ஜகாத்:Tamil


Thanks to: THARJUMADAILY.COM

இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்

அல்லாஹ்
தன் திருமறையில் கூறுகின்றான் :
தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (அல்பகரா : வசனம் 110)

மேலும்
,
'அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும். " (98:5)
இப்னு உமர் (ரலி) அறிவித்து புகாரீ மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது - அவர்கள் கூறுகின்றார்கள் :
(அடிப்படைகளான) ஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, (ஐந்தான) அவற்றிலிருந்து ஜகாத் கொடுப்பதைக் கூறினார்கள்.
முஆத் (ரலி) அவர்களை யமன் தேசத்தின்பால் அனுப்பிய சம்பவம் புகாரீயில் பதிவாகியுள்ளது. அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (ஏகத்தும், தொழுகை ஆகிய முன் கூறப்பட்ட) அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து (கட்டுப்பட்டு) விட்டால், நிச்சயமாக அல்லாஹ் தர்மத்தை (ஜகாத்தை) அவர்களின் மீது கட்டாயக் கடமையாக்கியுள்ளான். அவர்களில் ஏழைகளாயிருப்போருக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! என்று கூறினார்கள்.
மேலும், ஜகாத்தை நிறைவேற்றுவதை விட்டவர், நிராகரிப்பில் உள்ளார் என்பது பற்றி உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான் :
ஆகவே அவர்கள் (தங்கள் பாவங்களிலிருந்து விலகிப்) பச்சாதபப்பட்டு, தொழுகையையும் நிறைவேற்றி, ஜகாத்தையும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்களுக்கு மார்க்கத்தில் சகோதரர்கள். (9:11)
தொழுகையை நிச்சயமாக நிறைவேற்றாது, ஜகாத்தையும் கொடுக்காதவர் நம்முடைய மார்க்கச் சகோதரர்களில் உள்ளவரல்லர் - அது மாத்திரமல்லாது நிராகரித்தோரில் அவர் உள்ளவராவார் என்பது பற்றி  இவ்வசனத்திலிருந்து விளங்கப்படுகின்றது.
எவற்றில் ஜகாத் கடமை?

தங்கம்
, வெள்ளி, வியாபாரச் சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.
தங்கம், வெள்ளி:
தங்கம், வெள்ளி எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அவற்றில் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும் உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப் அளவு 7.5 தோலா அதாவது 87.48  கிராமாகும். வெள்ளியின் நிஸாப் 52.50 தோலா அளவு அதாவது, 612.36 கிராமாகும். யார் தங்கத்திற்குரிய நிஸாப் அளவை வைத்திருக்கிறாரோ அவர் தன்னிடமுள்ளதில் இரண்டரை சதவீதம் ஜகாத் கொடுப்பது அவர் மீது கடமையாகி விடுகிறது.
ரொக்கப் பணமாகக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒருகிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.
வியாபாரச் சரக்குகளுக்குரிய ஜகாத்:
அசையாப் பொருள்ள, பிராணி, உணவு, பானம், கார் போன்றவற்றில் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடிய அனைத்திலும் ஜகாத் கடமையாகிறது. இவற்றில் ஜகாத்திற்குரிய நிபந்தனை : பணம் நிஸாப் எனும் உச்ச வரம்பை எட்டியிருக்க வேண்டும்.அவற்றை வெள்ளி, தங்கம் இவ்விரண்டில் ஒன்றின் கிரயத்திற்கு ஈடாக மதிப்பிட வேண்டும். அவற்றின் மொத்தக் கிரயத்தில் இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும்.
விளைபொருளுக்குரிய ஜகாத்:

