அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு!!!


லண்டன்,ஜன.23:காந்தஹார் மாகாணத்தில் அர்கந்தாத் நதியின் பள்ளத்தாக்கில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய குண்டுவீச்சில் ஒரு கிராமமே அழிந்து போனதாக செய்தி ஒன்று கூறுகிறது.

தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறித்தான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டீஷ் பத்திரிகையான டெய்லி மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இக்கிராமத்திலிருந்து போராளிகளை விரட்டியடிக்க இரண்டு முறை நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அக்கிராமத்தையே முற்றிலும் அழித்தொழிக்க அந்நிய ஆக்கிரமிப்பு கூட்டுப்படையின் கமாண்டர் லெஃப்டினண்ட் கர்னல் டேவிட் ஃப்ளின் மூளையில் உதித்த கொடூர எண்ணத்தினால் அந்த கிராமத்தையே அழித்தொழிக்க உத்தரவிட்டார்.

குண்டுவீச்சிற்கு முன்பும் பிறகும் எடுத்த புகைப்படங்களை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டரோக் கலோசே (Tarok Kolache) என்ற ஆப்கான் கிராமம்தான் அமெரிக்க வெறி ராணுவத்தின் அழித்தொழிப்புக்கு ஆளாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பிறரை அக்கிராமத்தின் பக்கம் அனுமதிக்காததால் எத்தனை சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. 25 டன் குண்டுகளை அமெரிக்க பயங்கரவாத ராணுவம் அக்கிராமத்தின் மீது வீசியுள்ளது.

பட்டர் சிக்கன் மற்றும் தந்தூரிகளாக உருமாறும் செத்த கோழிகள்!!!



டெல்லியில் செத்த கோழிகளை வாங்கி பிளாட்பார கடைகள் உணவு தயாரிக்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது. இது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அசைவ பிரியர்கள் சூடு பறக்க சிக்கன் சூப், சில்லி சிக்கன் என விதவிதமாக பிளாட்பார கடைகளில் வாங்கி உண்பார்கள். டெல்லியிலும் தெருவோர கடைகளில் அசைவ உணவுகளின் விற்பனை மிகவும் அமோகமாக இருக்கும்.
டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் மார்க்கெட் பகுதியில், 3 கிலோ எடையுள்ள உயிர்கோழி ரூ.420 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுகிறது. இதற்காக, இரவு முழுவதும் ஏராளமான லாரிகளிலிருந்து, பிராய்லர் கோழிகள் இறக்கப்படும்.
போக்குவரத்தின் போது, ஒவ்வொரு லாரிகளிலும் இருந்து சராசரியாக 15 முதல் 20 கோழிகள் வரை உயிர் இழக்கின்றது. இந்த கோழிகள் குப்பையில் எறியப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோழிகளை கிலோ ரூ.15 வீதம், 3கிலோ எடையுள்ள கோழிகளை ரூ.50க்கு வாங்குவதற்கு மார்க்கெட்டில் ஒரு கூட்டமே காத்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் பகர்கஞ்ச், கரோல் பாக் பகுதிகளில் ஓட்டல், தெருவோர கடைகள் நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி டிரைவர்கள், கிளீனர்களிடம் செத்த கோழிகளை இவர்கள் பேரம் பேசி வாங்குவதை தினமும் அதிகாலையில் பார்க்கலாம்.
இது குறித்து ஓட்டல் வியாபாரி ஒருவர் கூறுகையில், “உணவு பொருட்கள் விலை அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் விலையை ஏற்றினால், வியாபாரம் படுத்துவிடும்".
ஒரு பிளேட் சிக்கன் 30 ரூபாய். கோழிக்கறியை கிலோ ரூ.140க்கு வாங்கி எப்படி வியாபாரம் முடியும். மலிவு விலைக்கு கோழிகளை வாங்கினால் மட்டுமே நல்ல முறையில் வியாபாரம் நடக்கும் என்று கூறினார்.
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்

போலி' அரசியல் கட்சிகள்!



