Showing posts with label recipe. Show all posts
Showing posts with label recipe. Show all posts

KFC ஃப்ரைடு சிக்கன் / KFC Fried Chicken



அனைவருக்கும் பிடித்தமான KFC ஃப்ரைடு சிக்கன் வீட்டிலே செய்யலாம்.. 

தேவையான பொருட்கள்:சிக்கன் கால் பகுதி - (பேபி சிக்கன்என்றால் நல்லாயிருக்கும்) 4. (இதனை நன்றாக சுத்தம் செய்து முள் கரண்டி வைத்து அங்கங்கே குத்தி வைக்கவும்) கத்தி வைத்து கீற வேண்டாம்.
எலுமிச்சை சாறு - 1/2 மூடி
மிளகுத்தூள் - 5ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

சிக்கனுடன் எலுமிச்சை சாறு , மிளகுத்தூள் , மிளகாய்த்தூள் , உப்பு சேர்த்து விரவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிரட்டி வைக்க::

மைதா - 1 கப்,
ரஸ்க்தூள் -1/2 கப்,
அரைத்த வெங்காயம் - 3ஸ்பூன்,
பூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்,பெப்பரிக்க பவுடர் - 1/2ஸ்பூன்
மிளாகாய்த்தூள் - 1/2ஸ்பூன்
மிளகுத்தூள் - 2ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு
எண்னெய் - பொறிக்க தேவையான அளவு
முட்டை - 2
பால் - 2ஸ்பூன்

ஒரு பவுலில் முட்டையும் பாலையும் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து வைக்கவும்

மேலே பிரட்டி வைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் வேறு ஒரு பவுலில் கலந்து தனியாக வைக்கவும்.

பிரட்டி வைத்த மைதா கலவையில் ஊற வைத்த சிக்கனை நன்றாக பிரட்டி எடுக்கவும்.

பிறகு அதே சிக்கனை முட்டை கலவையில் முக்கவும்

மீண்டும் இதனை மைதா கலவையில் பிரட்டவும் இப்படியே எல்லா சிக்கனும் பிரட்டி தனியாக ஒரு 10 நிமிடம் வைக்கவும்.

ஒரு வாணலியில் நன்றாக எண்ணெய் சூடு ஆன பின்பு ஓவ்வொரு சிக்கனாக போட்டு மிதமான தீயில் நன்றாக பொறிய விடவும்.

கரண்டியால் திருப்பி போட்டு வேக விடவும்.

குறைந்தது 10- 12 நிமிடங்கள் மிதமான தீயில் பொறிய விடவும்.

அதிக தணலில் வைத்தால்சிக்கனும் கருகி விடும். உள்ளேயும் சிக்கன் வேகாது.

Kayalpatnam - கறி மசாலாத்தூள்


தேவையான பொருட்கள்:
சிகப்பு வத்தல் - 1 கிலோ
மல்லி - 750 கிராம்
மஞ்சள் - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
பெருஞ்சீரகம் - 50 கிராம்
இவற்றை நன்றாக காயவைத்து தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து இதனை அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்ளவும். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
காயல்பட்டணம் கறி மசாலா தூள் மிகவும் மணமானது, சுவையானது. எல்லா வகையான கார உணவுகளுக்கும் இந்த மசாலைவை தான் நாங்கள் பயன்படுத்துவோம். மற்ற ஊர்களில் உள்ளது போல் மீனுக்கு என்று தனியாக, இறைச்சிக்கு என்று தனியாக மசாலா தூள் நாங்கள் பயன்படுத்துவது இல்லை.
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர்
காயல்பட்டிணம்

Thanks Source:http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_9035.html

Kayalpatnam Recipe - காயல் ஸ்பெஷல் ரசம்( புளியாணம்)


இந்த ரசம் உடலுக்கு ரொம்ப நல்லது. தினமும் இந்த ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஜீரனம் ஏற்படும்.
தேவையானப் பொருட்கள்
சீரகம்- 1ஸ்பூன்
சோம்பு- 1ஸ்பூன்
மிளகு- 1ஸ்பூன்
ப.மிளகாய்- 1
சி.மிளகாய் - 2
கருவேப்பிலை- ஒரு கொத்து
பூண்டு- 1
தக்காளி-1
சி.வெங்காயம் - 2
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்- 2துண்டு
எண்ணெய் - 2ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை:
சீரகம், சோம்பு,மிளகு போட்டு பாதியாக மிக்சியில் அடிக்கவும்
வெங்காயம், ப.மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, க.பிலை,பூண்டு போட்டு மீண்டும் ஒரு சுற்று சுற்றுவும்
புளி தண்ணீரில் தக்காளியினை பிசைந்துவிட்டு அதில் மஞ்சள்த்தூள் மற்றும் அரைத்த கலவையினையும் உப்பும் சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கபிலை போட்டு தாளிக்கவும் அதில் அரைத்து வைத்த கலவையில் சிறிது போட்டு லேசாக வதக்கி புளி கரசலை ஊற்றவும். 1 கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
இது ஜீரனத்திர்ககு மிகவும் நல்லது
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்


