Train Information

குறிப்பிட்ட ரயில் எங்கு வருகிறது என்பதை அறிந்துகொள்ள :

உறவினர்கள் - விருந்தினர்களை ரயில் ஏற்றி விட்டாலும் சரி அவர்கள் ஊரிலிருந்து வந்தாலும் சரி... அவர்கள் டிரைனில் எந்த ஊரில் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வரும் ஊருக்கு அருகாமையில் உள்ள ஸ்டேஷன் பெயர் என்ன? குறிப்பிட்ட ஸ்டேஷனுக்கு டிரைன் வரும் நேரம் என்ன,? டிரைன் எவ்வளவு நேரம் காலதாமதமாக வருகின்றது என அனைத்து விவரங்களையும் நாம் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். பொதுமக்கம் வசதிக்காக இந்திய ரயில்களின் இயக்கத்தினை ஆன்லைன் மூலம் மேப் (வரைபடம்)பில் அறிந்து கொள்ள ரயில்வே துறை இந்த இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் :

http://trainenquiry.com/
 — with Sampath Kumar.

Income Tax Calculator

வருமான வரி கணக்கிட புதிய கணிப்பான்!!! Official Income Tax Calculator..

உங்களின் மொத்த நிகர வருமானத்தை அறிந்து வைத்துக் கொண்டிருந்தீர்களானால், தற்போது உங்களுக்கான வரி விதிப்பை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். 

உங்களின் மொத்த நிகர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்களுக்கு விதிக்கப்படக்கூடிய வரியை கணக்கிட்டுக்கொள்ளும் வகையில், வருமான வரித்துறை, ஒரு கணிப்பானை வழங்கியுள்ளது. 

இங்கு, நீங்கள் வேறு எந்த மென்பொருளையோ அல்லது எக்ஸெலையோ தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

வரி கணக்கீட்டுக்கான படிகள்:

படி 1 - வருமான வரி வலைத்தளத்திற்குச் செல்லவும் http://law.incometaxindia.gov.in/DIT/Xtras/taxcalc.aspx

படி 2 - வரி விதிப்பு ஆண்டையை தேர்ந்தெடுக்கவும்

படி 3 - வரி விதிப்புக்குரியவருக்கான வகையைத் தேர்ந்தெடுத்தல்

படி 4 - வரி விதிப்புக்குரியவருக்கான வகை, "தனி நபராக" இருப்பின் "தனிநபர் வருமானம்" என்பதை பின்வருவனவற்றில் ஒன்றாக தேர்ந்தெடுத்தல்.

•ஆண்
•பெண்
•மூத்த குடிமக்கள் (60-80 வயதுக்கு உட்பட்டோர்)
•மிக மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்டோர்)

படி 5 - உங்கள் நிகர வருமானத் தொகையை நிரப்புதல்

படி 6 - "வரி விதிப்பை கணக்கிடு" என்ற பட்டனை அழுத்தவும்

உங்களுக்கு விதிக்கப்படக்கூடிய வரியைத் தெரிந்து கொள்ளலாம்

இந்த கணிப்பான், பிடித்தம் பற்றிய தகவலோடு, வருமான வரி மிகைக்கட்டணம், கல்வி தீர்வை, இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி தீர்வை ஆகிய தகவல்களையும் அளிக்கின்றது. இது ஒரு இன்னலற்ற கணக்கீட்டு முறையாக, உங்களுக்கு உண்டான வரி விதிப்பை சில வினாடிகளிலேயே அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுகிறது.

Loan

சிபில்: இதில் சிக்கினால் வீட்டுக் கடன் கிடைக்காது!

ஒருவருக்கு வீட்டுக் கடன் கிடைப்பதில் சிபில் அறிக்கைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அது என்ன சிபில் அறிக்கை என்கிறீர்களா?

இந்தியாவிலுள்ள வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் பல்வேறு கடன் வாங்கியவர்களின் விவரங்களைக் கொண்டிருக்கும் அமைப்புதான் சிபில் (CIBIL - Credit Information Bureau India Limited).
கடன் வாங்கிய ஒருவர் அந்தக் கடனை கட்டாமல் மேலும் வேறொரு வங்கியிலும் கடன் வாங்க வாய்ப்பு இருக்கிறது. முந்தைய கடனை செலுத்தத் தவறிய தகவல் தெரியாமல் கடன் மேல் கடன் கொடுத்துவிட்டு வங்கிகள் மாட்டிக் கொள்ளும் நிலையைத் தடுக்க, கடனாளிகள் பற்றிய தகவலை எல்லா வங்கிகளும் பொதுவாகப் பகிர்ந்துகொள்ளும் தகவல் தொகுப்புதான் சிபில் விவரங்கள்..!ஒருவர் வீட்டுக் கடன் கேட்டு வங்கிக்குச் செல்லும்போது, அந்த நபர் இதற்கு முன் வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தி இருக்கிறாரா, நிலுவை ஏதாவது வைத்திருக்கிறாரா என்ற விவரத்தை சிபில் அமைப்பில் உறுப்பினராக உள்ள வங்கியால் நொடியில் அறிந்துகொண்டு, அவருக்குக் கடன் கொடுப்பதா, வேண்டாமா என்ற முடிவை விரைந்து எடுக்க முடியும்.
சிபில் அறிக்கையில், ஒருவருக்குக் கடன் கொடுக்கலாமா என்பதைக் குறிக்கும் வகையில் அதில் ஸ்கோர்கள் குறிக்கப் பட்டிருக்கும்.
கடன் வாங்கியவர் அதனை திருப்பிச் செலுத்துவதை வைத்து 300 முதல் 900 வரையில் ஸ்கோர் கொடுக்கப்படுகிறது. இதில் ஸ்கோர் 600-க்கு மேல் உள்ளவர்களுக்கு அதிக விசாரணை இல்லாமல் எளிதாக வீட்டுக் கடன் கிடைக்கும். கடனை ஒழுங்காகச் செலுத்தி வருபவர்களுக்கு சிபில் அறிக்கை பலமாக, நண்பனாகவே இருக்கிறது.

