பேரீச்சம் பழம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5678.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5445


ஜபலா இப்னு சுஹைம்(ரஹ்) கூறினார்

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், '(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று சொல்வார்கள். பிறகு, 'ஒருவர் தம் சகோதரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தாலே தவிர' என்று சொல்வார்கள்.
'அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்' என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) கூறினார்.
ஸஹீஹ் புகாரி 5446


அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்.
ஸஹீஹ் புகாரி 5447

Anñisa | முஸ்லிம் பெண்கள்
உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள

No comments:

Post a Comment