தேர்தல் ஆணையம் என்கிற அமைப்பு ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்பதும், அது சக்திவாய்ந்த அதிகாரம் படைத்த அரசியல் சட்ட அமைப்பு என்பதும் டி.என். சேஷன் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதுதான் பெருவாரியான பொதுமக்களுக்கே தெரியவந்தது. வானளாவிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்பதையும், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டிய தேவையில்லை என்பதையும் டி.என். சேஷன் உணர்த்தியபோது, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் கைகோத்துத் தேர்தல் கமிஷனருக்குக் கடிவாளம் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். தேர்தல் கமிஷன் மூன்று பேர் கொண்ட குழுவாக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற பதவியும் ஏற்படுத்தப்பட்டது.
டி.என். சேஷனுக்குப் பிறகு பதவி வகித்த தலைமைத் தேர்தல் ஆணையர்கள் அனைவருமே, ஏதாவது ஒருவிதத்தில் இந்தியத் தேர்தல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், முறையாகத் தேர்தல்கள் நடத்தப்படவும், தவறுகள் திருத்தப்படவும் தங்களது பங்களிப்பை நல்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட எம்.எஸ்.கில், லிங்டோ, நவீன் சாவ்லா போன்றவர்கள்கூட தலைமைத் தேர்தல் ஆணையர்களாகப் பணிபுரிந்தபோது தாங்கள் வகித்த பதவிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாமல் பணியாற்றினர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியும் இதற்கு விதிவிலக்கல்ல.
குரேஷி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு வெளிப்படுத்தி இருக்கும் பல கருத்துகள் பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. வாக்காளர்களின் வயது வரம்பைப் பதினாறாகக் குறைக்க வேண்டும் என்கிற அவரது கருத்தைத் தவிர, ஏனைய கருத்துகள் அனைத்துமே மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு, தேர்தல் விதிகளில் தக்க மாற்றங்களை ஏற்படுத்த உதவுபவை.
2003-ல் இயற்றப்பட்ட ஒரு சட்டம் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 5%தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க வழிகோலியது. இந்த நன்கொடைகள் வங்கிக் காசோலைகள் மூலம் தரப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நன்கொடைகள் முழுமையாக வரிவிலக்குப் பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
தங்களது பெயர் வெளியில் தெரியாமல், அரசியல் கட்சிகளுக்கு ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்க ஒரு நிறுவனம் விரும்பினால், தான் நன்கொடையாக வழங்கிய தொகைக்கு வரி விலக்குக் கோராமல் இருந்தாலே போதும். இதைத்தான் இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஊழலின் ஊற்றுக்கண் என்று சுட்டிக்காட்டித் திருத்தச் சொல்கிறார்.
ஏர்டெல் நிறுவனம் கடந்த 2008-09-ல் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 10 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இதேபோல, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி என்று எல்லா கட்சிகளுமே பெரிய தொழில் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்றிருக்கின்றன. மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பெரிய தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாகச்  சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நன்கொடைகளைப் பெறக்கூடும் என்பதுதான் இந்தச் சட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய பலவீனம்.
முந்தைய தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி கடந்த 2006 ஜூலை 31 அன்றே பிரதமருக்கு இந்த நன்கொடைகளின் பின்னணிகள் பற்றி சந்தேகம் இருப்பதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை அடியொற்றி, இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இந்தச் சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பு நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தேர்தல் அறக்கட்டளைகளை உருவாக்கி, இந்த அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கு மத்திய அரசு வழிகோலி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியே நடக்கிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி.
சமீபகாலமாகத் தொழில் அதிபர்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துவோர், சாராய அதிபர்கள் என்று பலரும் அரசியல் கட்சிகளைத் தொடங்குவதன் ரகசியமே, கணக்கு வழக்கில்லாமல் தங்களிடம் குவியும் பணத்துக்கு வரி விலக்குப் பெறுவதற்குத்தான். இந்தியாவில் இருக்கும், சுமார் 1,200 கட்சிகளில் 200 கட்சிகள் மட்டுமே, அதாவது 16% மட்டுமே, உண்மையாக முழுநேர அரசியலில் ஈடுபட்டிருப்பவை. ஏனைய கட்சிகள் அனைத்தும், அளவுக்கு அதிகமாகத் தாங்கள் சேர்க்கும் பணத்தை அரசியல் நன்கொடை என்கிற பெயரில் தங்களால் நடத்தப்படும் "செயல்படாத' அரசியல் கட்சிக்கு வாரி வழங்கி, அரசை ஏமாற்றுகின்றன என்று துணிந்து வெளிப்படுத்தி இருக்கிறார் குரேஷி.
இதுபோன்ற கட்சிகள் தாங்கள் நன்கொடையாகப் பெற்ற பணத்தை கட்சியின் பெயரில் இடங்களை வாங்குவது, நகைகள் வாங்குவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று பயன்படுத்துவதாகவும் அதனால் இந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்து. வருமானவரிச் சட்டத்தைப் "போலி' அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டால், வருமான வரி விலக்குப் பெறுவதற்காகவே புதியதாகப் பல கட்சிகள் காளான்போல் உருவெடுக்கும் ஆபத்து இருப்பதைச் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார் குரேஷி.
அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடாத "போலி' கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் கணக்கை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கோ, தலைமைத் தணிக்கை ஆணையருக்கோ வழங்கப்பட வேண்டும். அதுதான் இதற்கு ஒரே தீர்வு!

துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி


26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரசு நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறி, இறுதியில் புரட்சி வென்றது. “இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!” என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.
துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிகலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவுதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.
உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. “மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று” வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளைத்தான் பரப்பி வந்தன. “கலாச்சார மோதல்” தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். “அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை,” என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.
மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரசு அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள்.
துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.
துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிதுனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். “முஸ்லிம் நாடுகளான” துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது.
“சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.
2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.
எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.
துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, “மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக” நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது.
_________________________________________________________
- கலையரசன்
_________________________________________________________

Presidents in Their Young Age





Presidents in Their Young Age
Barack Obama, 3 Years Old, With Grandfather, 1965

Photos of some of the most famous US presidents when they were just kids. There is nothing special about them and there is no way to know, just by looking, that these boys would grow up to become the leader of the most powerful country in the free world. More images after the break...
Presidents in Their Young Age

George W. Bush, 9 Years Old, With His Mother and Father, 1955
Presidents in Their Young Age

Bill Clinton, 5 Years Old, 1952

Presidents in Their Young Age
George H.W. Bush, 5 Years Old, With Sister Mercy, 1929
Presidents in Their Young Age

Ronald Reagan, 12 Years Old, 1923

Presidents in Their Young Age
Jimmy Carter, 12 Years Old, With Dog Bozo, 1937

Presidents in Their Young Age
Gerald Ford, 6 Years Old, With His Half-Brother, Tom, 1920
Presidents in Their Young Age

Richard Millhouse Nixon, 4 Years Old, 1917

Presidents in Their Young Age
Lyndon Johnson, 6 Months Old, 1909
Presidents in Their Young Age

John F. Kennedy, 10 Years Old, 1927
Presidents in Their Young Age

Dwight D. Eisenhower (Center) With Friends, 17 Years Old, 1907
Presidents in Their Young Age

Harry S. Truman, 6 Months Old, 1884

Presidents in Their Young Age
Franklin Delano Roosevelt, 3 Years Old, 1885
Presidents in Their Young Age
Abraham Lincoln, Age Unknown

கேரளாவில் மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்!!!


அழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்!!!


 ஜன.17:பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு தடை செய்தது.

நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் இணைக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அவசர உலகின் ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவது அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா? இந்த நிலை நமது நாட்டுக்கும் வரவேண்டுமா?
MSAH



என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்

பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு


ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
...

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?


இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!


வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!


குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!

வேலன்-இலவச போல்டர் லாக் பாக்ஸ்.


