இஸ்லாத்தைப் பயங்கரவாதத்தோடு ஒப்பிடுவது நியாயமற்றது, தவறானது என்று
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவின் தலைவர் போப் பிரான்சிஸ்
கூறியுள்ளார்; பிரான்சில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை பயங்கரவாதிகள் கொன்றதை
ஏன் போப் இஸ்லாத்துடன் இணைத்துப் பேசவில்லை என்று செய்தியாளர்கள்
கேட்டார்கள்; “இஸ்லாத்தை வன்முறையோடு தொடர்புபடுத்துவது சரியானதல்ல” என்று
போப் பதிலளித்தார்.
போலந்திற்கு புனிதப்பயணம் மேற்கொண்டுவிட்டு ரோமுக்குத் திரும்பிய
சிறப்பு விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் போப் பிரான்சிஸ்; ”எல்லா
மதங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள்; ஒரு வன்முறையை இஸ்லாமிய
வன்முறை என்று முத்திரை குத்தினால், இன்னொரு வன்முறையை கத்தோலிக்க வன்முறை
என்று முத்திரை குத்த வேண்டிவரும்; அவ்வாறு செய்வது நியாயமானதல்ல” என்றார்
போப்.
”மதங்கள் அமைதியைப் போதிக்கின்றன; சில மக்கள் குழுக்கள்தான் பணம்,
இயற்கை வளம் ஆகியவற்றுக்காக போரிடுகிறார்கள்; பொருளாதாரம், அரசியலோடு
தொடர்புள்ள இதனை மதத்தோடு தொடர்புபடுத்துவது தவறு” என்று சொன்னார்.
ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் பற்றிக் கேட்டபோது, ”அது வன்முறைக் குழுவாக இருக்கிறது; ஆனால் அது இஸ்லாம் அல்ல” என்றார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் ரோமில் பேசிய போப் பிரான்சிஸ், புனித
பைபிளிலுள்ள போதனைகளைப்போலவே புனித குர்ஆனின் போதனைகளும் உண்மையானவை என்று
விளக்கமளித்தார்.
Thanks.
Source: ippodhu.com August 16, 2016
No comments:
Post a Comment