தடா அப்துல் ரஹீம் அவர்களின் உண்ணாநிலை போராட்டம் - அநீதிக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட முஸ்லிம் இயக்கங்கள் உள்பட அனைத்து இயக்கங்கள் முன்வருமா ???
__________________________
சிறையில் உள்ள 96 சதவீதம் முஸ்லிம் கைதிகளுக்கு எந்த வொரு தீவிரவாதக் கும்பலுடனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை. 50 சதவீதம் பேருக்கு 2013ல் தண்டனை காலம் முடிகிறது. 38 சதவீதம் பேர் தாங்கள் கைதான தைத் தங்கள் குடும்பங்களுக் குத் தெரிவிக்க காவல்துறை யினர் உதவவில்லை. பல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டால், அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களின் சதவீதம் ஒன்றரை நிமிட இந்த காணொளியை பாருங்கள்..
பன்முக கலாச்சாரம் கொண்ட சமுதாயதங்கள் மற்றும் சட்டங்கள் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தடா அப்துல் ரஹீம் எடுத்தது போன்ற சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் சில நேரங்களில் ஏற்பட்டுவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை ... இஸ்லாமிய மார்க்கம் இதனை அனுமதிக்கவில்லைதான் இருந்தாலும் மார்கத்தை மட்டுமே புகுத்தி அவரை வீண் விமர்சனம் செய்வதை தவிர்த்து விட்டு உருப்படியான மாற்று வழிகளால் இப்பிரச்சினையை அணுக முன் வரவேண்டும் இதுதான் தற்போதை தேவை ... முஸ்லிம் சமுதாய இயக்கங்கள் ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்து ஆக்கப் பூர்வமான போராட்டத்தை வலுவாக நடத்த யாரும் தயாராகவில்லை என்பதால் தானே தனக்கு தெரிந்த , தான் நம்பிய வழியை தேர்தெடுத்து பாவப்பட்ட மக்களுக்காக . அவர்களின் குடும்பங்களுக்காக ,அநியாத்துக்கு எதிராக இப்படி ஒரு போராட்டத்தில் தடா அப்துல் ரஹீம் அவர்கள் இறங்க வேண்டியதாயிற்று .. அவரின் வேதனையை இந்த காணொளி மூலம் அறிந்து கொள்ளாலாம் .. இனியாவது அநீதிக்கு எதிராக பாடுபடும் அனைத்து இயக்கங்களும் முன்வந்து உரிய முறையில் , சாத்வீக ஜனநாயக முறையில் இதற்கான செயல்பாடுகளை நிச்சயம் செய்வோம் என்கிற உறுதியை கொடுத்து அவரின் இந்த உண்ணாநிலை போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இன்ஷா அல்லாஹ் ....
இது உங்கள் தூக்கம் தொலைக்கும் நிஜம்..!
★☆★ பாருங்கள்...பகிருங்கள் ☆★☆
www.fb.com/
No comments:
Post a Comment