Source: http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_7602.html

Kayal Samayal - களறி கறி


காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.
கல்யாணத்து வர முடியாத பெரியவங்க, வயசு பெண்கள், மற்றும் கர்பிணிகள் இருக்கும் வீட்டுக்கு இந்த தாளத்தில் வைத்து உணவு கொடுப்பார்கள்..

செய்முறை:கறி- 1 கிலோ
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
தயிர் - அரை கப்கறிவேப்பிலை - சிறிது
பச்சமிளகாய் - 3-4
ரம்பை இலை - சிறிது (இருந்தால் போடுங்க)
மஞ்சள்தூள் - ஒருமேசைக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
காயல் கறி மசாலாத்தூள் - 6-7 மேசைக்கரண்டி காரம் கம்மியாக வேண்டும் என்பவர்கள் அளவினை கம்மி பண்ணவும். ( இந்த மசாலாத்தூள் இல்லாதவர்கள் தனி மிளகாய்த்தூள் - 3 கரண்டி , மல்லித்தூள் - 1கரண்டி, சீரகத்தூள் - 1/2கரண்டி சேர்க்கவும்.)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
தேங்காய்எண்ணெய் - 150 - 200 கிராம்
நெய் - 100 கிராம்
தேங்காய் - கால் மூடி
கசகசா - 4 தேக்கரண்டி
முந்திரி - 12

செய்முறை:

1. கசகசாவை முதலில் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து பின்னர் துருவின தேங்காய், முந்திரி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

2. கறியுடன் காயல் கறி மசாலாத்தூள் 1 தேக்கரண்டி போடவும். கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் க.பிலை, பச்சமிளாய் - 1 போட்டு விரவி 1/2 மணி நேரம் வைக்கவும்.

3.குக்கரில் எண்ணெய் , நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ரம்பைலை போட்டு தாளிக்கவும்.

4.பிறகு மீதியிருக்கும் வெங்காயம் போட்டு வதக்கவும், இஞ்சி பூண்டு பேஸ்ட், க.பிலை,ப.மிளாகாய் தக்காளி மஞ்சள்த்தூள், தனிமிளகாய்த்தூள் போட்டு வதக்காவும்.

5.வதங்கிய பின்பு விரவி வைத்த கறியை போடவும் அதன் மீது தயிரை ஊற்றிஅப்படியே விசில் போடாமல் மூடியினை மட்டும் போட்டு மூடி சிம்மில் 10நிமிடம் வைக்கவும்.

6. அதன்பின்பு அரைத்த தேங்காய் விழுதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மீதி இருக்கும் காயல் கறி மசாலாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

7 .கறி குழம்பு கொதி வந்த பின்பு இதனை ஊற்றவும். இதனுடன் நறுக்கிய வாழைக்காய் போடவும்

8.குக்கரில் வெயிட் போட்டு நன்றாக கறி வேகும் வரை 2 வீசில் ஹையிலும் 2 வீசில் சிம்மிலூம் வைக்கவும்..

பின் குறிப்பு: இதனை எங்க ஊர்ரில் குக்கரில் சமைக்கமாட்டார்கள். சட்டியில் தான் கறியினை வேக வைப்பார்கள். சட்டியில் வேக வைக்கும் பொழுது சுவை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். )ஆனால் இப்ப இருக்கும் அவசர காலத்தில் அதிக நேரம் சமைக்க நேரம் இல்லை.. அதான் குக்கரில் சீக்கரம் சமைத்து விடுகிறோம்)

தண்ணீர் அதிகமாக இருந்தால் முடியினை திறந்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வற்ற வைக்கலாம்.இந்த சுவை மிகுந்த களறி கறியினை நீங்களும் செய்து பார்த்து கருத்துச்சொல்லூங்கள்.என்றும் நட்புடன்

ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்

Thanks to 
https://www.facebook.com/photo.php?fbid=714168175289706&set=a.712535888786268.1073741828.712370512136139&type=1&theater

