யுவன் சங்கர் ராஜா ஒரு வருடமாக இஸ்லாத்தை பின்பற்றுகிறாராமே!
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு ஆண்டு காலமாக இஸ்லாத்தை பின்பற்றுவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுவது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை பார்த்து இஸ்லாத்தை பின்பற்றுகிறாரோ என்று ஃபேஸ்புக், ட்விட்டரில் விவாதம் நடக்கிறது.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/yuvan-practises-islam-a-year-now-193274.html

ஒரு முஸ்லிம், அதற்காக பெருமைப்படுகிறேன், அல்ஹம்துலில்லாஹ்: யுவன்சங்கர் ராஜா
சென்னை: நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது யுவனே தனது டிவிட்டர் தகவலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த டிவிட்டர் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதேசமயம், தான் 3வதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் யுவன் மறுத்துள்ளார்
பிசியான இசையமைப்பாளர் கோடம்பாக்கத்தின் பிசியான இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அவர் தற்போது அஞ்சான் படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
மதம் மாறினாரா... இந்நிலையில் யுவன் முஸ்லிமாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது.
யுவன் சொல்வது என்ன...
இது குறித்து யுவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
குடும்பத்தினர் ஆதரவு
என் முடிவை எனது குடும்பத்தார் ஆதரிக்கின்றனர். எனக்கும் என் தந்தைக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
யுவன் சங்கரின் மாற்றத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு!
இரண்டு நாட்களாக ஊடகத் துறையில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றத்தைப் பற்றியே! இவர் ஒரு பவுத்தராகவோ அல்லது கிறித்தவராகவோ மாறியிருந்தால் இந்த அளவு எதிர்ப்புகளை சம்பாதித்திருக்க மாட்டார். ஆனால் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தது இந்துத்வாவாதிகளை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. தினமலரும் தனது பங்குக்கு இதை ஊதி பெரிதாக்க அந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டது. ஆனால் நினைத்ததற்கு மாற்றமாக இந்துக்களின் பிறபடுத்தப்பட்ட மக்களில் பெரும்பாலோர் அவரது மாற்றத்தை வரவேற்றுள்ளது தினமலருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வெண்டும்.
உடனே மறு செய்தியாக சில நண்பர்கள் மூலம் கிடைத்ததாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மலேசியாவில் ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறியுள்ளதாகவும், கொலு வைப்பது சம்பந்தமாக தந்தை இளையராஜாவோடு தகறாரு வந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொண்டது தின மலர்.
தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையான தினமலர் சம்பந்தப்பட்ட யுவனே வதந்திகள் என்று மறுத்தும் சில நண்பர்கள் கூறினார்கள் என்ற பெயரில் பொய்களை பிரசுரித்து தான் 'தினமலம்' தான் என்பதை நிரூபித்துள்ளது.
மேலும் படிக்க....
http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_11.html

இஸ்லாம் என்னை தேர்ந்தெடுத்துள்ளது : யுவன் சங்கர் ராஜா
சென்னை : பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும்
தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இளையராஜாவின் மகனும் பிரபல தமிழ் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்துக்கு மாறியதாக செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று டெக்கான் க்ரோனிக்கல் எனும் ஆங்கில பத்திரிகைக்கு யுவன் பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில் தான் கண்ட கனவுகள் மற்றும் தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிய போது அவை குர்ஆனில் கிடைத்ததாக கூறியுள்ள யுவன், தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக இஸ்லாத்தை ஆய்வு செய்தே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ஊடகங்களில் வெளியாவதை போல் இயக்குநர் அமீர் உள்ளிட்ட யாருக்கும் இதில் எவ்வித பங்குமில்லை என்று கூறிய யுவன் இஸ்லாம் தன்னை தேர்ந்தெடுத்துள்ளது என்றே தாம் உணர்வதாக கூறியுள்ளார்.
மேலும், தன் தந்தை இளையராஜா முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பின் முழு மனதுடன் தன் மத மாற்றத்தை ஏற்று கொண்டதாகவும் தன் வீட்டில் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் எவ்வித பிரச்னையுமில்லை என்றும் கூறினார். தன் நண்பனின் திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தவறு என்றும் யுவன் கூறினார். ஏ. ஆர். ரஹ்மானின் வழியை பின்பற்றி தாம் இஸ்லாத்திற்கு வரவில்லை என்றும் தன் ஆன்மாவின் முடிவு என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.inneram.com/news/tamilnadu/5156-islam-chosen-me-yuvan-shankar-raja.html

No comments:
Post a Comment