Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts

Green Tea! - கிரீன் டீ



கிரீன் டீ ன்னு வீட்ல ஒன்னு வாங்கி 
வெச்சாங்க உலக கசப்புடா சாமி 

ஆனால் அதை குடிக்க குடிக்க உடலில் 
பல மாற்றங்கள் உணர முடிகிறது..
உண்மையாகவே சூப்பர் கிரீன் டீ... 

அதனால் அதை உங்களுடனும் பகிர்ந்து 
கொள்ள இதோ அதை பற்றி நண்பர்களே...

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

Miracle Drink


A + B + C ..... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து
தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.

விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .

இந்த பானம் அருந்துவதால் பயன்கள் :

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.

பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.

மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.


*உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

^ கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.
அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும் .

வாய்ப் புண் - Mouth Ulcer

வாய்ப் புண் வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும். வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன. ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள். பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி. ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம். வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம். அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம். முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது. Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது. திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே. அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்: - நல்ல உணவுப் பழக்க வழக்கம் - தினசரி மிதமான உடற்பயிற்சி - மன அழுத்தத்தைக் குறைப்பது - தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும். வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம். தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும். வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும். தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும். மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும். மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும். வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமா

Sleep


அதிகமாக கோப படும் நண்பர்கள் ஆரோக்யமான தூக்கத்தை தழுவ வேண்டும் !!

நமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் தேவை இல்லாமல் கோபம் வரும். எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவோம்

கண்களில் கருவளையம் விழும். உடல் பலவீனம் அடைவதோடு பைத்தியம் பிடித்தது மாதிரி இருக்கும். மொத்தத்தில் தூக்கம் இல்லாவிட்டால் ஊக்கம் குறைந்துடும்.



இந்த வேளையில் உங்கள் கண்களிலும் ஆரோக்கியமான உறக்கம் தழுவ இதோ சில குறிப்பு

* இரவில் தூங்குவதும், காலையில் விழித்து எழுவதும் தினமும் ஒரே நேரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது

* தூக்கத்தில் குறட்டைவிடுவது ‘ஸ்லீப் ஆப்னியா’(Sleep apnea) என்ற நோயின் அறிகுறி. இதனைக் குணப்படுத்தவும் சிகிச்சை முறைகள் உள்ளன.

* தூக்கமின்மையால் ரத்தக்கொதிப்பு (Blood Pressure), சர்க்கரை நோய் (Sugar), மாரடைப்பு (Heart Attack) போன்ற பல்வேறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

* சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் கடைப்பிடித்தால் போதும். பின்னர் அதுவே வழக்கமாகிவிடும்.

* தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

* காபி, டீ போன்ற பானங்கள் விழிப்பு நிலையைத் தூண்டி தூக்கத்தைத் துரத்தியடிக்கும். எனவே மாலை 4 மணிக்குப் பின்பு இதுபோன்ற பானங்களை அருந்த வேண்டாம்.

* மது குடித்து உடனே தூங்கச் செல்வோருக்கு அரைத்தூக்கமும், அதிகாலைத் தலைவலியும் நிச்சயம்

* காலை அல்லது மாலை நேரங்களில் தினமும் உடற்பயிற்சி செய்வது இரவில் நிம்மதியாகத் தூங்க உதவி புரியும். இசை, தியானம், புத்தகங்கள் படித்தல், ஓவியம் வரைதல்… என்று மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டால் இரவில் அனாவசியமான சிந்தனை ஓட்டங்கள் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.

* இரவு வேளைகளில், தொலைக்காட்சி, கணனி போன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் பிரகாசமான வெளிச்சம் தூக்கத்தைத் தடை செய்யும். விளக்குகளை அணைத்துவிட்டு கணனியில் வேலை செய்வது கண்களுக்கும் தூக்கத்துக்கும் பாதகமான விடயம்.

* சாக்லெட் மற்றும் குளிர்பானங்களில் விழிப்பைத் தூண்டுகிற ‘காஃபின்’ இருக்கிறது. எனவே, தூங்குவதற்கு முன்பு இவற்றைச் சாப்பிட வேண்டாம்.

* இரவில் தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் அருந்தினால், நள்ளிரவில் அடிக்கடி டாய்லெட் போக வேண்டிய உந்துதல் ஏற்படும். இதனால், ஆழ்ந்த தூக்கம் தடைப்படும். எனவே, தூங்கச் செல்லும் முன் டாய்லெட் சென்றுவிட வேண்டும். இன்சோம்னியா பிரச்னை இருப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

* தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், பகலில் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* நடைப்பயிற்சி நல்லதுதான். ஆனால், இரவு வேளையில் வீட்டுக்கு வெளியே சென்று நடைப்பயிற்சி செய்தீர்கள் என்றால் தூக்கத்துக்குப் பதிலாக விழிப்பு நிலை தொடர்வதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தூக்கம் வராமல் தவிக்கக் கூடும்.

