இதுதான் கடைசியாய் இவரிடம் கற்ற பாடம்...



மக்களால் நான்..
மக்களுக்காகவே நான்..

சந்தனப் பேழையில் உடல் வைத்து மூடியபிறகு தந்தி டிவியில் திரையில் வந்த இந்தக் குரல் இதயத்தைப் பிழிந்தது என்றால் மிகையல்ல.
எதையுமே திட்டமிட்டு உறுதியோடு வெற்றி பெற்றே வந்த இவர் தோற்றது இந்த ஒன்றில்தான்.

எனக்கென்று யாருமில்லை என மேடைகளில் அவர் முழங்கியதை பொய்யென்று நிரூபித்திருக்கிறது இன்றைய தமிழகம்.
எதிர்க் கட்சிகளில் கூட தன்னை நேசிப்பவர்கள் அதிகம் என்று தெரிந்து கொள்ளாமலேயே போய்விட்டார்.

தன் இறப்பினில் கூட ஒரு மிகப்பெரிய உண்மையை விட்டுச் சென்றிருக்கிறார் நமக்காக.
என்ன தெரியுமா அது...?

எவ்வளவு பணமிருந்தாலும்,
எத்துணை பெரிய பதவியில் இருந்தாலும்...

பிள்ளைகளே.. பெற்றோர்களே.. மருமகள்களே.. மாமியார்களே.. அண்ணன் தம்பிகளே.. அக்கா தங்கைகளே.. அத்தை மாமாக்களே.. சித்தி சித்தப்பாக்களே.. தம்பி தங்கைகளே.. இன்னும் மீதமிருக்கும் அனைத்து உறவுகளே...
ஓடுங்கள்.. ஏதாவதொரு காரணத்தால் பிரிந்திருக்கும் உங்கள் இரத்த  உறவுகளை நோக்கி ஓடுங்கள். இருக்கும் காலத்திற்குள் பகையழித்து இணைந்து வாழுங்கள். உறவின் வலிமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏனென்றால்.. தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று வாழ்ந்து காட்டிய இவராலேயே.. உறவுகள் உடனில்லாத காரணத்தால் தனது கடைசி 75 நாட்களை என்னவென்று கூட அறிய முடியவில்லை.

உண்மையான அன்பின் கண்ணீர் ஒரு சொட்டுக் கூட இவர் உடலின் மேல் விழவில்லை. தரையில்தான் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.
உங்களுக்கும் இந்நிலை வேண்டாம். உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உயிர் காக்க மட்டுமல்ல.. உயிர் உணர்த்தவும் இரத்த உறவுகள் தேவை.

இதுதான் கடைசியாய் இவரிடம் கற்ற பாடம்.

#அம்மா..

தோட்டம்: மாடி தோட்டம் – DO IT YOURSELF KIT மற்றும் பயிற்சி ...

தோட்டம்: மாடி தோட்டம் – DO IT YOURSELF KIT மற்றும் பயிற்சி ...: சென்னை மற்றும் கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். போன பதிவில் மாடி தோட்டம் பற்றி பார்த்தோம். ஒரு சிறிய மாடி தோட்டம் அமைக்க (இருபது Grow Ba...

தோட்டம்: மாடித் தோட்டம் – முதல் முயற்சி

தோட்டம்: மாடித் தோட்டம் – முதல் முயற்சி: 2014- ல் சில புதிய முயற்சிகளை திட்டமிட்டிருக்கிறேன். அதில் முதலாவதாக, மாடி தோட்டம். போன வருடம் மாடியில் கொடி வகைகள் வளர்ப்பதர்க்கு ஒரு பந...

சுனாமி,(நாடா)புயல்,பூகம்பம் ஏன் இறைவா?


பாவமன்னிப்பின் பக்கம் விரையுங்கள் - RUSH TOWARDS THE FORGIVENESS


நாம் என்ன செய்ய வேண்டும்? - What we have to do?

நாம் என்ன செய்ய வேண்டும்? - What we have to do?



Mohamed Ameeruddeen A - YOUTUBE



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ! அல்ஹம்துலில்லாஹ் !
அல்லாஹ் சுபஹானுத்தாலாஹ் நமக்கும் ஒரு "YOUTUBE" சேனல் திறக்க அருள் செய்திருக்கிறான் !
இன்ஷா அல்லாஹ் , இனிமேல் YOUTUBE லேயும் பாருங்க !
By
Mohamed Ameeruddeen A