வைரத்தின் வரலாறு



உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.
வைரம் எப்படி உருவாகிறது?
பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.
வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.
வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?
வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.
இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.
வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?
இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.
ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?
ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.
உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.
ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?
தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.
வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?
ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.
இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.
பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.
வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே,அதனை விளக்கவும்?
வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.
பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.
வைரத்தில் தோஷம் என்றால் என்ன ?
அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?
வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.
இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?
கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.
இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?
தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.
Mohammad Sultan

பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்


தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம்அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்)சுமந்திருந்துசிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள்அவனை (கர்ப்பத்தில்சுமந்திருந்ததும்அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும்முப்பது மாதங்களாகும்முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்துநாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, 'என்னுடையரப்பேநீ எனக்கும்எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும்நீ எதனைப் பொருந்திக்கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும்எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாகஎன் சந்ததியினரை எனக்குநல்லிணக்கமாக்கி வைப்பாயாகநிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்துமீண்டு விட்டேன்நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற)முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

சதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில்அமர்ந்திருக்கிறார்மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக்கொண்டிருக்கிறார்நன்கு படித்துபெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலைசெய்துக்கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

'
என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், 'அது ஒரு காகம்'

சில நிமிடங்கள் கழிந்தனஅந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'

'
இப்பத்தானே சொன்னேன்அது ஒரு காகம்என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம்காகம்!'
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'

மகனோ பொறுமையை இழந்து விட்டார்தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்பகேட்டுட்டே இருக்கீங்கஎத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்என்றுஇதைக்கூட உங்களால புரிஞ்சுக்கமுடியலையா?'

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோதந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும்தென்படவில்லைஅவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச்சென்று திரும்பினார்அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்புதன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார்அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத்தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
'எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்ததுஎன் மகன் 'அது என்னஎன்று 23தடவைகள் கேட்டான்'அது ஒரு காகம்என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியைகேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன்.

அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லைஅதற்குமாறாககள்ளங்கபடமற்ற அச்சிறுகுழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது'. இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன23 தடவை அதே கேள்வியைகேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(
நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்தாய்தந்தைக்கு நன்றிசெய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்அவர்களில் ஒருவரோஅல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும்உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம்அவர்களை (நிந்தனையாக)ச் 'சீஎன்று சொல்லவும் வேண்டாம்அவர்களிடம் (எதைக்கூறியபோதிலும் புஜம் தாழ்த்திமிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராகஅன்றி,என் இறைவனேநான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாகஎன்னை அவர்கள் வளர்த்துபரிபாலித்த பிரகாரமேநீயும் அவ்விருவர்மீதும்அன்பும் அருளும் புரிவாயாகஎன்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம்அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்)சுமந்திருந்துசிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள்அவனை (கர்ப்பத்தில்சுமந்திருந்ததும்அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும்முப்பது மாதங்களாகும்முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்துநாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, 'என்னுடையரப்பே!நீ எனக்கும்எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும்நீ எதனைப் பொருந்திக்கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும்எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாகஎன் சந்ததியினரை எனக்குநல்லிணக்கமாக்கி வைப்பாயாகநிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்துமீண்டு விட்டேன்நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற)முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

அதிக நேரம் செல்போனில் பேசினால் 400% மூளை கேன்சர்!அதிர்ச்சி தகவல்!!

செல்போனில் அதிக நேரம் பேசும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு மூளை கேன்சர் ஏற்படும் அபாயம் 400 சதவீதம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் மற்றும் செல்போன் டவர்களால் ஏற்படும் கதிரியக்க பாதிப்பு பற்றி ஆராய, மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் 8 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதில் சுகாதாரத்துறை, பயோ டெக்னாலஜி துறை, தொலை தொடர்புத்துறை நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் பல அம்சங்கள் குறித்து ஆராய்ந்தனர்.