*’குளித்துவிட்டுத் தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும் என்பார்கள் சிலர். குளித்துவிட்டு உடனே தூங்கப் போனால் தூக்கம் வராது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே குளிப்பதுதான் நல்லது.

* தூக்கம் வராமல், தவிப்பவர்கள் படுக்கையைக் கண்டாலே பதற்றம் ஆவார்கள். இவர்கள், தூக்கம் வருவதாக உணர்ந்தால் மட்டுமே படுக்கையில் சாய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இது படுக்கை மீதான பதற்றத்தைக் குறைக்கும்.

* குடும்பப் பிரச்னைகள் காரணமாக மன அழுத்தம் இருந்தால், மனது ஒரு நிலையில் நில்லாது அலைபாய்ந்துகொண்டே இருக்கும். இவர்கள் தங்களது நெருக்கமான நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொண்ட பிறகு தூங்கச் செல்லலாம்.

* தூக்கம் வருவதற்காக புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், படுக்கையில் அமர்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ படிக்காதீர்கள். நாற்காலியில் அமர்ந்துகொண்டு புத்தகம் வாசியுங்கள். தூக்கம் வந்ததும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.

அதிகத் தூக்கமும் ஆபத்துதான்

சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் ‘தூக்கப் பிரச்னை’ என்று நினைப்பது தவறு. ‘அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான்’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இரவுத் தூக்கத்தின்போது ஸ்லீப் ஆப்னியாவினால், மூளைக்கு சரியான அளவில் ஆக்சிஜன் செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடராக நீள்கின்றன.

இதனால், கோபம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துபோகக் கூடும். இன்னும் அழுத்தமாகச் சொல்வதானால், பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான தருணத்தில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயமும் உள்ளது.

இது மட்டும் அல்ல… ஸ்லீப் ஆப்னியா பிரச்னைக்குச் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்தப் பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

வலி நீக்கும் வழி

பொதுவாக வலி இருந்தால் தூக்கம் வராது. ஆனால், வலியைப் போக்குவதற்காக அதிக அளவில் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் தூக்கம் பாதிக்கப்படலாம்.

எனவே, இரவில் தூங்குவதற்கு முன்பு தைலம் மற்றும் களிம்பு வகை மருந்துகள் மூலம் நீவி விடும் பழக்கத்தை வலி நிவாரணியாக்கிக்கொள்வது நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

சிலர் மொத்தமாக பத்து, பதினைந்து மாத்திரைகளை தினந்தோறும் சாப்பிட்டுவருவார்கள். தாங்கள் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை மருத்துவரிடம் காண்பித்து, ‘இந்த மாத்திரை மருந்துகளால் ஏதேனும் தூக்கப் பாதிப்பு வருமா’ என்று ஆலோசனை பெற்றுக்கொண்டு சாப்பிடுவது நல்லது.

இரவுப் பணியை எளிதாக ஏற்றுக்கொள்ள சில வழிமுறைகள்

* இரவுப் பணியின்போது ஜங்க் ஃபுட் உணவு வகைகளைச் சாப்பிடாதீர்கள். இது, பசியை மந்தப்படுத்துவதோடு உடல்நிலைப் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். இரவு இரண்டு மணிக்கு மேல், காபி, டீ போன்ற உற்சாக பானங்களை அருந்தாதீர்கள். இவை மூளையின் விழிப்பு உணர்வைத் தூண்டச் செய்து உங்களது பகல் நேரத் தூக்கத்தைப் பாழாக்கிவிடும்.

* இரவுப் பணி முடிந்து காலையில் பேருந்தில் வீடு திரும்புபவர்கள், இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே கண்களின் மீது கைக்குட்டையை வைத்து மறைத்தபடி தூங்கிக்கொண்டே பயணிக்கலாம்.

* இரவுப் பணி முடிந்ததும் காலையில் நீங்களே தனியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் பழக்கம் பாதுகாப்பானது அல்ல. எனவே, ‘கார் பூலிங்’ (car pooling) முறையில், உங்களது நண்பர்களோடு கூட்டுச் சேர்ந்து அலுவலகம் – வீட்டுக்குச் சென்றுவரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உடலுக்குத் தேவையான ஓய்வு, எரிபொருள் சிக்கனம் என்று பல நன்மைகள் இதில் உண்டு.

