Fardha

பர்தா எனும் அழகிய பண்பாடு...!
****************************

5. 6. 13 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் 
“பொக்கிஷம்” பகுதியில் மாதவிக் குட்டி என்று அழைக்கப்படும் 
கமலா தாசின் நேர்காணலை வெளியிட்டுள்ளது.


“நிர்வாண ஓவியங்களை வரைந்துகொண்டிருந்த கமலா தாஸ்
இப்போது இஸ்லாத்தைத் தழுவியுள்ளதாக
அதிரடியாக அறிவித்திருக்கிறார்”
என்று கூறிய விகடன் இதழ், பின்வரும் கேள்வியையும்
கமலாதாசிடம் முன்வைத்தது.


“இஸ்லாம் மதத்தில் அப்படி உங்களைக் கவர்ந்தது என்ன?”


“பர்தாதான். பர்தாவில் பெண் பாதுகாப்பாக உணர்கிறாள்.
பர்தா அணிவதால் அவர்களை ஆண்கள் அந்த அர்த்தத்தில்
வெறித்துப் பார்ப்பதில்லை. அழகைப் பிறர் வெறித்துப் பார்ப்பதைப்
பர்தா தடுக்கிறது” என்று அழகாகப் பதில் கூறியுள்ளார் கமலா தாஸ்.


எந்தக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரப் பறவையாகவே இருந்துவிட்ட
கமலா தாசையும் பர்தாதான் கவர்ந்திருக்கிறது.
இன்று ஏராளமான பிரிட்டிஷ் பெண்களையும் பர்தாதான் கவர்ந்துள்ளது.


இங்கிலாந்தில் எண்ணற்ற பெண்கள் இஸ்லாமியத் திருநெறியை
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சாதாரணப் பெண்கள் அல்லர்.
மெத்தப் படித்தவர்கள். சுதந்திரப் பறவைகளாக இருந்தவர்கள்.
நிறைய சம்பாதிப்பவர்கள்.
இஸ்லாத்தில் இவர்களை ஈர்த்த முக்கிய அம்சமும் பர்தாதானாம்..!


“பர்தா பெண்களுக்குக் கண்ணியம் அளிக்கிறது;
அதனால்தான் இறைநெறியை ஏற்றுக்கொண்டோம்”
என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள்.


கேரளாவின் கமலாதாசிலிருந்து இங்கிலாந்து பெண்கள் வரை
எல்லாருக்கும் பர்தா கண்ணியமாகத் தெரியும்போது
நம்ம ஊரின் சில “முற்போக்குவாதிகளுக்கு” மட்டும்
பர்தா பிற்போக்குத்தனமாய்த் தெரிவதன் இரகசியம் என்னவோ?

நன்றி சிராஜுல்ஹஸன்
SYA

No comments:

Post a Comment