கடன் வாங்கப் போகிறவர் சிபில் அறிக்கையில் தன்னைப் பற்றிய விவரங்கள் எப்படி இருக்கின்றன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் (செல்லத்தக்க பான் கார்ட், பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம்) மற்றும் முகவரிக்கான ஆதாரத்துடன் (வங்கிக் கணக்கு, தொலைபேசி மற்றும் மின்சாரக் கட்டண ரசீது - இவை கடந்த மூன்று மாதத்துக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்) சிபில் இணைய தளத்திலிருந்து டௌன்லோட் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இதற்கான கட்டணம் ரூ.154-ஐ (மிஸீபீவீணீ) என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட்டாக எடுத்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Consumer Relations, Credit Information Bureau (India) Limited, Hoechst House, 6th Floor, 193, Backbay Reclamation, Nariman Point, Mumbai 400 021.


- சேனா சரவணன்

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

SMS - Train Booking

வந்தாச்சு... எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு:
*******************************************************

வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்துகிறது ஐ.ஆர்.சி.டி.சி.

செல்போன் இல்லாத ஆட்களே இல்லை என்ற காலம் போய், ஆளுக்கு இரண்டு, மூன்று செல்போன்களை தூக்கிக் கொண்டு சுற்றும் காலகட்டம் இது.அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு செல்போன் ஒன்றிவிட்டது.

செல்போன் மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ள மட்டுமே முடியும் என்ற நிலை மாறிப்போய் இன்று குட்டி உலகமாய் மாறிவிட்டது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே காரியத்தை சாதித்துக் கொள்ளும் வசதிகளில் தற்போது, ரயில் முன்பதிவும் சேர்ந்துவிட்டது.

செல்போனில் டிக்கெட்

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வரும் ஜூலை 1-ந் தேதி முதல் செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்பதிவு விவரங்கள்.

விரைவில், ஐ.ஆர்.சி.டி.சி. இதற்கான பிரத்யேக எண் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த எண்ணைப் பயன்படுத்தி பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பயணிகள், தங்கள் செல்போன் எண்ணோடு, தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரையும் சேர்த்து ஐ.ஆர்.சி.டி.சி.யில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

பயண விவரங்கள்

பயணிகள் தங்கள் பயண விவரங்களான ரெயிலின் எண், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற விவரம், பயண தேதி, பயண வகுப்பு மற்றும் பயணிகளின் பெயர், வயது போன்ற விவரங்களை எஸ்.எம்.எஸ். வழியாக அனுப்ப வேண்டும்.

எஸ்.எம்.எஸ் பரிவர்த்தனை

விவரங்கள் சென்று சேர்ந்த உடன், பயணிக்கு ஐ.ஆர்.சி.டி.சியிலிருந்து ஒரு பரிவர்த்தனை ஐ.டி மெசேஜ் அனுப்பி வைக்கப்படுமாம். பின்னர் மீண்டும் பயணி டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த மற்றொரு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

வங்கிகள் சப்போர்ட்

‘பே' என ஆங்கிலத்தில் ‘டைப்' செய்து, பரிவர்த்தனை ஐ.டி., வங்கி வழங்கிய மொபைல் மணி ஐடென்டிபயர், பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்காக வங்கிகள், சம்பந்தப்பட்ட பயணிக்கு ‘மொபைல் மணி ஐடென்டிபயர்' மற்றும் ‘பாஸ்வேர்டு' முதலியவற்றை டிக்கெட் கட்டணத்தை கழித்து கொள்வதற்காக ஏதுவாக வழங்க இருக்கின்றன.

பேப்பர் தேவையில்லை

அப்போது டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டால் அதற்கான ஒரு சான்றாக ஒரு எஸ்.எம்.எஸ். வரும். ரயில் பயணம் செய்ய அந்த எஸ்.எம்.எஸ். மட்டுமே போதுமானது. வேறு பேப்பர் பிரிண்ட் டிக்கெட் தேவையில்லை.

சுற்றுச்சூழல் நலன்

பேப்பர்களுக்காக மரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அனைத்தையும் கணினி மயமாக்கி வருவதில் இயற்கை ஆர்வலர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே, மொபைல் சந்தாதாரர்கள் இம்முறையை பயன் படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

குறைந்த சர்வீஸ் சார்ஜ்

ஒருமுறை எஸ்.எம்.எஸ். அனுப்ப ரூ 3 கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. மேலும், பணம் செலுத்துவதற்கான கட்டணமாக, ரூ.5 ஆயிரம் வரையான டிக்கெட்டுகளுக்கு 5 ரூபாயும், ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 10 ரூபாயும் கூடுதலாக பிடிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்

Educational Loan

இந்திய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான சிறப்புப்பதிவு...


கல்விக் கடன்: `ஏ டூ இசட்’ தகவல்கள்![Educational Loans Details]

ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, கல்வி. கல்வி கற்ற மனிதனே முழு மனிதனாகிறான்.
ஆனால் குடும்பப் பொருளாதார நிலைமையால் படிப்பைத் தொடர முடியாமல் பலரும் தடுமாறி நிற்கிறார்கள். அவர்களின் கவலை போக்க உருவானதே, கல்விக் கடன் திட்டம்.

இந்தக் கல்விக் கடன், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்குமா, இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன, அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும், கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற மாணவர்களின் மனதில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது, இக்கட்டுரை!
மருத்துவம், பொறியியல், இளநிலை, முதுநிலை, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வகைப் படிப்புகளுக்கும் மத்திய அரசின் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடனை அளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அளவு அதிகரித்துதான் வருகிறது.

யாரெல்லாம் கடன் பெறலாம்?

