Train Number - ரயில்களுக்கு எவ்வாறு எண்கள் வழங்கப்படுகின்றன?


Thanks: kayalpatnam.com

இந்திய ரயில்வே இயக்கும் அனைத்து ரயில் வண்டிகளுக்கும் பொதுவாக 5 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு இலக்கமும் சில தகுதிகள் / விதிகள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

முதல் இலக்கம்

முதல் இலக்கம் - 0 என்றால் அது பொதுவாக சிறப்பு ரயில்களை (கோடைக்கால சிறப்பு ரயில்கள், விடுமுறை ரயில்கள் போன்றவை) குறிக்கும்

முதல் இலக்கம் - 1 என்றால் அது பொதுவாக சதாப்தி, துராண்டோ, ராஜதானி உட்பட அனைத்து தொலைதூர ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 2 என்றால் அதுவும் பொதுவாக சதாப்தி, துராண்டோ, ராஜதானி உட்பட அனைத்து தொலைதூர ரயில்களை குறிக்கும். 1 வரிசை நிறைவுபெற்றுவிட்டால் 2 வரிசை பயன்படுத்தப்படும்

முதல் இலக்கம் - 3 என்றால் கொல்கத்தா நகருக்குள் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 4 என்றால் சென்னை, புது டெல்லி, சிக்கந்தராபாத் உட்பட பெரு நகரங்களில் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 5 என்றால் சாதாரண பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 6 என்றால் MEMU வகை ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 7 என்றால் DMU வகை ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 9 என்றால் மும்பை நகருக்குள் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும் 


இரண்டாம்/மூன்றாம் இலக்கம்

இரண்டாம் இலக்கம் 2 இல் துவங்கினால் அது பொதுவாக அதிவிரைவு வண்டி (Super Fast Express), சதாப்தி வண்டி , ஜன சதாப்தி வண்டி போன்ற வண்டிகளை குறிக்கும்.

20 - அனைத்து மண்டலங்கிலான சதாப்தி/ஜன சதாப்தி ரயில்களை குறிக்கும்

21 - Central Railway மற்றும் Western Central Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

22 - Northern Railway, North Central Railway, North West Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

23 - Eastern Railway மற்றும் Eastern Central Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

24 - Northern Railway, Northern Central Railway மற்றும் North Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

25 - North Eastern Railway மற்றும் North Frontier Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

26 - Southern Railway மற்றும் South Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

27 - South Central Railway மற்றும் South Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

28 - South Eastern Railway, South East Central Railway மற்றும் ECoR மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

29 - Western Railway, West Central Railway and North West Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும் 


இரண்டாம் இலக்கம் 2 தவிர, இதர எண்களில் (உதாரணமாக x1xxx, x3xxx) துவங்கினால் - அவ்வண்டி எண்களின் இரண்டாம் இலக்கம் - அவ்வண்டியின் இல்ல (home) மண்டலத்தையும் (Zone), மூன்றாம் இலக்கம் அவ்வண்டியின் இல்ல (home) கோட்டத்தையும் (Division) குறிக்கும்.

இரண்டாம் இலக்கம் 1 என்பது Central மற்றும் West-Central Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Mumbai CST/ Pune கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Jhansi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bhopal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Solapur/Jabalpu கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 3 என்பது Eastern மற்றும் East Central Railway மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Howrah கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Sealdah கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Danapur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Dhanbad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Malda கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Asansol கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 4 என்பது Northern, North Central மற்றும் North Western Railway மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் New Delhi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Allahabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Moradabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Ambala கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Firozpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Bikaner கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Jodhpur கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 5 என்பது North-Eastern மற்றும் North-east Frontier Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Varanasi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Sonepur/Samastipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Izzatnagar/Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Varanasi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Samastipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Lumding கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Katihar/Alipurduar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Lumding/Alipurduar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 9 என்பது இம்மண்டலத்தின் Tinsukia கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 6 என்பது Southern மற்றும் South-Western Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Chennai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Chennai Egmore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Mysore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Thiruvananthapuram கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Bangalore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Palghat கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Madurai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Trichy கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 7 என்பது South-Central மற்றும் South-Western Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Secunderabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Vijayawada கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Hubli கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Guntakal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Hyderabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Kacheguda கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Guntakal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Hubli கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 8 என்பது South-Eastern, South-East Central மற்றும் East-Coast Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Kharagpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Chakradharpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bilaspur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Sambalpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Khurda Road கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Waltair கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Adra கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 9 என்பது Western, North-Western மற்றும் West-Central Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Mumbai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Vadodara கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bhavnagar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Ratlam கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Kota கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Ajmer கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Jaipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Bhavnagar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 9 என்பது இம்மண்டலத்தின் Rajkot கோட்டத்தை குறிக்கும்

உதாரணமாக,

(1) 12433 சென்னை - டெல்லி ராஜதானி அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 24 - இது Northern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(2) 12621 சென்னை - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(3) 12840 சென்னை - ஹவ்ராஹ் அதிவிரைவு விரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 28 - இது South Eastern Railway / South Eastern Central Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(4) 12164 சென்னைஎழும்பூர் - மும்பை தாதர் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 21 - இது Central Railway / Western Central Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(5) 12007 சென்னை - பெங்களூர் சதாப்தி அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 20 - இது சதாப்தி வண்டி என்றும் தெரிவிக்கிறது

(6) 12631 சென்னை - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(7) 12693 சென்னை - தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(8) 16127 சென்னை - குருவாயூர் வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 61 - 1 இது தென்னக ரயில்வே மண்டலம், சென்னை எழும்பூர் கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(9) 16723 சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 67 - இது தென்னக ரயில்வே மண்டலம், மதுரை கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(10) 16853 சென்னை - டெல்லி ராஜதானி வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கங்கள் 68 - இது தென்னக ரயில்வே மண்டலம், திருச்சி கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(11) 56761 பாசன்ஜர் வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 5 இது பாசன்ஜர் வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கங்கள் 67 - இது தென்னக ரயில்வே மண்டலம், மதுரை கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

நன்றி:
Indian Railways Fan Club இணையதளம் (www.irfca.org) 

No comments:

Post a Comment