சேமிக்கப்படக்
கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் மணிக்கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும் காய்கறிகளிலும் ஜகாத் கடமையில்லை.
விளைபொருள்கள் நிஸாப் எனும் உச்சவரம்பை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். ஜகாத்தின் அளவு 675 கிலோவாகும். கோதுமைக்குரிய நிஸாப் (உச்ச வரம்பு அளவு) 552 கிலோவாகும். ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பது இவற்றில் நிபந்தனையில்லை.
கால்நடைகளுக்குரிய ஜகாத்:
கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும்.
• நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடு இவற்றின் நிஸாப் நாற்பது. மாட்டின் நிஸாப் முப்பது. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.
• இவை உரிமையாளரின் கைக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
• இக்கால்நடைகள் வருடத்தில் அதிக நாட்கள் வெளியே சென்று மேய்ந்ததாக இருக்க வேண்டும். தீனி கொடுத்து வளர்க்கப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்கான தீனி விலைக்கு வாங்கப்பட்டவையாகவோ இருந்தால் அல்லது அவற்றுக்கான தீனியை உரிமையாளரே சேகரிக்கின்றார் என்றால் இதுபோன்ற கால்நடைகளுக்கு ஜகாத் கடமையில்லை. ஆனால் இவை வருடத்தில் அதிக நாட்கள் மேய்ந்தவையாக இருந்தால் ஜகாத் கடமையாகும்.
• அவை பணியில் ஈடுபடுத்தப்படாதவையாக இருக்க வேண்டும். அவற்றின் உரிமையாளன் அவற்றை விவசாயத்திலோ அல்லது சுமை தூக்கவோ அல்லது வேறு வேலைகளுக்கோ அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஒட்டகம்:
ஜகாத்திற்குரிய நிஸாப் ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் ஒட்டகத்தில் ஜகாத் கடமையாகும். ஒரு முஸ்லிமிடம் ஐந்துக்கு மேல் ஒன்பது வரை ஒட்டகங்கள் அவனது உடமையிலிருந்தால் ஓர் ஆண்டு நிறைவடைந்திருந்தால் அவற்றில் ஒரு ஆடு ஜகாத் கடமையாகும். பத்துக்கு மேல் பதினான்கு வரை இருந்தால் அவற்றில் இரண்டாடு கடமையாகும். பதினைந்திற்கு மேல் பத்தொன்பத வரை மூன்றாடுகள். இருபதிற்கு மேல் இருபத்து நான்கு வரை நான்கு ஆடுகள். இருபத்தைந்திற்கு மேல் முப்பத்தைந்து வரை ஒரு வயது பூர்த்தியான பெண் ஒட்டகம். இது அவனுக்குக் கிடைக்கவில்லையானால் இரு வயது பூர்த்தியான ஒரு ஆண் ஒட்டகம். 36 க்கு மேல் 45 வரை இருவயது பூர்த்தியான பெண் ஒட்டகம். 40 க்கு மேல் 60 வரை மூன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 61க்கு மேல் 75 வரை நான்கு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 76 க்கு மேல் 90 வரை இரு வயது பூர்த்தியான இரு பெண் ஒட்டகம். 91க்கு மேல் 120 வரை மூன்று வயது பூர்த்தியான இரு ஆண் ஒட்டகங்கள். இதற்கு மேல் அதிகமானால் ஒவ்வொரு நாற்பதுக்கும் இரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். ஒவ்வொரு ஐம்பதுக்கும் மூன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். கீழ்க்காணும் அட்டவணை ஒட்டகத்திற்குரிய ஜகாத்தை தெளிவுபடுத்துகிறது.
மாடுகள்:

ஒருவனிடம்
30 க்கும் மேல் 39 வரை மாடுகள் இருந்தால் ஒரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், 40 க்கும் மேல் 59 வரை இரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், 60 க்கு மேல் 69 வரை ஒரு வயது பூர்த்தியான இரண்டு காளைகளும், 70 க்கும் மேல் 79 வரை இரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், ஒரு வயது பூர்த்தியான ஒரு காளையும் பின்னர் ஒவ்வொரு 30க்கும் ஒரு வயது பூர்த்தியான ஒரு காளையும், ஒவ்வொரு 40 க்கும் ஒரு வயது பூர்த்தியான பசுவும் கொடுக்க வேண்டும்.
ஆடுகள்:
ஒருவனிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அவன் ஒரு ஆடு கொடுப்பது கடமையாகும். 121 முதல் 200 வரை இரு ஆடுகளும், 201 முதல் 300 வரை இருந்தால் மூன்று ஆடுகளும், 301 முதல் 400 வரை நான்கு ஆடுகளும், 401 முதல் 500 வரை ஐந்து ஆடுகளும் கொடுக்க வேண்டும். பின்னர் இதற்கு மேல் அதிகமாகும் பட்சத்தில் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் சராசரி ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.