மருத்துவம், பொறியியல், நர்சிங், பி.எட்., ஆசிரியர் பயிற்சி ஆகிய படிப்புகளுக்குக் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் சில தகுதிகளை நிர்ணயித்துள்ளன. அதன்படி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எட்., ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் பயிலும் மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். திருத்தப்பட்ட கல்விக் கடன் திட்டம் 2011-ன்படி மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மட்டுமே இந்தக் கல்விக் கடனைப் பெற முடியும்.
மெரிட் அடிப்படையில் `சீட்' பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் பெறும் கடனுக்கு `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டில் (மானேஜ்மென்ட் கோட்டா) மருத்துவம், பொறியியல், ஆசிரியர் படிப்பு, நர்சிங் படிப்புகளில் சேரும் மாணவர்கள் வங்கியில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு, கல்விக் கடன் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் கிடைக்காது. `செக்யூரிட்டி'யும் அளிக்க வேண்டும்.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றால்...
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் கல்விக் கடன் அளிக்க முடியும் என்று வங்கிகள் கூற முடியாது. மானேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள தகுதியைப் பெற்றிருப்பவர்கள்தான் `கவுன்சலிங்' மூலம் கல்லூரியில் சேருவார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனைப் பெறும் மாணவரின் பெற்றோருக்கு நிரந்தர வருமானம் இல்லாவிட்டாலும் அவருடைய மகன் அல்லது மகளுக்கு வங்கிகள் கட்டாயம் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனை மாணவர் திருப்பிச் செலுத்துவாரா என்றுதான் வங்கிகள் பார்க்க வேண்டுமே தவிர, அவரது பெற்றோரின் தகுதியைப் பார்க்கக் கூடாது.

ஒரே குடும்பத்தினர் பெற முடியுமா?
ஒரே குடும்பத்தில் உள்ள 2 பேர், சொத்து அடமானம் இல்லாமல் கல்விக் கடன் பெற முடியுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. கல்விக் கடன் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அவர்கள் படித்து வேலை பெறுவார்களா என்பதைப் பொறுத்துத்தான் கல்விக் கடன் அளிக்கப்படுகிறது. எனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்குத் தடை ஏதும் இல்லை.

திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க...
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்காமல் வெளியே தனியாகத் தங்கியிருந்தால் அவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். மாணவரின் தங்குமிடம் மற்றும் சாப்பாட்டுச் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வங்கிகள் வைத்துள்ளன. எனவே கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக மாணவரின் கல்விக் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிக்க முடியாது. அவருக்குத் தகுதிகள் இருந்தால் தாராளமாகக் கடன் வழங்கலாம்.

கல்விக் கடன் பெற்ற ஒரு மாணவர், அதைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால் அதுகுறித்து குறிப்பிட்ட வங்கிக்குக் கோரிக்கை விடுக்கலாம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அநëத மாணவரின் வேண்டுகோளை வங்கிகள் பரிசீலிக்க வேண்டும்.
கல்விக் கடன் பெற்ற மாணவர் ஒருவர் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க விரும்பினால் படிக்கலாம். அந்த மாணவருக்கு கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை 6 மாதம் முதல் ஓராண்டு வரை வங்கிகள் தள்ளி வைக்கலாம். படிப்புக்கு ஆகும் செலவில் ஒரு பகுதிக்கு கல்விக் கடன் வேண்டும் என்று கேட்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதுபோன்ற விண்ணப்பங்களையும் வங்கிகள் பரிசீலனை செய்கின்றன. வெளிநாடு வாழ் இந்தியரின் (என்.ஆர்.ஐ.) மகன் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால், அவர்களுக்கும் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலிக்கும். ஆனால் அந்த மாணவரின் தந்தை இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த மாணவருக்கு வழங்கப்படும் கடனுக்கு `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டும்.

கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவரின் மனு ஏற்கப்பட்டதா, ஏற்கப்படவில்லையா என்ற தகவலை அந்தந்த வங்கிகள் மாணவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை கல்விக் கடன் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை வங்கிகள் தங்கள் ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும்.

வட்டியில்லா கல்விக் கடன்

வட்டியில்லா கல்விக் கடனையும் வங்கிகள் வழங்குகின்றன. வட்டியில்லா கல்விக் கடனைப் பெற இரண்டு தகுதிகள் வேண்டும்.
ஒன்று, வங்கியில் கடன் கோரும் மாணவர், கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் தொழிற்கல்வி (புரொபஷனல்) படிப்புகள், அதாவது என்ஜினீயரிங், மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் சேர வேண்டும். பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை, அறிவியல் படிப்புகளுக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது.
மற்றொன்று, மாணவரின் தந்தையின் ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கான சம்பளச் சான்றிதழை, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்தத் தகுதிகள் இருந்தால், மாணவர்கள் கல்விக் கடனாகப் பெறும் தொகைக்கு வட்டி கிடையாது. உதாரணமாக, என்ஜினீயரிங் பயிலும் மாணவர் 4 ஆண்டுகள் படிக் கிறார் என்றால், அந்த 4 ஆண்டுகளுக்கும் அவர் வட்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அவர் படித்து முடித்து 6 மாதங்களுக்குப் பின்னர் கல்விக் கடனுக்கான மாதத் தவணை செலுத்தும் போது, 4 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள கல்விக் கடன் அசல் தொகை மற்றும் வட்டியைச் சேர்த்துச் செலுத்த வேண்டும்.

தந்தையின் மாத வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் உள்ள மாணவருக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது. அந்த மாணவர், என்ஜினீயரிங் படிக்கும் 4 ஆண்டுகளுக்கான வட்டியையும் சேர்த்து, படித்து முடித்த 6 மாதங்களுக்குப் பிறகு செலுத்த வேண்டும்.
கல்விக் கடன் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?

வங்கிகளில் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்...

* இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ. 20 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது.
* கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதம், கட்டணம் பற்றி கல்லூரி அளிக்கும் கடிதம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் 6 மாதத்துக்கான வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட், மாணவரின் தந்தையின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும்.
* கல்விக் கடனுக்கான வட்டி விகிதம், வங்கிக்கேற்ப மாறுபடுகிறது. 11.5 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூ. 4 லட்சம் வரை கடன் பெற்றால் `செக்யூரிட்டி' தேவையில்லை, அதற்கு மேல் கடன் பெற்றால் `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டும். அதாவது சொத்து ஆவணங்களை வழங்க வேண்டும்.
* கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் முதல், 7 ஆண்டுகள் வரை ஆகும். சில வங்கிகள் 60 சதவீத மதிப்பெண் இருந்தால்தான் கல்விக் கடன் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. மேற்படிப்பில் சேருவதற்கான தகுதிகள் இருந்தாலே அந்த மாணவருக்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டும்.
* படித்து முடித்த 6 மாதத்தில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன்பின்னர் வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கல்விக் கடனுக்கான மாதத் தவணையை கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டும்.
* என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கொண்டு எம்.இ. போன்ற பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினால் அதுபற்றி அவர் வங்கிக்குத் தெரியப்படுத்தினால் அதற்கும் கல்விக் கடன் பெறலாம். ஆனால் பட்ட மேற்படிப்பு முடித்து 6 மாதங்கள் கழித்து இரண்டு கல்விக் கடனையும் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
* டியூஷன் கட்டணம், நூலகக் கட்டணம், லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வாங்குவதற்கான செலவு, திரும்பக் கிடைக்கும் டொபாசிட் தொகை, இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான தொகை ரூ. 50 ஆயிரம் உள்பட பல்வேறு வகையான கட்டணங்களுக்கும் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். எவ்வளவு கட்டணம் வழங்குவது என்பது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.

`பான் கார்டு' வேண்டும்
இந்தக் கல்வியாண்டு முதல், வங்கிகளில் கல்விக் கடன் பெறும் மாணவர்கள் கண்டிப்பாக `பான் கார்டு' வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

`பான் கார்டு' ஏன் கேட்கிறார்கள்? இரண்டு காரணங்களுக்காக இது கேட்கப்படுகிறது. ஒன்று, வட்டி ரத்துச் சலுகை கேட்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்காகக் கேட்கப்படுகிறது. மற்றொன்று, கடன் வாங்கிய மாணவர் வங்கியை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக.

ஒரு மாணவர் ஒரு பான் கார்டு தான் வைத்திருக்க வேண்டும். இரண்டு கார்டுகள் வைத்திருப்பது குற்றம்.
ஒரு மாணவர் பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அந்த பான் கார்டில் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து முடித்துவிட்டு அவர் குடும்பத்தோடு வேறு ஊருக்குச் சென்றுவிட்டால், கடன் கொடுத்த வங்கி அவரைத் தேடிப் பிடிப்பது கடினம். எனவேதான் மாணவர்கள் பான் கார்டு வாங்க வேண்டும் என்று வங்கிகள் கட்டாயப்படுத்துகின்றன.

பான் கார்டு வாங்கிய பின்னர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் எண்ணத்துடன் அந்த மாணவர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டால் அவரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். வேறு ஊரில் சென்று அந்த மாணவர் வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனத்திலோ எந்தக் கடன் கேட்டாலும் சிக்கிக்கொள்வார்.

கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கூட தற்போது கட்டாயம் `பான் கார்டு' கேட்கின்றன. அப்படி அந்த மாணவர் கொடுக்கும் பான் கார்டு எண்ணை `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்' என்ற இணையதளத்தில் கொடுத்தால் அவர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது தெரிந்துவிடும்.

வங்கிகளை ஏமாற்றும் நபர்களை அடையாளம் காண்பதற்காகவே அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்' என்ற அமைப்பை நடத்துகின்றன. இதன் மூலம், இந்தியாவில் ஒருவர் எங்கு கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலும், அவருடைய `செக்' திரும்பி வந்தாலும் அது பற்றிய விவரம் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுவிடும்.
இதன் காரணமாகத்தான் வங்கிகள் பான் கார்டு வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்துகின்றன.

கல்விக் கடனுக்கு வங்கிகள் தயங்குவது ஏன்?
கடைசியாக...
கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன என்று அதிக புகார்கள் வருகின்றன. உண்மையில் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் தயங்குவது
ஏன்?தாங்கள் அளிக்கும் கடன்களில் அதிகம் திரும்பி வராத கடன் கல்விக் கடன் தான் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.

கல்விக் கடன் பெறும் பல மாணவர்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை என்பதே நிதர்சனம். பொதுவாக, வீடு, கார், வீட்டு உபயோகச் சாதனங்கள் என்று எதற்குக் கடன் வாங்கினாலும் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால் கல்விக் கடனை மட்டும் திருப்பிச் செலுத்த பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
உண்மையில், கல்விக் கடனைப் பெற்றவர்களில் 40 சதவீதம் பேர்தான் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துகின்றனர். மற்ற 60 சதவீதம் பேரின் கடன் நிலுவையில் உள்ளது. பலர் படிப்பு முடிந்தும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் உண்மை. கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களை கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது.

படிக்கும் மாணவ- மாணவியருக்குத்தான் கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது. அவர்களது பெற்றோருக்கு அல்ல. என் பெற்றோர் தான் கல்விக் கடன் வாங்கினர். நான் வாங்கவில்லை, எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது பொறுப்பல்ல என்று ஒரு மாணவர் கூறினால் அதை ஏற்க முடியாது. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமை அந்த மாணவருக்குத்தான் என்று வங்கிகள் கூறுகின்றன.
கல்விக் கடன் வசூல் சதவீதம் குறைவாக இருப்பதால்தான் வங்கிகள் கல்விக் கடன் வழங்கத் தயங்குகின்றன. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தாங்கள் யோசிப்பது, தங்களுக்குப் பின்னால் வரும் தம்மைப் போன்றவர்களைப் பாதிக்கும் என்று உணர்ந்து மாணவர்கள் நடப்பது நல்லது.

via Dinamalar.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

Cyber Crime

சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள். // உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள பகிர்ந்து கொள்ளுங்கள்//

1. அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். மாறாக , ரிபோர்ட் அப்யூஸ் செய்யுங்கள்.
2. தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது.
3. மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன் படுத்துங்கள்.
4. நம்முடைய அத்தனை பதிவுகள், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox உரையாடல்கள் பதிவாகின்றது. தேவை படும் போது தவறான நபர்களை பிடித்துவிடலாம்.

சைபர் கிரைம் தொடர்பாக இந்த இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம்!http://cybercrimeindia.org/

Warning - Sisters


பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !!




அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்

ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.


முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய்சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.


அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். 

சொத்துக்கள் வாங்க போகிறிர்களா ?



// அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் // share this

இன்றைய காலங்களில் சாதாரண மக்களான நாம் சொத்துக்கள் வாங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே நாம் வாங்கினாலும் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது மிக அபூர்வமே. எனவே நாம் எந்த ஒரு சொத்துக்கள் வாங்க முடிவெடுத்தாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகே வாங்கவேண்டும். 

இல்லையெனில் பின் நாட்களில் பல இன்னல்களில் சிக்கி தவிக்க வேண்டியிருக்கும் .எனவே நாம் சொத்துக்கள் வாங்கும் போது முன்எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வரும் முன் காப்பது நன்று என்பது போல், முன்கூட்டியே சொத்துக்கள் வாங்கும் போது எந்த நிலையில் தவறுகள் வரலாம் என்பதை தெரிந்துகொள்வது நன்று.அதற்கான சிலவழிகள்




01. சொத்துக்களை விற்பவர் சட்டப்படி அதற்கு முழு உரிமையாளர என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

02.விற்பவர் சட்டப்படி அந்த சொத்தின் முழுமையான் உரிமை பெற்றவராக இல்லாமல் இருக்கலாம். எனவே முதலில் அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

03.பத்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் சொத்திற்கும் ,நமக்கு காண்பிக்க படும் இடத்திற்கும் சரியான படி பத்திரத்தில் தகவல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.சம்பந்தமே இல்லாமலும் இருக்கலாம் கவனமாக இருக்கவேண்டும்.

04. நமக்கு விற்கப்படும் சொத்துக்கள் வேறு யாருக்காவது விற்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

05.விற்கப்படும் சொத்தில் ஒரு பகுதி அல்லது பாதியளவு வேறு யாருக்காவது விற்கப்பட்டிருக்கலாம் . அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

06. சொத்தினை விற்பவர் தமக்கு சம்பந்தமில்லாத வேறு இடங்களையும் இத்துடன் இணைத்து விற்கலாம் அதனை கவனிக்க வேண்டும்.

07. சொத்துக்கள் மைனர் பெயரில் இருக்கலாம் அதனை மறைத்து விற்க முற்படலாம் .எனவே விற்பவரின் முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

08. விற்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.வில்லங்க சான்று பெற்று அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

09. இவை நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட இடமாக இருக்கலாம் அதனை தெரிந்துகொள்ளவேண்டும்.

10. சரியான சட்டபடியான அணுகு பாதை அல்லது ரோடு வசதி உள்ளதா என்பதை அறிய வேண்டும். விற்கும் சொத்தின் பாதையினை பற்றி தவறான தகவல் இருக்கலாம்.

11. மூலப் பத்திரங்கள் தொடர்பு பற்றிய தெளிவில்லாமலோ, விற்கமுடியாத வகையிலான சொத்தாகவோ இருந்தால் அதனை பயன்படுத்தி வங்கி கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.

12. பழையக் கட்டடங்களை பொறுத்தவரை முறையான அனுமதி பெறாமல் இருப்பின் கூடுதலான் அல்லது அதிகப்படியான கட்டடங்கள் கட்ட அனுதி பெரும் போது பிரச்சனைகள் வரக்கூடும்.

13. சொத்தினை நாம் வாங்கிய பின் அதனை மற்றவர்களுக்கு விற்பதில் பிரச்சனை வரலாம் அல்லது ஏற்படுத்தப்படலாம்.

14. நேரில்கானும் போது சொத்துக்களின் பரப்பளவில் குறையிருக்கலாம் அல்லது பத்திரத்தில் உள்ளவாறு இல்லாமல் இருக்கலாம் .அளவினை கணக்கிடுவதில் தவறு செய்யப்பட்டிருக்கலாம்.

15. சொத்தின் மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படியில்லாமல் இருக்கலாம் அல்லது சொல்லக்கூடிய மதிப்புக்கு தகுதியில்லாமல் இருக்கலாம்.

16. விற்பவர் பொது நடைபாதைகளையும் சேர்த்து விற்க முயற்சிசெய்யலாம் எனவே சட்டபடியான பொது நடைபாதை உள்ளதை உறுதிசெய்யவேண்டும் .

17. பத்திரம் மதிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளில் திசைகளை மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

18. சுற்றுப்புற காலி மனை , சுற்றுப்புறச் சுவர்கள் அல்லது சுவர்களின் உண்மையான உரிமை குறிப்பிடாமல் இருக்கலாம்

19. நடைப்பாதைகள் இருப்பின் அதன் உரிமைநிலை தரைத்தளத்தில் எப்படி என்றும் முதல் தளத்தில் எப்படி என்பதை பற்றிய உறுதியான தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

20. கிரையம் முடிந்த பின் கட்டடத்தில் உள்ள மின் சாதனங்கள், விளக்குகள், மோட்டார் சாதனங்கள் போன்றவைகள் அப்புறப் படுத்தப்பட்டிருக்கலாம் பத்திரத்தில் அதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டிருகின்றதா என சரிப்பார்க்க வேண்டும்.

21.மின் இணைப்புக்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை அறிந்த்துக் கொள்ளவேண்டும் மற்றும் அதனை பற்றிய தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

22. கட்டடமாக இருப்பின் சரியான காலத்தில் வீட்டு வரி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வரி போன்றவை சரியான காலத்தில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டியது.

01 அங்கீகாரம் பெற்ற வரைப்படம் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் குடியிருப்பு கட்டும் இடத்தில் பொதுவான பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள்.

02. கட்டிடம் அங்கீகாரம் பெற்ற வரைப்படத்தின் படி தான் கட்டப்பட்டுள்ளதா என அறிந்துக்கொள்ளுங்கள் .

03. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு, பிரிக்கப்படாத மனை பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்

04. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர் , பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்கு குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதினை சோதித்து உறுதிச் செய்யவேண்டும்.

05. முழுமையான கட்டுமான பனி முடிந்த பின்னர்,சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால், அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டிடம் வரிப்படத்தின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

06. அடுக்கு மாடி வீடு வாங்குவதில் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சி.எம்.டி ஏ., வின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினை தொடர்புக் கொள்ளவும்.

மேலும் எந்த விதமான சட்டச் சிக்கலுக்கும் விரிவான விளக்கமளிக்க பல இணையத்தளம் உள்ளன . கீழ் காணும் இணைப்பில் சென்று நமக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெறமுடியும்.



