தயிர்
தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்..!
பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!
சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர். (பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.
பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில
1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.
5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.
1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)
3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

பெண்களைத் தாக்கும் தைராய்டு
பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று.
இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை, அயோடின் குறைவே இதற்குக் காரணம்.
கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தைராய்டின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.
இந்த குறைபாடு காரணமாக பெண்கள் குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவது, மேலும் சிலருக்கு பருவமடைவது என்பது மிக தாமதமாக ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் வருகின்றன.
சில பெண்களுக்கு தைராய்ட் பிரச்சனையால் கருத்தரிக்க முடியாமல் போகிறது. எனவே சிக்கல் உள்ள பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள் முதலில் பரிசோதனை செய்வது தைராய்டு பிரச்சனையைத் தான். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் பேர் இதனால் அவதிப்படுகின்றனர்.
தைராய்டு சுரப்பது குறைவானால், கொழுப்பு சக்தி அதிகமாகி, இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.
பொதுவாக தைராய்டு சுரப்பிகளில் ஏற்படுகின்ற ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராய்டிசன், தைராய்ட் கட்டிகள், ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை முக்கிய பிரச்சனைகள் ஆகும்.
ஹைப்போ தைராய்டிசன் என்பது சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி ஆகின்றது. சிறுவயதிலேயே அதிக உயரம் வளர்வது. வயதைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும்.
ஹைப்பர் தைராயிடிசன் என்பது வயதானவர்களின் எடை குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது. இதற்கு முக்கியமான மருந்து ரேடியோ ஆக்டிவ் அயோடின் என்கிறார்கள். முடியாமல் போனால் அறுவை சிகிச்சை தேவைப்படும் என்கின்றனர்.
ஹைப்போ தைராய்ட் பிரச்சனையால் வயதானவர்களுக்கு நினைவாற்றல், குறைந்து கொண்டே வருகிறது. சோர்வு, கவலை என மன நோயாளி போல் ஆகி விடுகின்றனர்.
தைராய்டு கட்டிகள் என்பது கழுத்தில் வீக்கம் ஏற்படுவது மற்றும் சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாட்டினால் தான் வருகிறது.
இவர்கள் முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், ப்ரொக்கோய்லி போன்ற உணவுகளை, அதிகமாக சேர்க்க கூடாது. இது தைராய்டு பிரச்சனையை அதிகப்படுத்தும். மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. உணவிலும், தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
இவர்கள் அயோடின் கலந்த உப்பை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
தைராய்டு கட்டிகள் சில புற்று நோய் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு மிக அபூர்வமாக வரலாம். தைராய்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சையும் இருக்கிறது.
டென்ஷன் காரணமாக தைராய்ட் பிரச்சனைகள் வருகிறதென சொல்கிறார்கள். சில குழந்தைகள் பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.
இந்த நோய் ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாக தாக்குகிறது. எனவே பெண்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நோயிலிருந்து விடுபட கீரைகள், பழங்கள், பச்சைக்காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
முக்கியமாக தைராய்டு நோய் இருப்பவர்கள், கொள்ளு தானியத்தை உணவில் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். துவையல், ரசம், முளைக்கட்டிய சுண்டல், கொள்ளு பொடி என்று செய்து சாப்பிடலாம். இட்லிப்பொடியுடன் வறுத்து அரைத்து சேர்க்கலாம்.
அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.
Thanks
http://mytamilmagazine.net
நச்சுத்தன்மை: ஜான்சன் அன்ட் ஜான்சன் உரிமம் ரத்து
பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.
இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை கமிஷனர் கம்லேஷ் பி. ஷிண்டே கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் அதிக அளவில் இருந்தது. அதனால் தான் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks
Thinaboomi
கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்!
உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.
புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. வந்தபின் வளரவிடாமல் தடுப்பது அல்லது வருமுன் காப்பதில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என்பவை பெண்களுக்கு ஏற்படுபவை. இதில் செர்விக்கல் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பாதை புற்றுநோயை இங்கு காணலாம்.
செர்விக்ஸ் (Cervix) என்பது, பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பாகத்தையும், பிறப்புறுப்பின் மேல் பாகத்தையும் இணைக்கும் குறுகிய பகுதி. இதன் உள்பகுதியில் உள்ள வழிப்பாதை “எண்டோசெர்விக்கல் கேனல்’ எனப்படும். இப்பாதை வழியாகவே மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும். குழந்தையும் இவ்வழியாகவே பூமிக்கு வருகிறது.
பாக்டீரியா, வைரஸ் அல்லது ஈஸ்ட்களால் ஏற்படும் தொற்றுநோய், புற்றுநோய் அல்லாத வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் அல்லது சிஸ்ட் எனப்படும் கட்டிகள், கர்ப்பகாலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் செர்விக்கல் செல்களில் புற்றுநோய் ஏற்படுகிறது. எச்.பி.வி என்ற வைரஸ்கள் மூலம் வரும் தொற்றுநோய், உடலின் எதிர்ப்பு சக்தியால் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத செல்கள் பாதிக்கப்பட்டவையாக மாறி, புற்றுநோய் உண்டாக முதல்நிலை ஆகிறது. இதை துவக்க நிலையில் கண்டு பிடிக்காவிட்டால், செர்விக்ஸ் கேன்சர் செல்களின் அமைப்பை சிதைக்கும் நிலைக்கு மாறுகிறது. எச்.பி.வி., வைரஸ் மிகச்சாதாரணமாக காணப்படுபவை. இதில் 100 வகை உள்ளன. இதில் 30 வகை தவறான உடலுறவு மூலம் பரவுகின்றன. இதில் 15 வகை மிக அபாயகரமானதாகும்.
எச்.பி.வி., தொற்று நோய் உள்ளது என்பதை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஏனெனில், கர்ப்பப்பை பாதையில் ஏற்படும் உடலின் எதிர்ப்பு சக்தியால் தானே, இந்த நோய்த் தொற்று அழிந்துவிடுகின்றன. ஆயினும் மிகச்சிறிய அளவிலேனும் இந்த தொற்று, செல்களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இம்மாறுதலை உணர்ந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். கஅக கூஞுண்t எனப்படும் செல் பரிசோதனை மூலம், செல்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய முடியும். இந்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்வது நல்லது.
கேன்சர் வளர்ந்த நிலையில் காணப்படும் சில அறிகுறிகள்: மாதவிடாய், உடலுறவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை நேரத்தில் பிறப்புறுப்பில் அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அதிகளவில் கட்டி, கட்டியாக மாறுபட்ட உதிரப் போக்கு, மாதவிடாய் ஒட்டுமொத்தமாக நின்ற பின்னும் உதிரப்போக்கு, இடுப்பில் வலி, உடலுறவின்போது வலியுடன் அதிகளவு பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவப்பசை போன்றவை அறிகுறிகள். இதனால் பெண்கள் ஆண்டுக் கொருமுறை, பாப் ஸ்மியர் டெஸ்ட் மற்றும் 3 ஆண்டுக்கு ஒருமுறை எச்.பி.வி., சோதனை செய்தால், செர்விக்ஸ் கேன்சர் வரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
டாக்டர் என்.விஜயலட்சுமி ராம்சங்கர்,
கேன்சர் இன்ஸ்டிடியூட், அடையாறு

Thanks Engr.Sulthan
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவேசர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளைபாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்கவைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவானஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும்,தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால்,மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில்புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாகஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Dr.M.Sathick from Darulsafa
Thanks Br. Engr.Sulthan

Subscribe to:
Posts (Atom)