ஜகாத்
பெறத் தகுதியானவர்கள்:
அல்லாஹ் கூறுகின்றான் :
(ஜகாத் என்னும்) தான தர்மங்களெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் இந்த தானதர்மங்களை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்களது உள்ளம் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்கும் உரியனவாகும். (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிகக் ஞானமுடையவன். (9:60)
அல்லாஹ் ஜகாத் பெறத் தகுதியான எட்டு வகைக் கூட்டத்தினரை விளக்கிக் கூறியுள்ளான். இஸ்லாத்தில் ஜகாத் சமுதாயத்தையும் தேவையுடையோரையும் சென்றடைகின்றது. ஏனைய மார்க்கங்களிலுள்ளது போல - மார்க்க விற்பன்னர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட மாட்டாது.
1) ஃபகீர் (ஏழை) :
உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கும் குறைவாகப் பெற்றிருப்பவர்
2) மிஸ்கீன் :
உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கு மேல் பெற்றிருப்பவர். எனினும் அவர் போதுமான முழுமையான அளவைப் பெற்றுக் கொள்வதில்லை. இவர்களுக்கு பல மாதங்களுக்கான அல்லது ஒரு வருடத்தில் போதுமான அளவிற்குரிய பணம் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்.
3) ஜகாத் தொகையை வசூலிப்பவர்கள் :
ஜகாத் தொகையை செல்வந்தர்களிடமிருந்து சேகரிப்பதற்காக ஆட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள். அவர்கள் செல்வந்தர்களாயிருந்தால் அவர்களது அந்தஸ்த்திற்கேற்ப அவர்களது வேலைக்குரிய கூலியைக் கொடுக்க வேண்டும்.
4) உள்ளம் ஈர்க்கப்பட்டவர்கள் :
தம் மக்களிடத்தில் மரியாதைக்குரிய தலைவர்களில் எவர்கள் இஸ்லாத்திற்கு வருவார்கள் என்றோ முஸ்லிம்களுக்குத் தொல்லை தராமலிருப்பார்கள் என்றோ எதிர்பார்க்கப்படுகிறதோ அத்தகையவர்கள். இவ்வாறே இஸ்லாத்தில் புதிதாக வந்தவர்களுக்கும் அவர்களது உள்ளங்கள் இஸ்லாத்தின்பால் நேசமாக்கப்படுவதற்காகவும், அவர்களின் உள்ளங்களில் ஈமான் உறுதியாவதற்காகவும் அவர்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
5) அடிமை மீட்பு (சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு)
அடிமைகளை உரிமைவிடுவதற்காகவும் எதிரிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகவும் ஜகாத் கொடுக்கப்பட வேண்டும்.
6) கடன்பட்டவர்கள் :
இவர்களுடைய கடன்; அடைப்பதற்காக ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆயினும் முஸ்லிம்களாயிருப்பதும், கடனை அடைப்பதற்கு வசதியுள்ள செல்வந்தர்களாக இல்லாமலிருப்பதும், அவர்களது கடன் பாவத்திற்குரியதாக இல்லாமலிருப்பதும் தற்காலிக கடனாக இருப்பதும் விதிமுறையாகும்.
7) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவர்களுக்கு:
ஊதியத்தை எதிர்பார்க்காமல் வணக்கமாகக் கருதி போர்புரிபவர்கள். அவர்களின் செலவிற்காக அல்லது ஆயுதங்கள் வாங்குவதற்காக ஜகாத் கொடுக்க வேண்டும். மார்க்கக் கல்வியைத் தேடுவதும் ஜிஹாதைச் சேர்ந்தது தான். மார்க்கக் கல்வியில் ஈடுபவடுவதை நாடும் ஒரு மனிதன் தன்னிடம் பொருளாதார வசதியில்லாமலிருக்குமானால் அவன் மார்க்கக் கல்வியைத் தேடுவதில் ஈடுபடுமளவிற்கு போதுமான தொகையை மட்டும் ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பது கூடும்.
8) வழிப்போக்கன் :
ஊருக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்று விட்ட ஒரு பயணி. அவனது ஊரில் அவன் செல்வந்தனாக இருந்தாலும் அவன் ஊர் போய்ச் சேருமளவிற்கு ஜகாத் தொகையிலிருந்து கொடுக்க வேண்டும்.
ஜக்காத்தின் நிதி பள்ளிகட்டுவதற்கும் சாலைகளை சீர்படுத்துவதற்கும் செலவிடுவது கூடாது.
வாடகைக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள்:
வாடகைக்கான கட்டடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஜகாத் கடமையில்லை. எனினும் வாடகைப் பணம் நிஸாப் (உச்சவரம்பு) எனும் உச்சவரம்பை எட்டியிருந்து ஓராண்டு பூர்த்தியாகி விடுமானால் அதில் ஜகாத் கடமையாகும். உதாரணமாக ஒருவன் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு அதன் வாடகையை எடுத்துக் கொள்கிறான். அவன் வாடகையாக எடுத்துக் கொண்ட தொகைக்கோ அல்லது அதில் சிறிதளவுக்கோ அவை ஜகாத்தின் அளவை எட்டும் பட்சத்தில் - ஓராண்டு பூர்த்தியாகி விடுமானால் அதில் ஜகாத் கடமையாகும்.

