நபிலா....மலாலா ..? ஒரு ஒப்பீடு...! ( என்ற என் பதிவிற்கு வந்த எதிர்வினை..)
ஊடகங்களின் செய்திகள் பல விதத்தில் பொய்களால பொய்களால் கட்டப்பட்ட கோட்டைகளாக மட்டுமே உள்ளன.. உதாரணமாக, தலிபான்கள் பெண் கல்லூரியை உடைத்தவர்கள்.... பெண் கல்வியை தடுப்பவர்கள். இன்னும் சில உள்ளன இவை போன்று அது உண்மையா..?
தாலிபன்கள் எதிர்ப்பது மேற்கத்திய கல்வி முறை என்னும்... ஆன் மற்றும் பெண்கள் சேர்ந்து கல்வி கற்பதை மற்றும் ஆபாசங்களை மட்டும் தான்..
மேலும், இன்றும் கூட தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கல்வியை பயின்று தான் வருகின்றனர். ஏன் அவர்களை எல்லாம் மலாலாவை போல கொல்ல நினைக்கவில்லை..? ( மலாலாவை தாலிபான்கள் கொல்ல நினைத்தார்கள் என்பதற்கு கூட சரியான ஆதாரம் கிடையாது என்பது வேறு கதை ).
சற்று சிந்தித்து பாருங்கள்... தாலிபன்கள் பெண்கள் கல்லூரிகளை உடைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் ..உண்மை தான் பெண்கள் மட்டுமில்லை ஆண்கள் கல்லூரிகளையும் தான் உடைத்தார்கள் ...
ஏன்..? இந்த உண்மைகளை மீடியாக்கள் செல்வதில்லை காரணம், அப்படி கூறும் பட்சத்தில் தாலிபான்கள் பெண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் என்ற பொய்யிற்கு வலு சேர்க்கமுடியாது அல்லவா..? அதனால் தான் கூறுவதில்லை ..
மேலும், தாலிபான்கள் கல்லூரிகளை வீம்புக்காக உடைக்கவில்லை..
மாறாக, இந்த கல்லூரிகளையும் பள்ளிகளையும் தான் பாகிஸ்தான் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கும் விடுதிகளாக பயன்படுத்தினர்..
( உதாரணமாக மாவோஸ்ட்கள் பள்ளிகளை குண்டு வைத்து தகர்க்கிறார்கள் என்று சொல்வதைப் போல.....)
இப்படி ராணுவ தளங்களுக்காக பயன்படுத்தும் போது உடைக்காமல் பாதுகாக்கவா செய்வார்கள்...? மேலும், மலாலா என்பவர் அமெரிக்காவின் செயல்பாட்டின் படி நடக்கும் ஒரு பெண் அவ்வளவே....
அவரது காயத்தில் கூட பல சர்சைகளும் உள்ளன..அதுவும் கூட இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை..ஆனால் என்ன செய்ய..? மீடியாக்கள் அனைத்தும் அமெரிக்க கை கூலிகள் .தலிபான்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போராளிகள்..
அப்படி இருக்கும் போது எப்படி தாலிபான்களை பற்றி உண்மையான செய்திகளை மீடியாக்கள் வெளியிடும்..? இறுதியாக 'யுவான் ரிட்லி' என்ற பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளரை ஆப்கனில் வைத்து தலிபான்களை கைது செய்து, பின்னர் தலிபான்கள் விடுவித்த போது யுவான் ரிட்லி குறிப்பிட்ட சம்பவம்
"சண்டே எக்ஸ்பிரஸ்சின் " உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..
என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?
இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையை... அவர்களை பற்றிய உண்மையான செய்திகளை அளித்தால் போதுமாம்.
நாம் ஊடகங்களை நம்பும் பட்சத்தில் அது என்றைக்கும் அவர்களின் எஜமானன் அமரிக்காவுக்கு மட்டும் தான் கட்டுபப்டும்..இனி உண்மையை தீர்மானிப்பது நம்மை பொருத்தது .....அன்புடன் தமிழ் சகோதரன்.
நன்றி
Nsa Khadir — with Sherlin Sesuraj and Mohamed Noordeen.
No comments:
Post a Comment