Showing posts with label Kayalpatnam Recipe. Show all posts
Showing posts with label Kayalpatnam Recipe. Show all posts

Kayalpatnam - கறி மசாலாத்தூள்


தேவையான பொருட்கள்:
சிகப்பு வத்தல் - 1 கிலோ
மல்லி - 750 கிராம்
மஞ்சள் - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
பெருஞ்சீரகம் - 50 கிராம்
இவற்றை நன்றாக காயவைத்து தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து இதனை அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்ளவும். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
காயல்பட்டணம் கறி மசாலா தூள் மிகவும் மணமானது, சுவையானது. எல்லா வகையான கார உணவுகளுக்கும் இந்த மசாலைவை தான் நாங்கள் பயன்படுத்துவோம். மற்ற ஊர்களில் உள்ளது போல் மீனுக்கு என்று தனியாக, இறைச்சிக்கு என்று தனியாக மசாலா தூள் நாங்கள் பயன்படுத்துவது இல்லை.
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர்
காயல்பட்டிணம்

Thanks Source:http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_9035.html

Kayalpatnam Recipe - காயல் ஸ்பெஷல் ரசம்( புளியாணம்)


இந்த ரசம் உடலுக்கு ரொம்ப நல்லது. தினமும் இந்த ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஜீரனம் ஏற்படும்.
தேவையானப் பொருட்கள்
சீரகம்- 1ஸ்பூன்
சோம்பு- 1ஸ்பூன்
மிளகு- 1ஸ்பூன்
ப.மிளகாய்- 1
சி.மிளகாய் - 2
கருவேப்பிலை- ஒரு கொத்து
பூண்டு- 1
தக்காளி-1
சி.வெங்காயம் - 2
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்- 2துண்டு
எண்ணெய் - 2ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை:
சீரகம், சோம்பு,மிளகு போட்டு பாதியாக மிக்சியில் அடிக்கவும்
வெங்காயம், ப.மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, க.பிலை,பூண்டு போட்டு மீண்டும் ஒரு சுற்று சுற்றுவும்
புளி தண்ணீரில் தக்காளியினை பிசைந்துவிட்டு அதில் மஞ்சள்த்தூள் மற்றும் அரைத்த கலவையினையும் உப்பும் சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கபிலை போட்டு தாளிக்கவும் அதில் அரைத்து வைத்த கலவையில் சிறிது போட்டு லேசாக வதக்கி புளி கரசலை ஊற்றவும். 1 கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
இது ஜீரனத்திர்ககு மிகவும் நல்லது
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்


Source: http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_7602.html

Kayal Samayal - களறி கறி


காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.
கல்யாணத்து வர முடியாத பெரியவங்க, வயசு பெண்கள், மற்றும் கர்பிணிகள் இருக்கும் வீட்டுக்கு இந்த தாளத்தில் வைத்து உணவு கொடுப்பார்கள்..

செய்முறை:கறி- 1 கிலோ
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
தயிர் - அரை கப்கறிவேப்பிலை - சிறிது
பச்சமிளகாய் - 3-4
ரம்பை இலை - சிறிது (இருந்தால் போடுங்க)
மஞ்சள்தூள் - ஒருமேசைக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
காயல் கறி மசாலாத்தூள் - 6-7 மேசைக்கரண்டி காரம் கம்மியாக வேண்டும் என்பவர்கள் அளவினை கம்மி பண்ணவும். ( இந்த மசாலாத்தூள் இல்லாதவர்கள் தனி மிளகாய்த்தூள் - 3 கரண்டி , மல்லித்தூள் - 1கரண்டி, சீரகத்தூள் - 1/2கரண்டி சேர்க்கவும்.)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
தேங்காய்எண்ணெய் - 150 - 200 கிராம்
நெய் - 100 கிராம்
தேங்காய் - கால் மூடி
கசகசா - 4 தேக்கரண்டி
முந்திரி - 12

செய்முறை:

1. கசகசாவை முதலில் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து பின்னர் துருவின தேங்காய், முந்திரி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

2. கறியுடன் காயல் கறி மசாலாத்தூள் 1 தேக்கரண்டி போடவும். கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் க.பிலை, பச்சமிளாய் - 1 போட்டு விரவி 1/2 மணி நேரம் வைக்கவும்.

3.குக்கரில் எண்ணெய் , நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ரம்பைலை போட்டு தாளிக்கவும்.

4.பிறகு மீதியிருக்கும் வெங்காயம் போட்டு வதக்கவும், இஞ்சி பூண்டு பேஸ்ட், க.பிலை,ப.மிளாகாய் தக்காளி மஞ்சள்த்தூள், தனிமிளகாய்த்தூள் போட்டு வதக்காவும்.

5.வதங்கிய பின்பு விரவி வைத்த கறியை போடவும் அதன் மீது தயிரை ஊற்றிஅப்படியே விசில் போடாமல் மூடியினை மட்டும் போட்டு மூடி சிம்மில் 10நிமிடம் வைக்கவும்.

6. அதன்பின்பு அரைத்த தேங்காய் விழுதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மீதி இருக்கும் காயல் கறி மசாலாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

7 .கறி குழம்பு கொதி வந்த பின்பு இதனை ஊற்றவும். இதனுடன் நறுக்கிய வாழைக்காய் போடவும்

8.குக்கரில் வெயிட் போட்டு நன்றாக கறி வேகும் வரை 2 வீசில் ஹையிலும் 2 வீசில் சிம்மிலூம் வைக்கவும்..

பின் குறிப்பு: இதனை எங்க ஊர்ரில் குக்கரில் சமைக்கமாட்டார்கள். சட்டியில் தான் கறியினை வேக வைப்பார்கள். சட்டியில் வேக வைக்கும் பொழுது சுவை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். )ஆனால் இப்ப இருக்கும் அவசர காலத்தில் அதிக நேரம் சமைக்க நேரம் இல்லை.. அதான் குக்கரில் சீக்கரம் சமைத்து விடுகிறோம்)

தண்ணீர் அதிகமாக இருந்தால் முடியினை திறந்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வற்ற வைக்கலாம்.இந்த சுவை மிகுந்த களறி கறியினை நீங்களும் செய்து பார்த்து கருத்துச்சொல்லூங்கள்.என்றும் நட்புடன்

ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்

Thanks to 
https://www.facebook.com/photo.php?fbid=714168175289706&set=a.712535888786268.1073741828.712370512136139&type=1&theater