறேன்.

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறானஅறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள்"பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டுகிடைக்கும்" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களைநீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும். 
கருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.
இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சிகொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சிகொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும்கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்துதொந்தி குறையும்.
கருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.
இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை.ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ளமுடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்ககுறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
கருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமதுஎடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின்அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக்கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
உண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்)கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.
    நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக்குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின்எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்திஇரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்தஉடற்பயிற்சி ஆகும். 
கருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடைவிரைவாகக் குறைகிறது.
மிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவுசெய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம்கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல்திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.
கருத்து:6 தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும்தன்மையும் கிடைக்கும்.
இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளைமுறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில்இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாகஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.
கருத்து:7 நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.
சரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சிகொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும்உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.
கருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின்இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது.குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
     வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes)எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம்.எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால்வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

நன்றி டாக்டர் முரளி M.D.S.