தமிழ்நாடு சட்ட ஆலோசகர்கள்
http://tnlegaladvisors.com/discussion/


இதில் உங்களின் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் சட்டரீதியான பதில்கள் இலவசமாக அளிக்கின்றனர் . மேலும் அனைத்து சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டவல்லுநர்கள் மூலம் சட்டஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குகின்றது.

நாம் வாங்கும் சொத்தினை எந்த விதமான வில்லங்கமும் இல்லமால் அடைய மேற்சொன்ன வழிகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் பயன்படுத்தலாம்.



வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற சிக்கல் நீடித்து வந்தது.விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்துவதிலும் தெளிவான நடைமுறை நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை.

இந்த முறையை நிவர்த்தி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது முன்வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 176 இந்திய உயர் தூதரகங்களின் மூலம் ‘எலக்ட்ரானிக் இண்டியன் போஸ்டல்’ எனப்படும் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக தகவலுக்கான கட்டணத்தை செலுத்தி மனுதாரர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு இனி விண்ணப்பிக்கலாம்.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ளwww.epostoffice.gov.in அல்லதுwww.indiapost.gov.in என்ற இணைய தளங்களில் மனுதாரர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதுமானது என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

- முத்தமிழன்.


ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

Online PAN CARD - ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?



வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த பான் கார்டை பெறமுடிந்தது, ஆனால் இன்று இலகுவாக ஆன்லைன் மூலம் பான் கார்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணபத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் கொடுக்கப்படுவதால், இது மிக எளிமையான மற்றும் இலகுவான செயல்முறையாகும். ஆன்லைன் மூலம் பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு;


இணையத்தளம் வருமான வரி பான் சேவைப் பிரிவின் பின்வரும் இணையத்தள முகரிக்குச் செல்லவும் - https://tin.tin.nsdl.com/pan/

பான் விண்ணப்பப் படிவம்

பான் விண்ணப்பப் படிவம் இது வருமான வரி பான் சேவைப் பிரிவு இணையத்தளத்தின் முதல் பக்கமாகும், இதில் புதிய பான் விண்ணப்பப் படிவம், தகவல் அறிதல், ட்ராக்கிங்க் ஸ்டேடஸ், பான் கார்ட் ரீ-பிரிண்ட் செய்தல் மற்றும் பான் கார்ட் விபரங்கள் மாற்றம் செய்தல் அல்லது திருத்தங்கள் செய்தல் ஆகிய தேர்வுகள் உள்ளன. விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

படிவம் 49ஏ

புதிதாக பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கு படிவம் 49ஏ ஐ பயன்படுத்த வேண்டும்.https://tin.tin.nsdl.com/pan2/servlet/NewPanAppஎன்ற இணையத்தள முகவரியில், படிவம் 49ஏ ஐ ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய முடியும். கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். ஆன்லைன் மூலம் இந்த படிவம் சரியான முறையில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், இதற்கான அக்னாலேஜ்மென்ட், டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்கும். அடுத்தடுத்த செயல்முறைக்காக இந்த அக்னாலேஜ்மென்டைப் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆவணங்களை இணைத்தல்

இந்த அக்னாலேஜ்மென்ட் படிவம் வருமான வரித்துறைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இதை அனுப்புவதற்கு முன்னர் இதனுடன் முகவரிச் சான்று மற்றும் அடையாள சான்று ஆகிய முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் உங்கள் பெயர் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே போலவே பான் விண்ணப்ப படிவத்திலும் இருக்க வேண்டும். ஆகவே படிவம் 49ஏ ஐ பூர்த்தி செய்யும் போது மிக கவனமாக இருக்கவும்.

புகைப்படம்

சமீபத்தில் எடுத்த இரண்டு கலர் புகைப்படங்களை, இந்த அக்னாலேஜ்மென்ட் படிவத்தில் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒட்ட வேண்டும். அதே போல் குறிக்கப்பட்ட இடங்களில் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஒட்டும் புகைப்படமே உங்கள் கார்டில் பிர்ண்ட் செய்யப்படுவதால், இந்த புகைபடங்கள் அண்மையில் எடுத்ததாகவும். தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.

இதற்கான கட்டணம் வெறும் ரூ.96

தான் உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவுக்குள் இருந்தால். நீங்கள் பான் விண்ணப்பத்திற்காக ரூ.96/- கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பின்வரும் முறைகள் மூலம் செலுத்தலாம் - காசோலை, டிமான்ட் ட்ராப்ட், இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட். தொடர்பு முகவரி வெளிநாட்டு முகவரியாக இருந்தால், ரூ.962/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் இந்த தொகை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்தபட வேண்டும். ஒரு வேளை, இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் செலுத்த விரும்பினால், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்படும் போதே செலுத்த வேண்டும், இதற்கு பேமென்ட் அக்னாலேஜ்மென்ட் கொடுக்கப்படும். இதை பிரிண்ட் செய்து அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

15 நாட்கள் மட்டுமே

ஆகவே அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் - புகைப்படங்கள், முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் கட்டணதொகை/ கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்று ஆகியவை இணைந்திருக்க வேண்டும். இது விண்ணபித்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், பூனாவிலுள்ள என்எஸ்டிஎல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதை அனுப்பும் போது அஞ்சல் உறையின் மீது ‘அப்ளிகேஷன் ஃபார் பான்- அக்னாலேஜ்மென்ட் நம்பர்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கட்டணத் தொகை கிடைத்த பின்னர், என்எஸ்டிஎல், விண்ணப்பத்தை ஃப்ராசஸ் செய்யும் அதாவது காசோலை அல்லது டிமாண்ட் ட்ராஃப் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டால், பேமென்ட் கிளியர் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆப்ளிகேஷன் டிரக்கிங்

அக்னாலேஜ்மென்ட் படிவத்தை அனுப்பிய பின்னர், ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்ப ஸ்டேடஸ் பற்றி தெரிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தப்பட்ட விபரங்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். என்எஸ்டிஎல் முகவரிக்கு எழுதுவதன் மூலம் அல்லது 57575 என்ற நம்பருக்கு - என்எஸ்டிஎல்பான் - இடைவெளி - அக்னாலேஜ்மென்ட் நம்பர் டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் ட்ராக்கிங் செய்யும் வசதியை என்எஸ்டிஎல் வழங்குகிறது.