ஹாட் ரெட் கரம் சிக்கன்

தேவையான பொருட்கள் 
 சிக்கன்   
 1 கிலோ
 வரமிளகாய்   
  50 கிராம்
 பெரிய வெங்காயம்      3
  இஞ்சி பூண்டு விழுது   
  2 ஸ்பூன்
 தக்காளி      3
 உப்பு     சிறிதளவு

செய்முறை

 சிக்கனை உப்பு,  மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். வரமிளகாய் ஊற வைத்து அரைக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயத்தை வதக்கவும். வரமிளகாய் பேஸ்டை போடவும்.
 இஞ்சிப் பூண்டு விழுதை சேர்க்கவும். நன்றாக வதக்கிய பிறகு தக்காளியை சேர்க்கவும்.
 உப்பு கறிவேப்பிலை சேர்த்து, பொறித்த சிக்கனை போடவும்.
 10 நிமிடம் சிம்மரில் வைத்து மல்லித்தழை தூவி, இறக்கவும்.

க்ரீன் பீஸ் ரோல்ஸ்

Thanks to  Mytamilmagazine.net


தேவையான பொருட்கள்

 பச்சைப்பட்டாணி -------------------  அரை கிலோ
 மிளகாய்த்தூள் ----------------------  2 ஸ்பூன்
 மிளகுத்தூள் ------------------------  2 ஸ்பூன்
 கொத்துமல்லி ---------------------- சிறிதளவு
 வெண்ணெய் -----------------------  25கிராம்
 பாலாடைக்கட்டி --------------------  50கிராம்
 ரொட்டித்தூள் -----------------------  தேவையான அளவு
 நெய் -------------------------------  பொரித்துக் எடுக்க
 உப்பு -------------------------------  தேவையான அளவு
 மைதா மாவு -----------------------  250 கிராம்

செய்முறை

 பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் எடுத்து கொள்ளவும். நன்கு ஆறியவுடன் மசித்துக் கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள், பாலாடைக்கட்டி, வெண்ணெய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றுடன் சோ்த்து அடுப்பில் வைத்துக் கிளறி கலவை கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

 மைதா மாவை எடுத்து பூரி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும் . மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கி பூரிபோல் இட்டுக்கொண்டு, அவற்றின் நடுவில் பட்டாணி  கலவையைச் சிறிதளவு வைத்து, ரோலாக உருட்டிக் கொள்ளவும்.


 2 ஸ்பூன் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து, ரோலின் நுனியில் தடவி, நன்கு அழுத்தி ஒட்டவும். இதை ஒவ்வொன்றாக எடுத்து உடனே ரொட்டித்தூளில் நன்கு புரட்டிக் எடுக்கவும்.


 கடாயில் நெய் விட்டுக் காய்ந்தவுடன், ஒவ்வொரு ரோலாக கவனமாய் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும் . இத்துடன் சாஸ், புதினா சட்னி, மல்லி சட்னி  சேர்த்து பரிமாறவும்.

சிக்கன் தோசை


Thanks to  Mytamilmagazine.net 
தேவையான பொருட்கள்:
  கோழிக்கறி – 200 கிராம்
 மைதா மாவு – 250 கிராம்
 தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
 அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
 பச்சை மிளகாய் – 5
 இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
 காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

  செய்முறை:


  * கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

  *அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

  * பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.

  * மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.

  * இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும், எடுத்து  சூடாக பரிமாறவும்.


     இத்துடன் தக்காளி குருமா தொட்டு சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

எக் லெஸ் ஆம்லெட்

Thanks to  Mytamilmagazine.net 
தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய கோஸ் ----------- ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ------ ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் –-- 4 அல்லது 5
கருவேப்பிலை, கொத்தமல்லி ---------- நறுக்கியது சிறிது
உப்பு --------------------------------- தேவையான அளவு
 கடலை மாவு ------------------------- மூன்று கப்

செய்முறை


கடலை மாவை சலித்து  வைத்துக் கொள்ளவும்.
அத்துடன் சிறிது சோடா மாவு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
அதில் நறுக்கிய கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, 15 நிமிடம் ஊற வைக்கவும். விருப்பப்பட்டால், ஏதாவது ஒரு கீரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது நெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, தோசை போல் பரப்பிவிடவும்.

சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வெந்த பிறகு, திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

முட்டைக்கோஸ் பிடிக்காதவர்கள் கூட, விருப்பி சாப்பிடுவார்கள்.  அருமையான சுவையுடன் கூடிய, எக்லெஸ் ஆம்லெட் மாலை நேர டிஃபனுக்கு சூப்பர்...!