Showing posts with label Advice. Show all posts

Gas Leakage - கியாஸ் கசிவு
கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி! ! ! ! பயனுள்ள தகவல்,அதிகம் அதிகம் பகிரவும்... கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி – ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்திஉள்ளது. அந்த எண் 1800-425-247-247. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை இன்று முதல் ஏற்படுத்தி உள்ளது. இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும். உடனடியாக அவர் கியாஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்குதகவல் தெரிவிக்க வேண்டும்.
Medicine - மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை?
Thanks to : http://www.kayaltimes.com/showNews.aspx?tNewsId=4112
மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
* வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.
* மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
* மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
* மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
* மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.
* மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
* மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.
இது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Women - Must Read
இன்றைய இளம்பெண்கள்.(கட்டாயம்வாசிங்க.. )
4, 2012
ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;
தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;
மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.
அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)
நன்றி-பேருவளை தவ்ஹீத் ஜமாஆத்

யாரையும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.........!!
நாம் அவசரப்பட்டு யாரையேனும் சந்தேகப்படுவதால் வாழ்வில் பலவற்றை இழந்து விடுகிறோம், இழப்பை சந்தித்த பின் தவறு இழைத்து விட்டோம் என்று வருந்துவதும் உண்டு, அதையே கொஞ்சம் நிதானத்தோடு செயல்பட்டால் வாழ்வு சிறக்கும்.
யூகத்தின் அடிப்படையில் எதையும் கையாள வேண்டாம் என்று இஸ்லாம் அறிவுரை வழங்குகிறது, இஸ்லாம் வழங்க கூடிய அறிவுரையை இந்த படம் நமக்கு மெய்ப்பிக்கிறது.
தெளிந்த நீர் கண்ணுக்கு தெரியாததால், அந்தரத்தில் நிற்பது போல தோற்றமளிக்கும் படகு...!!
சில நேரங்களில் நம் கண்ணையே நம்மால் நம்ப முடிவதில்லை,
நன்றி : சகோதரர் பக்கீர் மைதீன்
பெண்களைத் தாக்கும் தைராய்டு
பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று.
இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை, அயோடின் குறைவே இதற்குக் காரணம்.
கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தைராய்டின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.
இந்த குறைபாடு காரணமாக பெண்கள் குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவது, மேலும் சிலருக்கு பருவமடைவது என்பது மிக தாமதமாக ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் வருகின்றன.
சில பெண்களுக்கு தைராய்ட் பிரச்சனையால் கருத்தரிக்க முடியாமல் போகிறது. எனவே சிக்கல் உள்ள பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள் முதலில் பரிசோதனை செய்வது தைராய்டு பிரச்சனையைத் தான். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் பேர் இதனால் அவதிப்படுகின்றனர்.
தைராய்டு சுரப்பது குறைவானால், கொழுப்பு சக்தி அதிகமாகி, இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.
பொதுவாக தைராய்டு சுரப்பிகளில் ஏற்படுகின்ற ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராய்டிசன், தைராய்ட் கட்டிகள், ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை முக்கிய பிரச்சனைகள் ஆகும்.
ஹைப்போ தைராய்டிசன் என்பது சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி ஆகின்றது. சிறுவயதிலேயே அதிக உயரம் வளர்வது. வயதைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும்.
ஹைப்பர் தைராயிடிசன் என்பது வயதானவர்களின் எடை குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது. இதற்கு முக்கியமான மருந்து ரேடியோ ஆக்டிவ் அயோடின் என்கிறார்கள். முடியாமல் போனால் அறுவை சிகிச்சை தேவைப்படும் என்கின்றனர்.
ஹைப்போ தைராய்ட் பிரச்சனையால் வயதானவர்களுக்கு நினைவாற்றல், குறைந்து கொண்டே வருகிறது. சோர்வு, கவலை என மன நோயாளி போல் ஆகி விடுகின்றனர்.
தைராய்டு கட்டிகள் என்பது கழுத்தில் வீக்கம் ஏற்படுவது மற்றும் சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாட்டினால் தான் வருகிறது.
இவர்கள் முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், ப்ரொக்கோய்லி போன்ற உணவுகளை, அதிகமாக சேர்க்க கூடாது. இது தைராய்டு பிரச்சனையை அதிகப்படுத்தும். மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. உணவிலும், தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
இவர்கள் அயோடின் கலந்த உப்பை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
தைராய்டு கட்டிகள் சில புற்று நோய் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு மிக அபூர்வமாக வரலாம். தைராய்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சையும் இருக்கிறது.
டென்ஷன் காரணமாக தைராய்ட் பிரச்சனைகள் வருகிறதென சொல்கிறார்கள். சில குழந்தைகள் பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.
இந்த நோய் ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாக தாக்குகிறது. எனவே பெண்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நோயிலிருந்து விடுபட கீரைகள், பழங்கள், பச்சைக்காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
முக்கியமாக தைராய்டு நோய் இருப்பவர்கள், கொள்ளு தானியத்தை உணவில் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். துவையல், ரசம், முளைக்கட்டிய சுண்டல், கொள்ளு பொடி என்று செய்து சாப்பிடலாம். இட்லிப்பொடியுடன் வறுத்து அரைத்து சேர்க்கலாம்.
அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.
Thanks
http://mytamilmagazine.net
எது வேண்டும் சொல் மனமே - 90/10 கொள்கை
நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் .
அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?
உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.
எப்படி? மேற்கொண்டு படியுங்கள் .
உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக:
ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ?
நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது . இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது . இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது . அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.
எப்படி?
நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம் .
டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும்.
இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.
இதோ ஓர் உதாரணம்:
காலைச் சிற்றுண்டியைக் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அருமை மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் உங்கள் மீது கொட்ட,அலுவலகம் செல்ல அணிந்திருந்த உங்களது சட்டை பாழ் .
