மும்பை தாக்குதல்; தொலைபேசி பதிவுகளில் திருத்தம்,
காவல் துறையில் கறுப்பு ஆடுகளா.....? - வினிதா காம்தே!
மும்பை மாநகரில் 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 தேதி நடைபெற்ற தாக்குதலில் முக்கிய ஆதாரங்களில் ஒன்று தொலைபேசி அழைப்பு பதிவுகள்.
தாக்குதல் தொடங்கிய இடத்திற்கு அருகில் உள்ள வடக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதியப்பட்ட அழைப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அந்த நேரத்தில் நடைப்பெற்ற குற்றப்பிண்ணனியின் முடிச்சுகளை ஓரளவிற்கு அவிழ்த்தெறிய இந்த தொலைபேசி அழைப்புகள் உதவும்.
ஆனால் தகவல் பெறும் சட்டத்தின் படி கிடைத்த தகவலின் படி ஒரே அழைப்பிற்க்கு கிடைத்ததோ இருவேறு தொலைபேசி அழைப்பு பதிவு தகவல்கள்?!
அதே சமயம்,நீதிமன்றத்தில் காவல் துறை நீதிமன்றத்தில் சமர்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதோ இந்த இரண்டு தகவல்களும் அல்லாத மூன்றாவது ஒரு தகவல் ஆகும்.
தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் தீவிரவாதிகளுடன் போராடிய காவல்துறை அதிகாரிகள் தங்களூக்குள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களில் தான் இந்த குளறுபடிகளும் திருத்தல்களும் நடைபெற்று இருக்கின்றன.
தீவிரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தேவிற்க்கே இந்த அணுபவம் கிடைத்திருக்கிறது என்பது அதிர்ச்சியை அளிக்க கூடிய மற்றொரு செய்தி!
தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் பதியப்பட்ட அனைத்து பதிவு குறிப்புகளும் போலியானதா..?என்ற சந்தேகம் எழ ஆரம்பித்து இருக்கிறது என்றும் கையால் திருத்தி எழுதப்பட்ட குறிப்புகளிலும்,குறிப்பிடப ்பட்டிருக்கும் சமயங்களிலும் வித்தியாசம் உள்ள மூன்று தொலைபேசி அழைப்புகள் எவ்வாறு சேர்க்கப்பட்டு இருக்கிறது என்று அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்று வினிதா காம்தா கேள்வி உயர்த்தியிருக்கிறார்.
இது குறித்து மாநில முதன்மை தகவல் பெறும் சட்டத்தின் இயக்குனரை சந்தித்து சுட்டிகாட்டிய போது,சம்பவத்தை விசாரனை செய்து ஆதார குறிப்புகளில் தில்லுமுல்லுகள் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று முதன்மை தகவல் பெறும் சட்டத்தின் இயக்குனர் ரத்னாகர் கெய்காத்,துனை உள்துறை செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இது குறித்து உத்திரவினையும் பிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்த செய்திகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும் வினிதா காம்தேவிற்கு இப்படி ஒரு ஆதார குறிப்புகள் கிடைத்திருப்பதன் பிண்ணனியில் ஏதேனும் சதி திட்டங்கள் இருக்கிறதா என்றும் அந்த உத்திரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அஜ்மல் கசாப் உள்படயுள்ளவர் துப்பாக்கி சூடு நடத்திய காமா மருத்துவமனையில் நடைப்பெற்ற சம்பவங்களையும் விமர்சிக்கிறது இந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹராஸ்டிரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த கர்கரே,கிழக்கு பகுதி துனை இயக்குனர் அசோக் காம்தே,துப்பாக்கி சுடுவதில் நிபுனரான விஜய் சலஸ்கர் ஆகியோர்களும் கொல்லப்பட்டதும் காமா மருத்துவமனை பகுதியில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
*இவர்களது கொலையில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு உண்டு என்றும் காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் இவர்களின் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற விமர்சனமும் உண்டு.
மஹாராஸ்டிரா முன்னாள் ஐ.ஜி எஸ்.எம் முஸ்ரப் எழுதிய கர்கரேயை கொன்றவர்கள் யார்? என்ற நூலில் இது குறித்த விமர்சனங்களை உறுதி படுத்தும் விதமாக தற்போதைய இந்த புதிய செய்தியகள் வெளியாகியுள்ளன.
பதியப்பட்ட தொலைபேசி அழைப்புகளில் சமய வித்தியாசங்கள் சில நிமிட வித்தியாசங்கள் தான் என்றாலும்,சம்பவங்களின் முக்கியத்துவத்தை வைத்து பார்க்கும் போது அது மிகவும்
பிராதானப்பட்ட ஒன்று என்று வினிதா காம்தே தெரிவிக்கிறார்.
கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போதுமான உதவிகள் செய்து கொடுக்காதற்காகவா இத்தகைய குறிப்பு திருத்தல்கள் என்றும் வினிதா காம்தே கேள்வியை எழுப்பினார்.
தாக்குதல் நடைப்பெற்ற சமயத்தில் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகளுக்கு போதுமான உதவிகள் செய்து தரப்படவில்லை என்கிற விமர்சனமும் உண்டு.
தகவல் பெறும் சட்டத்தின் மூலம் கிடைத்த இரண்டு தொலைபேசி அழைப்பு பதிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட குறிப்புகளையே காவல்துறை சமர்பித்த குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றும் வினிதா காம்தே குற்றம் சாட்டினார்.
தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்புகளில் திருத்தம் காண்பித்து மஹராஸ்டிரா அரசு ஏதோ ஒன்றை மறைத்து வைக்க முயலுகிறது என்கிற சந்தேகமும் எழு தொடங்கியுள்ளது
தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்புகள் கேட்டு வினிதா காம்தே முதன் முதலில் சமர்பித்த கோரிக்கையை மும்பை காவல்துறை தள்ளுபடி செய்தது,
அதன்பின் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிக்கை சமர்பித்த பிறகு வினிதா காம்தேவின் கோரிக்கையை மும்பை காவல் துறை ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு 2009 நவம்பர் ஐந்தாம் தேதி முதல் தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்பு வினிதா காம்தேவுக்கு கிடைத்தது.
காவல் துறை எண் -100 விற்கு அழைத்த அழைப்புகளின் விபரங்கள் கேட்டபோதே இதே அழைப்புகளில் முன்பு கிட்டிய ஆதார குறிப்புகளில் இருந்து மாறுபட்ட ஆதார குறிப்புகள் வினிதா காம்தேவிற்கு கிடைத்திருக்கிறது.
புதிய குறிப்புகளில் கையெழுத்து குறிப்புகளும்.அழைத்த நேர வித்தியாசங்களும் மாறுப்பட்டு இருக்கிறது.2010ஆம் ஆண்டு இரண்டாவது குறிப்புகளை வினிதா காம்தே பெற்றிருக்கிறார்.
ஏப்ரல் 24ஆம் தேதி நிதிமன்றத்தில் வழக்கின் வாதங்கள் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் இது குறித்த கேள்விகளுக்கு காவல்துறை துனை இயக்குனர் என்.டி.பவாருக்கு பதில் சொல்ல இயலவில்லை எனபதும் குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தியாகும்.
http://www.thejasnews.com/ #6552
http://www.thehindu.com/ news/national/other-states/ rti-reveals-two-different-c all-log-records-for-2611-a -third-one-in-the-charge-s heet/article4807535.ece
காவல் துறையில் கறுப்பு ஆடுகளா.....? - வினிதா காம்தே!
மும்பை மாநகரில் 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 தேதி நடைபெற்ற தாக்குதலில் முக்கிய ஆதாரங்களில் ஒன்று தொலைபேசி அழைப்பு பதிவுகள்.
தாக்குதல் தொடங்கிய இடத்திற்கு அருகில் உள்ள வடக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதியப்பட்ட அழைப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அந்த நேரத்தில் நடைப்பெற்ற குற்றப்பிண்ணனியின் முடிச்சுகளை ஓரளவிற்கு அவிழ்த்தெறிய இந்த தொலைபேசி அழைப்புகள் உதவும்.
ஆனால் தகவல் பெறும் சட்டத்தின் படி கிடைத்த தகவலின் படி ஒரே அழைப்பிற்க்கு கிடைத்ததோ இருவேறு தொலைபேசி அழைப்பு பதிவு தகவல்கள்?!
அதே சமயம்,நீதிமன்றத்தில் காவல் துறை நீதிமன்றத்தில் சமர்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதோ இந்த இரண்டு தகவல்களும் அல்லாத மூன்றாவது ஒரு தகவல் ஆகும்.
தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் தீவிரவாதிகளுடன் போராடிய காவல்துறை அதிகாரிகள் தங்களூக்குள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களில் தான் இந்த குளறுபடிகளும் திருத்தல்களும் நடைபெற்று இருக்கின்றன.
தீவிரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தேவிற்க்கே இந்த அணுபவம் கிடைத்திருக்கிறது என்பது அதிர்ச்சியை அளிக்க கூடிய மற்றொரு செய்தி!
தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் பதியப்பட்ட அனைத்து பதிவு குறிப்புகளும் போலியானதா..?என்ற சந்தேகம் எழ ஆரம்பித்து இருக்கிறது என்றும் கையால் திருத்தி எழுதப்பட்ட குறிப்புகளிலும்,குறிப்பிடப
இது குறித்து மாநில முதன்மை தகவல் பெறும் சட்டத்தின் இயக்குனரை சந்தித்து சுட்டிகாட்டிய போது,சம்பவத்தை விசாரனை செய்து ஆதார குறிப்புகளில் தில்லுமுல்லுகள் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று முதன்மை தகவல் பெறும் சட்டத்தின் இயக்குனர் ரத்னாகர் கெய்காத்,துனை உள்துறை செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இது குறித்து உத்திரவினையும் பிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்த செய்திகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும் வினிதா காம்தேவிற்கு இப்படி ஒரு ஆதார குறிப்புகள் கிடைத்திருப்பதன் பிண்ணனியில் ஏதேனும் சதி திட்டங்கள் இருக்கிறதா என்றும் அந்த உத்திரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அஜ்மல் கசாப் உள்படயுள்ளவர் துப்பாக்கி சூடு நடத்திய காமா மருத்துவமனையில் நடைப்பெற்ற சம்பவங்களையும் விமர்சிக்கிறது இந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹராஸ்டிரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த கர்கரே,கிழக்கு பகுதி துனை இயக்குனர் அசோக் காம்தே,துப்பாக்கி சுடுவதில் நிபுனரான விஜய் சலஸ்கர் ஆகியோர்களும் கொல்லப்பட்டதும் காமா மருத்துவமனை பகுதியில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
*இவர்களது கொலையில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு உண்டு என்றும் காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் இவர்களின் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற விமர்சனமும் உண்டு.
மஹாராஸ்டிரா முன்னாள் ஐ.ஜி எஸ்.எம் முஸ்ரப் எழுதிய கர்கரேயை கொன்றவர்கள் யார்? என்ற நூலில் இது குறித்த விமர்சனங்களை உறுதி படுத்தும் விதமாக தற்போதைய இந்த புதிய செய்தியகள் வெளியாகியுள்ளன.
பதியப்பட்ட தொலைபேசி அழைப்புகளில் சமய வித்தியாசங்கள் சில நிமிட வித்தியாசங்கள் தான் என்றாலும்,சம்பவங்களின் முக்கியத்துவத்தை வைத்து பார்க்கும் போது அது மிகவும்
பிராதானப்பட்ட ஒன்று என்று வினிதா காம்தே தெரிவிக்கிறார்.
கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போதுமான உதவிகள் செய்து கொடுக்காதற்காகவா இத்தகைய குறிப்பு திருத்தல்கள் என்றும் வினிதா காம்தே கேள்வியை எழுப்பினார்.
தாக்குதல் நடைப்பெற்ற சமயத்தில் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகளுக்கு போதுமான உதவிகள் செய்து தரப்படவில்லை என்கிற விமர்சனமும் உண்டு.
தகவல் பெறும் சட்டத்தின் மூலம் கிடைத்த இரண்டு தொலைபேசி அழைப்பு பதிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட குறிப்புகளையே காவல்துறை சமர்பித்த குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றும் வினிதா காம்தே குற்றம் சாட்டினார்.
தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்புகளில் திருத்தம் காண்பித்து மஹராஸ்டிரா அரசு ஏதோ ஒன்றை மறைத்து வைக்க முயலுகிறது என்கிற சந்தேகமும் எழு தொடங்கியுள்ளது
தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்புகள் கேட்டு வினிதா காம்தே முதன் முதலில் சமர்பித்த கோரிக்கையை மும்பை காவல்துறை தள்ளுபடி செய்தது,
அதன்பின் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிக்கை சமர்பித்த பிறகு வினிதா காம்தேவின் கோரிக்கையை மும்பை காவல் துறை ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு 2009 நவம்பர் ஐந்தாம் தேதி முதல் தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்பு வினிதா காம்தேவுக்கு கிடைத்தது.
காவல் துறை எண் -100 விற்கு அழைத்த அழைப்புகளின் விபரங்கள் கேட்டபோதே இதே அழைப்புகளில் முன்பு கிட்டிய ஆதார குறிப்புகளில் இருந்து மாறுபட்ட ஆதார குறிப்புகள் வினிதா காம்தேவிற்கு கிடைத்திருக்கிறது.
புதிய குறிப்புகளில் கையெழுத்து குறிப்புகளும்.அழைத்த நேர வித்தியாசங்களும் மாறுப்பட்டு இருக்கிறது.2010ஆம் ஆண்டு இரண்டாவது குறிப்புகளை வினிதா காம்தே பெற்றிருக்கிறார்.
ஏப்ரல் 24ஆம் தேதி நிதிமன்றத்தில் வழக்கின் வாதங்கள் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் இது குறித்த கேள்விகளுக்கு காவல்துறை துனை இயக்குனர் என்.டி.பவாருக்கு பதில் சொல்ல இயலவில்லை எனபதும் குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தியாகும்.
http://www.thejasnews.com/
http://www.thehindu.com/
No comments:
Post a Comment