அலுவலகம் ஆகட்டும் - இல்லம் ஆகட்டும் - நமக்கு என்று தனிப்பட்ட தகவல்கள் நிச்சயம் இருக்கும். அதை மற்றவர்களிடம்இருந்துமறைத்து வைக்கலாம். ஆனால் இல்லாமல் செய்ய முடியுமா? முடியும். போல்டர்பாக்ஸ் எனப்படும் இதில் போல்டர்களை போட்டுவைத்து பின்னர் போல்டர்கள் தேவையானால் இல்லாமல் செய்து தேவைபடும்பேர்து பாஸ்வேர்ட் கொடுத்து ஓப்பன் செய்து பார்க்கலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Set கிளிக் செய்தால் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள போல்டர்கள் ஓப்பன் ஆகும். தேவையான போல்டரை தேர்வுசெய்துகொள்ளுங்கள். இதில் உள்ள Advanced கிளிக்செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 8 டேப்புகள் இருக்கும்.இதன் Skin -ஐ வேண்டிய நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.  
நான் மாற்றிய கோல்டன் நிறத்தை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பாஸ்வேர்டும் இதில் கொடுத்துதான் நாம் நமது தகவல்களை சேமிக்கவேண்டும்.நமது நினைவிற்கு தேவையான கேள்வியின் வாக்கியத்தை நாமே அமைத்து அதன் விடையை தட்டச்சு செய்தால்தான் நமக்கு போல்டர் ஓப்பன் ஆகும்படி செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
மற்ற சாப்ட்வேரில் இல்லாத கூடுதல் வசதி என்றால் நீங்கள் இதன்மூலம் லாக் செய்த போல்டரை தேவையான டிரைவில் சென்று தேடினாலும் கிடைக்காது. மறைந்து இருக்கும். மீண்டும் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து அன்லாக் செய்து ஓப்பன்செய்தால்தான் உங்களுக்கு அந்த போல்டர் டிரைவில் தெரியும். பர்சனல் தகவல்கள் வைத்துகொள்ள விரும்புபவர்கள் இதனை உபயோகிக்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.

Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம்


னவரி 1, 2011
சுதந்திர மென்பொருள் வரிசையில் டாப் 6 முதல் டாப் 10 வரை
உள்ள மென்பொருட்களைப்பற்றியும் அதை எப்படி தரவிரக்குவது
என்பதைப்பற்றியும் தான் இந்தப்பதிவு.
Suthanthira-menporul டாப் 6 – StarDict
Suthanthira-menporul 
டாப் 7 – Miro
Suthanthira-menporul 
டாப் 8 – Vuze
Suthanthira-menporul 
டாப் 9 – Pidgin
Suthanthira-menporul 
டாப் 10 – Dev C++
சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஆறாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் StarDict. ஒரு டிக்ஸ்னரியில்
1000 
டிக்ஸ்னரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரிய வார்த்தைகள்
அதற்கான விளக்கத்துடன் உள்ளது.இந்த மென்பொருளின் கூடுதல்
சிறப்பம்சம் TTS (text-to-speak) இதில் தேடப்படும் வார்த்தைகளை
நாம் காதால் கேட்கலாம். Download என்பதை சொடுக்கி இந்த
மென்பொருளை தரவிரக்கவும்.
Download
சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஏழாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Miro.மிகத் துல்லியமான
காட்சிகளை கொடுக்ககூடிய வீடியோ பிளேயர். அனைத்துவிதமான
வீடியோ கோப்பையும் நாம் இந்த மென்பொருள் கொண்டு திறக்கலாம்.
யூடியுப்-ல் உள்ள வீடியோவை தேடி அதையும் High Quality-ல்
பார்ப்பதும் இதன் கூடுதல் சிறப்பு. Download என்பதை சொடுக்கி
இந்த மென்பொருளை தரவிரக்கவும்.
Download
சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் எட்டாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Vuze.  டோரண்ட்(torrents)கோப்புகளில் இருக்கும் வீடியோவை தேடித்தரவும் தரவிரக்கவும்
உதவும் மென்பொருள். டோரண்ட் கோப்புகளை வழக்கமான
வேகத்தை விட அதிவேகமாக தரவிரக்கலாம் என்பதும் இந்த
மென்பொருளின் கூடுதல் சிறப்பு. Download என்பதை சொடுக்கி
இந்த மென்பொருளை தரவிரக்கவும்.
Download
சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஒன்பதாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Pidgin. Yahoo முதல் Gtalkவரை அனைத்து விதமான சாட்டிங் (அரட்டை) -ம் இந்த
மென்பொருள் மூலம் செய்யலாம். மில்லியன் பயனாளர்கள் இந்த
சாட்டிங்-ஐ பயன்படுத்துகின்றனர் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
Download 
என்பதை சொடுக்கி இந்த மென்பொருளை தரவிரக்கவும்.
Download
சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் பத்தாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Dev C++.  சி++ மொழியை
கற்க விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக
இருக்கிறது.Class Browser ,Tool Manager,Quickly create Windows,
console, static libraries and DLLs 
போன்றவையும் அமைந்திருப்பது
இதன் தனிச்சிறப்பு. Download என்பதை சொடுக்கி இந்த மென்பொருளை
தரவிரக்கவும்.
Download