விடுதலைப்போரில் வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் – வீர வரலாறு!


ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிட ம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சி யத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது.
பேகம் ஹஜ்ரத் மஹல்
1857-இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலை மையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கி லேயருக்கு எதிராக ஒருங்கிணைந்தபோ து, அதில் அரசாண்ட இரண்டு வீர மங்கை யர் இருந்தனர். ஒருவர் ஜான்சி ராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திர ப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறு நிலப் பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் – தேசாபிமானம் – தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப்பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரை ச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹ லிடம் ஒப்படைக்கப்பட்டது.
.. குழப்பமான நிலையிலும் உறுதியும் திற மையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர் வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந் து அவரது இணையற்ற பெருமை வெளி யாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத் தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாரா ட்டியுள்ளனர்.*
1857 – இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்று கை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.
பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல் வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இர ண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கி ல சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்ற னர்.**
பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றி ய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகு ந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப் படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மை யான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந் தவர்கள்.***
1858 மார்ச் 6ஆம் தேதி 30 ஆயிரம் துருப்பு களுடன் வந்த மேஜர் காலி ன் படையோடு ஐந்துநாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப் போரில் மாமன்னர் இளவல்களின் தலை களைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல் லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவா ளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறி னார். பிதா வ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபா ளத்திற்குள் தலைம  றைவானார்.
பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவ ர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந் தால் நிம்மதியாக சகல சௌபாக் கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண் ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடு தலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தை யும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகு ம்.
போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை
பேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீ ஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீர மங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 – இல் நடை பெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*
1938 – இல் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னா வும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின் னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்தி ருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட் டி அளித்தார்.
அப்பேட்டியில்:
என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கி றாள். ஹிந்து-முஸ்லிம்ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். – என்று கூறியவர். தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப் பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.** என் தோள்களின் மீது இர ண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன � என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலா ஜிபானு என்ற ஃபீயம்மாள் தான், கை ராட்டையில் நூற்ற நூலால் நெய்யப் பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்ட வர். தன் கையால் நெய்த துணியை க் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத் ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளு ங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந் தது.சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடை யாளமான துணிக்கு �கதர்� என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போ ராட்ட வரலாற்றுக்கு உண்டு.
இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமிய ப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்து ள்ளனர்.
- தினமணி
Source: http://vidhai2virutcham.com/2013/07/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/#more-37969