Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Mobile numbers, addresses on Facebook 'a security risk


Sydney, Jan 17 (ANI): A security expert has warned that users should remove their home addresses and phone numbers from their Facebook accounts.
Graham Cluley said the website now gives third parties access to that information.
The website said in a blog post at the weekend that it would give developers of applications access to the contact information of users who install their apps.
"These permissions must be explicitly granted to your application by the user via our standard permissions dialogs. Please note that these permissions only provide access to a user's address and mobile phone number, not their friend's addresses or mobile phone numbers," the Sydney Morning Herald quoted Facebook's Jeff Bowen as saying.
However, Sophos security expert Cluley, has raised doubts over the move.
"You have to ask yourself - is Facebook putting the safety of its 500+ million users as a top priority with this move?" he said.
"It won't take long for scammers to take advantage of this new facility, to use for their own criminal ends."
Cluley advised that users should take personal info such as home addresses and mobile numbers off their pages.
"You can imagine, for instance, that bad guys could set up a rogue app that collects mobile phone numbers and then uses that information for the purposes of SMS spamming or sells on the data to cold-calling companies," he said. (ANI)

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...


நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களாஅப்படியாயின் இந்த 10விடயங்களும் உங்களுக்காக...

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களாஅப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...


பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.


இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தைஅல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.


'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதிதொலைபேசி இலக்கம்விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .

இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.


பிறந்த திகதியும் இடமும் :-

இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.


தாயின் கன்னிப் பெயர் :-

பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.


விலாசம் :-

நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களாஇது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.


விடுமுறைகள் :-

உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவதுஉங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.


வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-

இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள்,நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.


முறையற்ற படங்கள் :-

பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.


ஒப்புதல்கள் :-

இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.


தொலைபேசி இலக்கம் :-

உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.


பிள்ளைகளின் பெயர்கள் :-

இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.


பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.

Beware - Facebook

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

 ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க திருமண வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் 80 விழுக்காட்டினர், விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் புழங்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து வாங்கி கொடுப்பதாக தெரியவந்துள்ளது. 

அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விவரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து வாங்கிக் கொடுக்கிறார்களாம் 

எதிர்காலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை ஏற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் வில்லனாக உருவெடுத்துவிடுகிறதாம்! 

விவகாரத்து கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் கொட்டி வைத்துள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணமுடையவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது. 

இவ்வாறு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்களில் 66 விழுக்காட்டினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் கூறிவைத்துள்ளதையே காட்டுகின்றனராம்.

ஃபேஸ்புக்கை தொடர்ந்து 'மை ஸ்பேஸ்' தளம் 15 விழுக்காடும், 'ட்விட்டர்' தளம் 5 விழுக்காடும், இதர தளங்கள் 14 விழுக்காடும் வழக்கறிஞருக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம். 


அமெரிக்கா க்தை இதுவென்றால், பிரிட்டனிலோ 20 விழுக்காடு விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.

இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது - "சாட்" செய்வது - தான்" என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்! 

இதற்கு நல்ல உதாரணம் கூறுவதென்றால் சமீபத்தில் பிரபல பாஸ்கட் பால் விளையாட்டு வீரர் டோனி பார்க்கர், தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை அவரது ஃபேஸ்புக் தளம் மூலம் அறிந்து, அதனையே ஆதாரமாக காட்டி விவாகரத்து வாங்கியதைக் கூறலாம் என்கிறார் மார்க். 

அமெரிக்கா, பிரிட்டனில் காணப்படும் நிலை கூடிய விரைவில் நமது நாட்டிலும் ஏற்பட சாத்தியமுள்ளது.

எனவே ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வருபவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. அதுவும் ஒருவகை ஏமாற்றுதான் என்பதால் தங்களது திருமண பார்ட்டனருக்கு விசுவாசமாக இருப்பதே நல்லது. 

Thanks to:

source web. http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1012/04/1101204043_1.htm