Showing posts with label cooking. Show all posts
Showing posts with label cooking. Show all posts

ஹாட் ரெட் கரம் சிக்கன்

தேவையான பொருட்கள் 
 சிக்கன்   
 1 கிலோ
 வரமிளகாய்   
  50 கிராம்
 பெரிய வெங்காயம்      3
  இஞ்சி பூண்டு விழுது   
  2 ஸ்பூன்
 தக்காளி      3
 உப்பு     சிறிதளவு

செய்முறை

 சிக்கனை உப்பு,  மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். வரமிளகாய் ஊற வைத்து அரைக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயத்தை வதக்கவும். வரமிளகாய் பேஸ்டை போடவும்.
 இஞ்சிப் பூண்டு விழுதை சேர்க்கவும். நன்றாக வதக்கிய பிறகு தக்காளியை சேர்க்கவும்.
 உப்பு கறிவேப்பிலை சேர்த்து, பொறித்த சிக்கனை போடவும்.
 10 நிமிடம் சிம்மரில் வைத்து மல்லித்தழை தூவி, இறக்கவும்.

க்ரீன் பீஸ் ரோல்ஸ்

Thanks to  Mytamilmagazine.net


தேவையான பொருட்கள்

 பச்சைப்பட்டாணி -------------------  அரை கிலோ
 மிளகாய்த்தூள் ----------------------  2 ஸ்பூன்
 மிளகுத்தூள் ------------------------  2 ஸ்பூன்
 கொத்துமல்லி ---------------------- சிறிதளவு
 வெண்ணெய் -----------------------  25கிராம்
 பாலாடைக்கட்டி --------------------  50கிராம்
 ரொட்டித்தூள் -----------------------  தேவையான அளவு
 நெய் -------------------------------  பொரித்துக் எடுக்க
 உப்பு -------------------------------  தேவையான அளவு
 மைதா மாவு -----------------------  250 கிராம்

செய்முறை

 பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் எடுத்து கொள்ளவும். நன்கு ஆறியவுடன் மசித்துக் கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள், பாலாடைக்கட்டி, வெண்ணெய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றுடன் சோ்த்து அடுப்பில் வைத்துக் கிளறி கலவை கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

 மைதா மாவை எடுத்து பூரி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும் . மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கி பூரிபோல் இட்டுக்கொண்டு, அவற்றின் நடுவில் பட்டாணி  கலவையைச் சிறிதளவு வைத்து, ரோலாக உருட்டிக் கொள்ளவும்.


 2 ஸ்பூன் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து, ரோலின் நுனியில் தடவி, நன்கு அழுத்தி ஒட்டவும். இதை ஒவ்வொன்றாக எடுத்து உடனே ரொட்டித்தூளில் நன்கு புரட்டிக் எடுக்கவும்.


 கடாயில் நெய் விட்டுக் காய்ந்தவுடன், ஒவ்வொரு ரோலாக கவனமாய் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும் . இத்துடன் சாஸ், புதினா சட்னி, மல்லி சட்னி  சேர்த்து பரிமாறவும்.

சிக்கன் தோசை


Thanks to  Mytamilmagazine.net 
தேவையான பொருட்கள்:
  கோழிக்கறி – 200 கிராம்
 மைதா மாவு – 250 கிராம்
 தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
 அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
 பச்சை மிளகாய் – 5
 இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
 காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

  செய்முறை:


  * கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

  *அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

  * பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.

  * மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.

  * இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும், எடுத்து  சூடாக பரிமாறவும்.


     இத்துடன் தக்காளி குருமா தொட்டு சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

எக் லெஸ் ஆம்லெட்

Thanks to  Mytamilmagazine.net 
தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய கோஸ் ----------- ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ------ ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் –-- 4 அல்லது 5
கருவேப்பிலை, கொத்தமல்லி ---------- நறுக்கியது சிறிது
உப்பு --------------------------------- தேவையான அளவு
 கடலை மாவு ------------------------- மூன்று கப்

செய்முறை


கடலை மாவை சலித்து  வைத்துக் கொள்ளவும்.
அத்துடன் சிறிது சோடா மாவு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
அதில் நறுக்கிய கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, 15 நிமிடம் ஊற வைக்கவும். விருப்பப்பட்டால், ஏதாவது ஒரு கீரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது நெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, தோசை போல் பரப்பிவிடவும்.

சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வெந்த பிறகு, திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

முட்டைக்கோஸ் பிடிக்காதவர்கள் கூட, விருப்பி சாப்பிடுவார்கள்.  அருமையான சுவையுடன் கூடிய, எக்லெஸ் ஆம்லெட் மாலை நேர டிஃபனுக்கு சூப்பர்...!