Thanks to Mytamilmagazine.net
தேவையான பொருட்கள்
பச்சைப்பட்டாணி ------------------- அரை கிலோ
மிளகாய்த்தூள் ---------------------- 2 ஸ்பூன்
மிளகுத்தூள் ------------------------ 2 ஸ்பூன்
கொத்துமல்லி ---------------------- சிறிதளவு
வெண்ணெய் ----------------------- 25கிராம்
பாலாடைக்கட்டி -------------------- 50கிராம்
ரொட்டித்தூள் ----------------------- தேவையான அளவு
நெய் ------------------------------- பொரித்துக் எடுக்க
உப்பு ------------------------------- தேவையான அளவு
மைதா மாவு ----------------------- 250 கிராம்
செய்முறை
பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் எடுத்து கொள்ளவும். நன்கு ஆறியவுடன் மசித்துக் கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள், பாலாடைக்கட்டி, வெண்ணெய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றுடன் சோ்த்து அடுப்பில் வைத்துக் கிளறி கலவை கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
மைதா மாவை எடுத்து பூரி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும் . மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கி பூரிபோல் இட்டுக்கொண்டு, அவற்றின் நடுவில் பட்டாணி கலவையைச் சிறிதளவு வைத்து, ரோலாக உருட்டிக் கொள்ளவும்.
2 ஸ்பூன் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து, ரோலின் நுனியில் தடவி, நன்கு அழுத்தி ஒட்டவும். இதை ஒவ்வொன்றாக எடுத்து உடனே ரொட்டித்தூளில் நன்கு புரட்டிக் எடுக்கவும்.
கடாயில் நெய் விட்டுக் காய்ந்தவுடன், ஒவ்வொரு ரோலாக கவனமாய் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும் . இத்துடன் சாஸ், புதினா சட்னி, மல்லி சட்னி சேர்த்து பரிமாறவும்.

No comments:
Post a Comment