காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.
கல்யாணத்து வர முடியாத பெரியவங்க, வயசு பெண்கள், மற்றும் கர்பிணிகள் இருக்கும் வீட்டுக்கு இந்த தாளத்தில் வைத்து உணவு கொடுப்பார்கள்..
செய்முறை:கறி- 1 கிலோ
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
தயிர் - அரை கப்கறிவேப்பிலை - சிறிது
பச்சமிளகாய் - 3-4
ரம்பை இலை - சிறிது (இருந்தால் போடுங்க)
மஞ்சள்தூள் - ஒருமேசைக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
காயல் கறி மசாலாத்தூள் - 6-7 மேசைக்கரண்டி காரம் கம்மியாக வேண்டும் என்பவர்கள் அளவினை கம்மி பண்ணவும். ( இந்த மசாலாத்தூள் இல்லாதவர்கள் தனி மிளகாய்த்தூள் - 3 கரண்டி , மல்லித்தூள் - 1கரண்டி, சீரகத்தூள் - 1/2கரண்டி சேர்க்கவும்.)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
தேங்காய்எண்ணெய் - 150 - 200 கிராம்
நெய் - 100 கிராம்
தேங்காய் - கால் மூடி
கசகசா - 4 தேக்கரண்டி
முந்திரி - 12
செய்முறை:
1. கசகசாவை முதலில் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து பின்னர் துருவின தேங்காய், முந்திரி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
2. கறியுடன் காயல் கறி மசாலாத்தூள் 1 தேக்கரண்டி போடவும். கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் க.பிலை, பச்சமிளாய் - 1 போட்டு விரவி 1/2 மணி நேரம் வைக்கவும்.
3.குக்கரில் எண்ணெய் , நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ரம்பைலை போட்டு தாளிக்கவும்.
4.பிறகு மீதியிருக்கும் வெங்காயம் போட்டு வதக்கவும், இஞ்சி பூண்டு பேஸ்ட், க.பிலை,ப.மிளாகாய் தக்காளி மஞ்சள்த்தூள், தனிமிளகாய்த்தூள் போட்டு வதக்காவும்.
5.வதங்கிய பின்பு விரவி வைத்த கறியை போடவும் அதன் மீது தயிரை ஊற்றிஅப்படியே விசில் போடாமல் மூடியினை மட்டும் போட்டு மூடி சிம்மில் 10நிமிடம் வைக்கவும்.
6. அதன்பின்பு அரைத்த தேங்காய் விழுதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மீதி இருக்கும் காயல் கறி மசாலாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
7 .கறி குழம்பு கொதி வந்த பின்பு இதனை ஊற்றவும். இதனுடன் நறுக்கிய வாழைக்காய் போடவும்
8.குக்கரில் வெயிட் போட்டு நன்றாக கறி வேகும் வரை 2 வீசில் ஹையிலும் 2 வீசில் சிம்மிலூம் வைக்கவும்..
பின் குறிப்பு: இதனை எங்க ஊர்ரில் குக்கரில் சமைக்கமாட்டார்கள். சட்டியில் தான் கறியினை வேக வைப்பார்கள். சட்டியில் வேக வைக்கும் பொழுது சுவை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். )ஆனால் இப்ப இருக்கும் அவசர காலத்தில் அதிக நேரம் சமைக்க நேரம் இல்லை.. அதான் குக்கரில் சீக்கரம் சமைத்து விடுகிறோம்)
தண்ணீர் அதிகமாக இருந்தால் முடியினை திறந்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வற்ற வைக்கலாம்.இந்த சுவை மிகுந்த களறி கறியினை நீங்களும் செய்து பார்த்து கருத்துச்சொல்லூங்கள்.என்று
ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்
Thanks to
https://www.facebook.com/photo.php?fbid=714168175289706&set=a.712535888786268.1073741828.712370512136139&type=1&theater
No comments:
Post a Comment