ரேடியோ அலைவரிசை விதிமுறைபடி (எஸ்.ஏ.ஆர்) தயாரிக்கப்படாத செல்போன்கள், அதிகளவு கதிரியக்கத்தை வெளியேற்றுகின்றன. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எஸ்.ஏ.ஆர் மதிப்பின் அளவு ஒரு கிலோவுக்கு 2 வாட் என்கிற விகிதத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த அளவு கிலோவுக்கு 1.6 மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் செல்போன் டவர்கள் அமைக்க கூடாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆய்வுக்குழுவில் சுகாதாரத்துறை சார்பில் கலந்து கொண்ட விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறுகையில், ‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின்படி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசிய கொள்கை வகுக்கப்படும். ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு இங்குள்ள வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கிறது. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. செல்போனை தலைப் பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட் போன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது.மும்பை ஐ.ஐ.டி.யின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில், ‘‘செல்போனில் அதிகநேரம் பேசும் டீன்ஏஜ் பருவத்தினருக்கு, மூளை கேன்சர் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம் உள்ளது. குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறது” என்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், ‘‘செல்போன், டவர்களின் கதிரியக்கம் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தும், உடம்பில் உள்ள செல்களின் பாதுகாப்பு தன்மையை பாதிக்கும். இதனால் உடல்நலத்துக்கு பல கேடுகள் ஏற்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்திருப்பதால், அதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பது குறித்து மத்திய தொலை தொடர்புத் துறை ஆலோசனையை தொடங்கியிருக்கிறது.

நன்றி.
தூத்துக்குடி ஆன்லைன்.

5 ways to lower your cholesterol


Lowering cholesterol is one of the most imperative things to do to promote overall heart health. And now Metamucil and Dr. Michael Roizen, Chairman of the Wellness Institute at Cleveland Clinic and host of the upcoming PBS series, "Younger You," have suggested five things you need to do to lower your cholesterol.
Take Psyllium
The first, and one of the simplest tips, is to get more fiber in your diet - but not just any kind, because not all fibers work the same way. Viscous soluble fiber like psyllium fiber, the natural dietary fiber found in Metamucil, is proven to help lower total and "lousy" LDL cholesterol because it forms a thick gel that traps and helps remove some cholesterol, bile acids and waste in the gut. This is why I recommend my patients supplement low fat, low cholesterol diets with 7 grams of soluble fiber from psyllium daily, as in Metamucil.
Wear a Pedometer and Increase Daily Activity
You'd be amazed to see how many extra steps you can take in one day -- grab a pedometer and watch the numbers roll as you make simple changes for your health and take the stairs, walk to work, or stroll around the neighborhood to increase your physical activity for better heart health. Tracking your progress throughout the day can be great inspiration to keep going, and walking is a simple and easy type of exercise to help lower cholesterol!
Get an Exercise Buddy
A healthy lifestyle requires motivation, encouragement and a friend to lean on. Grab an exercise buddy and support each other in the challenge to lower your cholesterol. Take long walks together and encourage each other to try new types of physical activity to get the heart pumping and to keep cholesterol levels down! Enjoy each other's company and laugh - reduced levels of stress will help your heart too!
Beware of Hidden Fats and Sugars
Be an informed eater; get to know your ingredients and read the nutrition labels thoroughly. Hidden sugars and unhealthy ingredients can increase your weight, which can lead to high cholesterol. Stay away from foods that contain high levels of saturated fat, cholesterol and hidden sources of sugar such as high fructose corn syrup, some dextrins, or evaporated cane juice.
Add DHA
DHA is short for docosahexaenoic acid, a polyunsaturated fatty acid. Regular intake of DHA can aid in proper heart function and help lower levels of Low Density Lipoprotein (LDL), or the "lousy" cholesterol3, and raise levels of High Density Lipoprotein (HDL), or the "healthy" cholesterol. Popular sources of DHA are salmon, sardines, tuna - but if you aren't a seafood fan, try fish oil supplements, or if you don't like fishy taste, et them from vegetarian supplements made from algal DHA. (ANI)