விபரங்களை மாற்றுதல் அல்லது திருத்தம் செய்தல்

உங்களிடம் ஏற்கனவே உள்ள பான் கார்ட் விபரங்களை மாற்றுவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கான செயல்முறை, புதிய பான் கார்ட் விண்ணப்பம் செய்யும் முறையை ஒத்தது. இதற்கு வருமான வரித்துறையின் பான் சேவைப் பிரிவு இணையத்தள முகப்பில் உள்ள "பான் விபர மாற்றங்கள் அல்லது திருத்தங்கள்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பான் மாற்ற வேண்டுகோள் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றவும். இந்த பான் மாற்ற வேண்டுகோள் பிரிவிலும், தனிப்பட்ட வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகிய அனைத்தும் கொடுக்கபட்டிருக்கும்.

இனிமேல் ஈசியாக பான் கார்ட் பெறலாம்

ஆகவே நீங்கள் இனிமேல் பான் கார்ட் பெறுவதற்கு வேறு ஒருவரை அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலே கூறப்பட்ட ஸ்டெப்புகளை பின்பற்றி பான் கார்டை இலகுவாக பெற்றுக்கொள்ளுங்கள். மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைகள் எளிதாக மற்றும் சுயமாக புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. போதிய அறிவுறுத்தல்கள், வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாவை ஆகிய அனைத்து விபரங்களும் பான் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது, இணையத்தளத்தில் உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்படும்.

Thanks dinakaran daily newspaper.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

சிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம்...



யாருக்கு? எவ்வளவு? //மாணவர்கள் அவசியம் படிக்கவும்//

படித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் துடிக்கிறார்கள். ஆனால், இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பலவகையிலும் மானியம் தருகிறது. ஆனால், அதுகுறித்த தகவல்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவே இல்லை. சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கிறவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன மானியங்களை அளிக்கிறது, இந்த மானியங்கள் யாருக்கு கிடைக்கும், இதைப் பெற என்ன தகுதி வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை.

முதலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (ஜிமிமிசி) தரும் மானியங்களைப் பற்றி பார்ப்போம்.

முதலீட்டுக்கான மானியம்!

தகுதியுள்ள தொழில்கள்: லாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மற்றும் அனைத்து வகையான குறுந்தொழில்களுக்கும் கிடைக்கும்.
வழங்கப்படும் மானியம்: கட்டடம் மற்றும் இயந்திரங்கள் வாங்க திட்ட மதிப்பில் 15%-30%.
கூடுதல் முதலீட்டு மானியம்!
தகுதியான நபர்கள்: தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள்.

மானியம்: முதலீட்டு மானியம் கூடுதலாக 2% அல்லது ரூ.2 லட்சம்.
தொழில் ஊக்க மானியம்!
தகுதியான நபர்கள்: 25 தொழிலாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள்.

மானியம்: முதல் மூன்று வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களுக்கு உற்பத்தியிலிருந்து 5% அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை.
தகுதியுள்ள தொழில்கள்: பின்தங்கிய பகுதிகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த தொழில்கள்.

மானியம்: முதலீட்டு மானியம், கூடுதல் முதலீட்டு மானியம், தொழில் ஊக்க மானியம் என மூன்று வகைகளிலும் பெறலாம்.
புதிய வகை தொழில்களுக்கான மானியம்!
தகுதியான தொழில்கள்: பின்தங்கிய பகுதிகளில் மாநில அரசு ஊக்குவிக்கும் தொழில்கள்.
வழங்கப்படும் மானியம்: திட்டமதிப்பிலிருந்து கட்டடம் மற்றும் இயந்திரங்கள் வாங்க 15% அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம்.
வட்டி மானியம்!
தகுதியான நபர்கள்: மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் கடனுதவி பெற்ற தொழில் முனைவோர்.
வழங்கப்படும் மானியம்: தொழில் தொடங்கிய பிறகு வங்கிக் கடனுக்குச் செலுத்தும் வட்டியிலிருந்து 3% அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை. தொழில் தொடங்கிய முதல் ஐந்து வருடங்களுக்குள் அல்லது கடன் தொகை ரூ.100 கோடியாக இருக்க வேண்டும்.
அணுகவேண்டிய அலுவலகம்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,
692, அண்ணாசாலை,
நந்தனம், சென்னை - 600 035.
அடுத்து, தமிழ்நாடு அரசு தொழில் வணிகத் துறை அளிக்கும் மானியங்களைப் பார்ப்போம்!

தகுதி: முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள்.
திட்ட மதிப்பு: ரூ.5 லட்சத்திலிருந்து 1 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு/ அங்கீகரிக்கபட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் கல்வி மற்றும் ஐ.டி.ஐ.
தகுதியுள்ள தொழில்கள்: லாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள்.
மானியம்: திட்ட மதிப்பில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை.
வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டம்!
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி
திட்ட மதிப்பு: வியாபாரம் சார்ந்த தொழில்கள் - ரூ.1 லட்சம்; சேவை தொழில்கள்: ரூ.3 லட்சம்
உற்பத்தி தொழில்கள்: ரூ.5 லட்சம்
தகுதியான நபர்கள்:
பொதுப்பிரிவினர்: 18 வயதுக்குள்ளும் 35 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சிறப்புப் பிரிவினர்: பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று பாலினத்தவர்கள் 45 வயது வரை இருக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம்: ஆண்டிற்கு ரூ.1,50,000 மிகாமல் இருக்க வேண்டும்.
வழங்கப்படும் மானியம்: திட்ட மதிப்பீட்டில் 15%.
அணுக வேண்டிய அலுவலகம்:
மண்டல இணை இயக்குநர்,
தொழில் வணிகத் துறை,
திரு.வி.க, தொழிற்பேட்டை, கிண்டி,
சென்னை - 600 032