நடந்த இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. இப்படி நடக்காமலிருக்க உங்களால் எதுவும்செய்திருக்க முடியாது.
ஆனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிக்கப் போவது, இதனை எதிர் கொள்ள நீங்கள் எடுக்கப் போகும் முடிவுதான்.
நீங்கள் சபிப்பீர்கள்.
தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக அருமை மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பீர்கள்/ கண்டிப்பீர்கள்...
மகள் அழத் தொடங்குவாள்....
அடுத்ததாக, தேனீக் கோப்பையை மேஜையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் கோபம் மனைவி மீது திரும்பும் .
அதனைத் தொடர்ந்து மனவியுடன் ஒரு சிறிய வாய்ச் சண்டை. கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள்.
மாடியிலிருந்து கீழே வந்ததும் நீங்கள் காணும் காட்சி:
உங்கள் அருமை மகள் அழுது கொண்டே சிற்றுண்டியை முடித்து, பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள் உங்கள் மகள் . மனைவியும் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் .
இன்று மகளைப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்கள் தலையில். காரில் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள். மகளைப் பள்ளியில் கொண்டு சேர்த்த பின்னர்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியும் .
அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டதால் சாலையின் வேக விதியை மீறி விரைவாகச் செல்கிறீர்கள்.
பதினைந்து நிமிட தாமதம்; அதற்கும் மேல் சாலையின் வேக விதியை மீறியதற்காக ரூபாய் 300 அபராதம் .
அப்பாடா என்று மகளைப் பள்ளியில் இறக்கிவிட, " போய் வருகிறேன்" என்று கூடச் சொல்லாமல் அவள் பள்ளி வளாகத்திற்குள் ஓடிவிட்டாள் . அதிலொரு சிறிய மனச்சஞ்சலம் உங்களுக்கு .
இருபது நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கும் போதுதான் நினைவு வருகிறது, " ஆகா! அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டோமே " என்று.
உங்களின் அன்றைய தினத்தின் தொடக்கமே சற்றுக் கடுமையானதாகிவிட்டது. மேலும் அது அவ்வாறே தொடர்கிறது. எப்போது வீடு சென்றடைவோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது .
மாலையில் வீடு வந்தடைந்தவுடன் மனைவி, மகளின் நெருக்கத்தில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.
ஏன்?
காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான்.
இந்த நாள் இப்படி இனிமையில்லாத நாளானதன் காரணம்தான் என்ன?
அ) அந்த ஒரு கோப்பைத் தேனீரா ?
ஆ) தங்களின் அருமை மகளா?
இ) அபராதம் விதித்த அந்தப் போக்குவரத்துக் காவலரா?
ஈ) நீங்கள்தான் காரணமா ?
சரியான விடை: " ஈ". ஆமாம் நீங்களேதான் ஐயா !
அந்தத் தேனீர் சிந்தியதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் . நீங்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் ?
இதோ இப்படி:
தேனீர் உங்கள் மீது கொட்டுகிறது.
அருமை மகள் அழப் போகிறாள்.
நீங்கள் மிக அன்பான குரலில், " பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்துகொள் அருமை மகளே !" என்று அவளைச் சமாதானப் படுத்துகிறீர்கள். உங்கள் மேல் சிந்திய தேனீரை முகம் கோணாமல் புன்முறுவலுடன் ஒரு டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து புதிய சட்டையையும் அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு நிதானமாக இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள் .
அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே அருமை மகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதைக் கண்டுமகிழ்கிறீர்கள் !
வழக்கத்தை விட ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் முகமன்களைப் பரிமாறி அன்றைய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் . நீங்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதைக் கண்டுமேலதிகாரி பாராட்டுகிறார். மேலதிகாரியின் பாராட்டு கிடைத்த சந்தோஷத்தோடு மாலை வீடு வருகின்றீர்கள்.
மனைவியும் மகளும் வாசலில் மகிழ்ச்சியுடன் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கின்றீர்கள் . உங்கள் மனதில் மேலும் சந்தோஷம் களைகட்டுகின்றது!
வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?
இரண்டு விதமான தொடர் நிகழ்ச்சிகள்! இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன .
ஏன்?
காரணம், நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொண்ட விதம்தான்.
நடந்து முடிந்த சம்பவத்தின் முதல் 10% நிகழ்வினைக் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ உங்களால் முடியாது .
ஆனால் அதனைத் தொடர்ந்த மீதி 90% நிகழ்வினைத் தீர்மானித்தது , நீங்கள்தான். அதாவது, நீங்கள் அந்த முதல் 10%சம்பவத்தை எதிர் கொண்ட விதம்தான்.
இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:
* யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள் .
அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும்.
தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம் ; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.
* உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?
பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா ?
உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?
பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா?
உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?.
90/10 கொள்கையை நினை விற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள்
* உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?.
மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள் . கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .
* விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது .
அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோசெலவிடுங்கள்.
நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.
90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே!
இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள்.
அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்!
இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.
90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை !
மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும்,மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் .
அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.
நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!
ஆங்கில மூலம் : ஸ்டீபன் கோவே.

புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை!
) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?
10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?
16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?
18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா?உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.Source: http://therinjikko.blogspot.com

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
Subscribe to:
Posts (Atom)