லவ் ஜிஹாத் - Love Jihad


உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம் பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கும்பல் தன்னை அங்குள்ள மதரஸா ஒன்றிற்குள் இழுத்து சென்று கற்பழித்ததாகவும் அந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற சொல்லி கட்டாயபடுத்தியதாகவும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் உத்திரபிரதேசம் மட்டும் இன்றி இந்தியா முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையின் சீரிய(?) பணியால் கலீம் உள்ளிட்ட 8 நபர்களை காவல்துறை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரை முன்னிலைபடுத்தி பாஜக வின் எம்.பி. யோகி ஆதித்யானந்த் உள்ளிட்ட காவிகளின் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர லவ் ஜிஹாத் உச்சத்தை அடைந்துள்ளது என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தேர்த்ல் பிரச்சாரங்களிலும் பாஜகவை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் இதை பெரிதுபடுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.10.14) காவல்நிலையம் வந்த அந்த பெண் காவல்துறையிடம் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, அவர் ஒரு முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்ததாகவும் அது அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் அப்பெண்ணை அடித்து துண்புருத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வற்புறியத்தாகவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் இந்த வற்புறுத்தலாலேயே தான் மதரஸாவில் வைத்து கற்பழிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்ததாக உண்மையை கூறி ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இவரது இந்த நடவடிக்கை மூலம் லவ் ஜிஹாத் என்ற பரப்புரையை மேற்கொள்ளும் காவிகளின் முகங்களில் சானியை கரைத்து ஊற்றியது போல் உள்ளது.
இப்படி காவிகளின் திட்டமிட்டு பொய் புகார்கள் மூலம் பல ஆயிரம் முஸ்லிம் வாலிபர்களின் வாழ்க்கையையும் உயிர்களையும் பனையம் வைத்து தங்களின் பிழைப்பை நடத்தி வரும் பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வதுடன் இது போன்ற புகார்களை உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் தீர விசாரித்து வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வழி வகை செய்யுமா...??
காவிகளின் பிடியில் இந்திய அரசு இருக்கும் வரையில் இது போன்ற சம்பவங்களை மக்கள் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வந்தால் இவர்களின் அரசியல் வாழ்க்கை ஓரங்கட்டப்படும்.
இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குழைக்க லவ் ஜிஹாத் என்ற வதந்தியை கிளப்பும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மீடியாக்கள், இறுதியில் உண்மை கசிந்தது.
அநீதிக்கு எதிராய் ஒடுக்க பட்ட ஒரு சமூகத்தின் உரிமை குரல்தான் இந்த உண்மையை உரக்க சொல் !!
இந்த பக்கத்தை ஒரு லைக் போட்டு உங்களையும் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment