ஜிஹாத் - Jihad




ஜிஹாத் என்றாலே பலரும் தீவிரவாதம் என்றும், நாச வேலைகளில் ஈடுபடுவதும் என்றும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அது தவறு.

ஜிஹாத் 
என்பது மற்றவர் மீது அன்பு செலுத்துதல், எவ்வளவு கடினமாக இருப்பினும் உண்மைக்காக அயராது உழைத்தல், எக்காரணம் கொண்டும், எந்த தருணத்திலும்

பொய் கூறாமல் இருப்பது.
 உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா? உணர்ச்சி, செயல்பாடு, வாய்மை, உழைப்பு என அனைத்து வகையிலும் உண்மைக்காக போராடுவது. இஸ்லாமிய இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது, கடினமான வேளைகளிலும் மனத்தை பொறுமையாக வைத்துக் கொள்வது போன்றவை தான் உண்மையான ஜிஹாத்....


இன்முகம் காட்டுதல் 
கடுமையான, துயரமான நேரங்களில் கூட இன்முகம் காட்டி பழகுதல் தான் ஜிஹாத்தின் உண்மை பொருள். உண்மைக்காக போராடுவது, அன்பு செலுத்துவது, தீயது செய்தாலும் அவரை மறந்து மன்னிப்பது.

அயராத உழைப்பு 

எதுவாக இருப்பினும் அது உண்மை எனின், நல்லதை விளைவிக்கும் எனின் அதற்காக அயராது உழைப்பது தான் ஜிஹாத். தொடர்ந்து அந்த உண்மையை
நிலைநிறுத்த போராட ஜிஹாத் ஒருவருக்கு தேவைப்படுகிறது.

மீண்டு வருதல் 

ஒருவர் தனது வலுவின்மையில் இருந்து மீண்டு வருதல், தனது கடமையை செய்ய முயற்சித்து எழுவது போன்றவை தான் ஜிஹாத்தின் உண்மை பொருள்.


வாய்மை
 உண்மையை பேசுதல், உண்மையை மட்டுமே மற்றவரிடம் பரப்புதல். எந்த தருணத்திலும், எந்த காரணத்திற்காகவும் பொய் புகழாது இருப்பது.

 செயல்
 நல்ல காரியங்கள் மட்டுமே செய்தல், அநீதியை எதிர்த்து போராடுதல் எதிர்மறை செயல்களை தடுத்தல் போன்றவை தான் ஜிஹாத்தின் செயல்கள்.

 மனதை அடக்குதல் 

பேராசை, தீங்கு விளைவிப்பது போன்ற தீய எண்ணங்களின் வழியில் மனது பயணிக்கும் போது / பயணிக்க விரும்பும் போது அந்த உணர்வுகளை கட்டுப்படுத்துதல், அதைவிட்டு வெளிவருதல்.

நல்வழியில் ஈடுபடுதல் 

மனத்தின் தீய எண்ணங்களை எதிர்ப்பது மட்டுமின்றி, மனதை நல்வழியில் ஈடுபட வைப்பதும் கூட ஜிஹாத் தான்.


பொறுமை

 இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது. இஸ்லாமியக் கடமைகளைச் செய்வது, இறை நெறியின்பால் அழைக்கும் பணியில் மனத்தைப் பொறுமையுடன் ஈடுபடுத்துவது போன்றவையும் ஜிஹாத் தான்.

Source Thanks: Tamil.oneindia.com

http://tamil.boldsky.com/insync/pulse/2015/what-does-jihad-mean-islam-009670.html