உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர்.
ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோலாவில் சேர்க்கும் நச்சு கலந்த அமிலம் கேன்சரை உண்டு செய்யும், சிறுக சிறுக உள் எலும்புகளை அறித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இனி கோக கோலா, பெப்சி போன்ற பானங்களை அருந்துவதில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
வெளிநாட்டு மோகத்தில் இதை அருந்துவதை தவிர்த்து உடல் நலம் பேணுவோமா நாம்இல்லை நான் அதை வாங்கி குடிப்பேன் என்று சொல்லுபவர்களும் நம்ம நாட்டில் இருக்க தான் செய்கிறார்கள் என்ன பண்ண முடியும் நாம் சொல்ல வேண்டியது நம்மலுடைய கடமை . இன்னும் கேட்டுபோவேன் என்ன பந்தையம் கட்டுகிறாய் என்று கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது .
நமது நாட்டில் என்ன செல்வம் இல்லை நம்மால் ஏன் ஒரு உயர் தர குளிர் பானம் தயாரிக்க முடியவில்லை அதற்க்கு காரணம் அரசியல் தலையிடுதான் அந்நிய நிறுவங்களிடம் இருந்து இவர்கள் பெரும் லஞ்சம் தான் நம்ம நாட்டு குளிர்பானகளை முக்கிய திரையரங்குகள் முக்கிய ஷாப்பிங் மால்களிலும் விற்பனை செய்ய கூடாது என்று சொல்லும் அதிகாரம் இவர்களுக்கு எங்கு இருந்து வந்தது . இதற்க்கு எல்லாம் ஒரே தீர்வு மக்களாகிய நாம் இனி அனைத்து கடைகளிலும் வெளிநாட்டு குளிர் பானங்களை புறந்தள்ளி விட்டு உள்ளூர் குளிர் பானங்களை அருந்த தொடங்க வேண்டும் . மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் , பின்பு ஒரு நாள் வெற்றி பெரும்
I like this ....
ReplyDeleteChanges should come from Public only...