* காலை உணவை இரவுச் சாப்பாட்டுக்கு இணையாகக் குறைந்த அளவிலேயே முடித்துக்கொள்ளுங்கள். மேலும், எளிதில் தூக்கம் வருவதற்கு ஏதுவாக ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். காலை உணவு சாப்பிட்ட பின்பு ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் தூங்கச் சென்றுவிடுங்கள்.

* தூங்கச் செல்வதற்கு முன்னதாக கைபேசி இயக்கத்தை நிறுத்திவிடவும். ‘அடுத்த ஆறு மணி நேரத்துக்கு என்னை யாரும் எழுப்ப வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டுத் தூங்கச் செல்லலாம்.

* மதிய உணவுக்காக எழுந்திருப்பது தொடர்ச்சியான தூக்கத்தைப் பாதிக்கும். தூங்கும் அறையில் வெளிச்சம் உட்புகாதவாறு ஜன்னல் திரைச்சீலைகளை நன்றாக இழுத்து விட்டுக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கு


உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி

காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.

வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.

குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.

குறிப்பு :

வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது சொல்லுகிறார்கள்.

தொப்பை



25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்…அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு – ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்கநல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி,
சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

கொள்ளு ரசம்
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1/2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள:

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)

நன்றி – பரமக்குடி சுமதி.
Source :http://inruoruthagaval.com/

ஆவி பிடிப்பது



முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல்,

சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

என்ன நன்மை?

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.
Source :http://inruoruthagaval.com/

உடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் இயற்கை வழிகள்!!


Source :http://inruoruthagaval.com/



பெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு பின்னும் துர்நாற்றம் வெளியேறுகிறது. இதனால் பலர் தன்னம்பிக்கை இழந்துவிடுகின்றனர். இத்தகைய வியர்வை நாற்றம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஹார்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை போன்றவை முக்கியமானவை. வியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை நிறுத்த முடியாது. வியர்வை வெளியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சொல்லப்போனால் வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தான் அத்தகைய துர்நாற்றத்தை ஏற்படுத்துவின்றன. எனவே இத்தகைய வியர்வையினால் ஏற்படும் நாற்றத்தைப் போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இவற்றை பின்பற்றி வந்தால் நிச்சயம், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம்.

உடல் துர்நற்றத்தைப் போக்குவதில் ஒரு சிறந்த வழியென்றால், அது ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது தான். அதிலும் குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

தினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அதிகமான அளவில் வியர்த்தால், அவர்கள் காட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது. ஏனெனில் காட்டன் வியர்வையை எளிதில் உறிஞ்சி, அதிலிருந்து வெளியேறும் நாற்றத்தை விரைவில் வெளியேற்றிவிடும்.



சோப்பு



வியர்வை துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சிறந்த வழியென்றால், துர்நாற்றம் வரும் இடங்களை சோப்பு பயன்படுத்தி, நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வியர்க்கும் போது வெளிவரும் நீர் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்தும் நாற்றத்தைப் போக்கலாம்.



சுத்தமான ஆடைகள்



தினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அதிகமான அளவில் வியர்த்தால், அவர்கள் காட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது. ஏனெனில் காட்டன் வியர்வையை எளிதில் உறிஞ்சி, அதிலிருந்து வெளியேறும் நாற்றத்தை விரைவில் வெளியேற்றிவிடும்.



தேன்



குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

அருகம்புல் சாறு



தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.

வெள்ளை வினிகர்



குளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ரோஸ் வாட்டர்



உடல் துர்நற்றத்தைப் போக்குவதில் ஒரு சிறந்த வழியென்றால், அது ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது தான். அதிலும் குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்



ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் போது, இறுதியில் ஒரு கப் நீரில் கலந்து, அக்குளைக் கழுவினால், அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும்.

புதினா



குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.
Source :http://inruoruthagaval.com/

ஞாபக சக்தி குறைவா? என்ன தீர்வு!!




சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.
அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.
Source :http://inruoruthagaval.com/

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் சில!!



ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. அதை விடவும் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் என்றும் சில நடைமுறைகள் கண்டிப்பாகப்பின்பற்றப் பட வேண்டியவை.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமை சாப்பிட்டபின் புகை பிடிப்பதால் உண்டாகிறது.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு(பொருமல்) ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.
எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இலையில்(தேயிலையில்) ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து சமிபாட்டைத் தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு.(“உண்டபின் நூறடி உலாவிப் பின் உறங்கு” எனும் பழமொழியைப் போல) சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையிலும் பல நவீன மூட நம்பிக்கைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Source :http://inruoruthagaval.com/