அடுத்து, தாட்கோ நிறுவனம் அளிக்கும் மானியங்களைப் பார்ப்போம்!
மரபுசாரா தொழில்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்!
தகுதியான நபர்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்.
கல்வித் தகுதி: பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை நிலையங்கள் அமைக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி.
திட்ட மதிப்பு : ரூ.1.50 - ரூ.7.5 லட்சம் வரை
வழங்கப்படும் மானியம்: திட்ட மதிப்பில் 30% அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம்.
குடும்ப ஆண்டு வருமானம்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை நிலையங்கள் அமைக்க மற்றும் மருத்துவமனை அமைக்கும் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அணுக வேண்டிய அலுவலகம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
அனைத்து மாவட்ட ஆட்சியரகம்.
மத்திய அரசு வழக்கும் மானியத் திட்டங்கள்!
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்: கிராமப்புறங்களில் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்விதமாக இத்திட்டம் செயல்ப டுத்தப்படுகிறது.
தகுதியான நபர்கள்:
பொதுப்பிரிவினர்: 18 வயது முடிந்த நகர்ப்புறம் சார்ந்த தொழில்முனைவோர்கள்.
சிறப்புப் பிரிவினர்: பெண்கள், சிறுபான்மை யினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், எல்லைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் தொழில் முனைவோர்கள்.
வழங்கப்படும் மானியம்: நகர்ப்புற பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 15 சதவிகிதம், கிராமப்புற பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 25 சதவிகிதம். நகர்ப்புற சிறப்புப் பிரிவினருக்கு திட்டமதிப்பில் 25 சதவிகிதம், கிராமப்புற சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவிகிதம்.
திட்ட மதிப்பு: உற்பத்தித் துறை சார்ந்த தொழில்கள் அதிகபட்சம் ரூ.25 லட்சம், சேவை மற்றும் வியாபாரத் துறைகளுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம்.
கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி.
சி.எல்.சி.எஸ்.எஸ். திட்டம்! (Credit Linked Capital Subsidy Scheme)
சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இந்த மானியம் கிடைக்கிறது.
தகுதியான நபர்கள்: லாபகரமாக இயங்கும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள்.
மானியம்: கடன் தொகையிலிருந்து 15% அல்லது ரூ.15 லட்சம் வரை. (இயந்திரம் வாங்க ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும்.)
தொடர்பு அலுவலகம்:
இயக்குநர், எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிறுவனம், 65, ஜி.எஸ்.டி, சாலை, கிண்டி, சென்னை- 600 032
ஆர்.டி.யூ.எஃப். (Restructured Technology Upgradation Fund)

ஜவுளி உற்பத்தித் துறைகளில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவே இந்த மானியம். இது ஜவுளித் துறை அமைச்சகத்தின் வழி வழங்கப்படுகிறது.
தகுதியான நபர்கள்: ஜவுளி உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள்
வழங்கப்படும் மானியம்: தொழில் கடனுக்கான வட்டியிலிருந்து 4-5% வரை திரும்பப் பெறமுடியும்!
முதல் ஏழு வருடங்களுக்கு இச்சலுகை பெற முடியும். கடனைத் திரும்பச் செலுத்துவதில் இரண்டு வருடங்கள் சலுகை.
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் கீழ் மார்ஜின் மணி மானியம்!
திட்டம் - 1
தகுதியான நபர்கள்: ஜவுளி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள்.
வழங்கப்படும் மானியம்: இதில் ரூ.45 லட்சத்திற்கு உட்பட்ட இயந்திரங்கள் வாங்கும்போது 15% மானியம்.
திட்டம் - 2
வழங்கப்படும் மானியம்: ரூ.60 லட்சம் அல்லது ஒரு கோடி வரை இயந்திரங்கள் வாங்கும்போது 20% மானியம்.
ஆயத்த ஆடை தொழில்!
வழங்கப்படும் மானியம்: 5% வட்டி திரும்பப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் முதலீட்டிலிருந்து 10% மானியம். (இயந்திரங்கள் வாங்கும்போது)
எம்.ஓ.எஃப்.பி.ஐ. (Ministry of Food Processing Industries)
மத்திய உணவுத் துறை அமைச்சகம் வழங்கும் திட்டங்கள்!
தகுதியான தொழில்கள்: உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு வழங்கப்படும்.
மானியம்: இயந்திரங்கள், கட்டடம் மற்றும் டெக்னிக்கல் சிவில் வேலைகளுக்கு ஆகும் செலவில் 25% அல்லது ரூ.50 லட்சம் வரை.
எந்த வகை தொழில்கள்: ரைஸ் மில், ஆயில் மில், மற்றும் மாவு மில்கள் அமைக்க, பால், பழம், மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைக்க.
அணுகவேண்டிய அலுவலகம்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
692, அண்ணாசாலை, நந்தனம், சென்னை 600 035.

இனி வேலை வாய்ப்புகளுக்கு காத்திருப்பதை விட சொந்தத் தொழில் செய்து முன்னேற அரசாங்கம் அளிக்கும் மானிய உதவிகளைப் பயன்படுத்திக்கொள்வோம்.

- நீரை. மகேந்திரன்.

Thanks Vikatan.

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது :





1.இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

5.பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.



10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

Tamilnadu vigilance and anti-corruption dept nos..

தமிழ்நாடு...விஜிலென்ஸ்.& அண்டி கரெப்சன்[லஞ்ச ஒழிப்பு துறை]
Tamilnadu vigilance and anti-corruption dept nos..

தொலை தொடர்பு எண்கள் :-

Director/ADGP S.K.Dogra, IPS 044 - 24612561
ADGP Addl.Director 044-24617154
IGP SIC- JD A.M.S. Gunaseelan,IPS 044 - 24616900
IGP SIC- JD G. Venkataraman, IPS 044 - 24616900
DIG R. Samuthirapandi, IPS 044 - 24616900
SIC-I 044 - 24610550
SP CNI/Central A.T. Duraikumar 044 - 24954171
SP MDU/Southern Maheswari, IPS 044 - 24959597
SP CBE/Western 0422-2238646
CONTROL 044 - 24615989/49/24954142
FAX 044 - 24617510

Thanks

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz