Showing posts with label Quran. Show all posts
Showing posts with label Quran. Show all posts

Quran

இந்த வீட்யோவைப்பாருங்கள் ஒரு துளி கண்ணீர் வரவில்லை என்றால் நான்...


Jasakallah,..... Shajiams Mohammed Shajahan

MOULAVI ABDUL BASITH BUKHARI: QURAN RECITATIONS

MOULAVI ABDUL BASITH BUKHARI: QURAN RECITATIONS:                                                                                                                          

Quran and Science

4 year Laam Recite Suratul Mulk

Quran


Allah the almighty says:
" He released the two seas, meeting [side by side];Between them is a barrier [so] neither of them transgresses.So which of the favors of your Lord would you deny?From both of them emerge pearl and coral. "

(Quran 55:19-22 )

மனித உடல் - Human Body

மனித உடல் – அல்லாஹ்வின் அற்புதம்! - நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய சிறந்த தகவல்கள்
-------------------------------------------------------------------------------------------
இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்தனிச் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன. ஊர்ந்து செல்லும் எறும்பு,தனது உடல் எடையைவிடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கும். ஒட்டகம், முற்செடியையும் வலியின்றி உட்கொண்டுஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் நீரின்றி உயிர் வாழும்.

ஆந்தை, கும்மிருட்டிலும் தடுமாற்றமின்றிப் பறக்கும். மனிதன் பெற்றிராத உடற்கூறுகளைக் கொண்டுள்ள கோடிக் கணக்கான ஜீவராசிகளை விடவும், “மனிதனை மிகச்சிறந்த படைப்பாகப் படைத்திருக்கிறோம்” என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.இறைவனைப் புரிந்துகொள்ள நம் உடலின் அற்புத அமைப்புகளை உணர்ந்தாலே போதும்.

மருந்துகளும் மருத்துவச் சோதனைகளுமின்றி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை நம் உடலுக்கு உண்டு. இயற்கையாகவே பெற்றிருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி மனித உடலுக்கு இல்லை என்றால் சாதாரண எறும்பு கடித்தால்கூட மிகுந்த வேதனைப்பட நேரிடலாம்!கண்டதற்கெல்லாம் கடையடைப்பு, போராட்டங்கள் நடத்தும் மனிதர்கள், தம் உடல்உறுப்புக்களிடமிருந்து கடமையுணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஐம்புலண்களும் உறங்கினாலும்ஜீரண,சுத்திகரிப்புஉறுப்புகள் ஓய்வதில்லை. கண்களுக்கு இணையாகத் தங்களுக்கும் ஓய்வு வேண்டும்என்று குடல் சுரப்பிகளும் போராட்டம் நடத்தினால் வாழ்நாளின் பாதியைக் கழிவறையிலேயே நாம் கழிக்க நேரிடும்!

சமீபத்தில் ”டாக்டர் சன்நியூஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிரபலமான துறைசார்(Specialist) மருத்துவர்கள் நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அழகு மற்றும்உறுப்புமாற்றுச் சிகிச்சைப் பற்றி ஒரு நேயர், சாலை விபத்தில் அவரது சகோதரரின் உயிர் உறுப்பில்அடிபட்டு ஒருபக்க விறை (Tactical) சேதமடைந்து தற்போது ஒற்றை விறையுடன் உயிர்வாழ்வதாகச் சொன்னார். அதற்குப் பதிலளித்த உடற்கூறு சிறப்பு மருத்துவர், “மனிதன் உயிர்வாழஅவசியமான இரட்டை எண்ணிக்கையில் படைக்கப்பட்ட உறுப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டும்ஒழுங்காக இயங்கினாலே போதும்” என்றார்.

இறைவன் தன் திருமறையில்,

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

“ நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியேபடைத்திருக்கிறோம்” (54:49) என்று கூறுகிறான்.

மனிதன் உயிர்வாழ அவசியமான உறுப்புகள் ஒன்று மட்டும் போதும் என்றாலும், உபரிஉள்ளுறுப்புகளுடன் படைத்திருக்கும் இறைவனின் அன்பு அளவற்றதுதானே! மேற்கண்ட பதிலைக்கேட்டதும் ”அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்” என அல்லாஹ்வை புகழ்வதிலுள்ள நியாயத்தை உள்மனம் உணர்ந்தது. இருசிறுநீரகங்களும் பழுது அடைந்ததால் மாற்றுச் சிகிச்சைக்குமுன்/பின் எத்தனை வகையான சோதனைகள் மற்றும் சிரமங்கள்! சிறுநீரகங்களில் ஒன்றை உயிர்காக்கும்உபரியாகப் படைத்து உடலை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களிளெல்லாம் மேலானபடைப்பாளன் அல்லாஹ்வின் எல்லையில்லா அன்பை உணரலாம்.

மேலும் இறைவன் தன் திருமறையில்,

وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ الْمَصِيرُ

“… அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்;அவனிடம்தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது“ (064:003) என்கிறான்.

எல்லா மனிதர்களையுமே அழகாகப் படைத்திருப்பதாக படைத்தவனே வாக்குமூலம்கொடுத்திருக்கும்போது, மனிதர்களாகிய நாம்தான் சிலரை அழகானவர்கள் என்றும், வேறு சிலரை அழகற்றவர்கள் என்றும் பிரித்துக் கொண்டுள்ளோம். இந்த மனப்பான்மையால் தேகம் கருத்தவர்,”என்னை கருப்பாகப் படைத்த இறைவன் எப்படி எல்லோருக்கும் அன்புடையவனாக இருக்க முடியும்?” என்று கேட்கக் கூடும் . இன்றைய உலகில் செயற்கை மேக்அப் மற்றும் ஆடைகளே மனிதர்களின் புறஅழகை நிர்ணயிக்கின்றன. வெளிர்நிற தேகத்தை அழகின் அளவு கோளாகக் கருதும் மாயபிம்பம் நம்மில் பலரிடம் பதிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக ஆசிய நாட்டவரில் இந்தியர்களிடம்இந்த மனப்பான்மை மிகுந்துள்ளது.

மருத்துவ ரீதியில் ஆரோக்கியமான உடலே அழகான உடலாகும். இரத்தத்தில் Melaninஎண்ணிக்கையே தேகநிற வேறுபாட்டிற்குக் காரணம். பொதுவாகச் சூரிய ஒளி மிகுந்துள்ளப்பிரதேசங்களில் தான் கருந் தேகத்தவர்கள் அதிகம் இருப்பர். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களிலிருந்து (UV Rays) உடம்பைக் காப்பதோடு தோல் புற்று (Skin Cancer) ஏற்படாமல்Melanin காக்கிறது! நியாயமாகப் பார்த்தால் இந்தியா போன்ற சூரிய வெப்பமுள்ள நாடுகளில் வாழும்கருந்தேகத்தவர்கள் சந்தோஷப்பட வேண்டும்!

لَقَدْ خَلَقْنَا الإنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

“(திடமாக), நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்” என்ற (095:004)திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனை உண்மை!

இயற்கையாகவே மனித உடல் பெற்றிருக்கும் சில சிறப்புக் கூறுகளை அறிந்தால் மகத்தான இறைவனின் மறைந்திருக்கும் வல்லமைகளை உணரலாம். கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாகச் சில உடலியல்அற்புதங்களை மட்டும் பார்ப்போம்:

உடலமைப்பு:

மனித உடல் பலகோடி உயிரணுக்களின் தொகுப்பால் ஆனது. ஒரு சதுர அங்குல மனிதத்தோலில் 19,000,000 உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள்தோன்றி மறைகின்றன.ஒவ்வொரு மனித உடலும் சராசரியாக ஒரு நாயைக் கொல்லும் அளவுக்குசல்ஃபர், 900 பென்சில்களை உருவாக்கப் போதுமான கார்பன்,பொம்பைத் துப்பாக்கியை எரிக்கும்அளவுக்கு பொட்டாசியம், ஏழு பார் சோப்பு செய்யும் அளவுக்கு கொழுப்பு, 2,200 தீக்குச்சிகள்செய்யப் போதுமான பாஸ்பரஸ், பத்து குடங்களை (Gallons) நிரப்பும் அளவுக்குத் தண்ணீர்ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது உடலிலுள்ள கனிமங்களைக் கொண்டு நமக்குத் தேவையானஅனைத்து வகை மருந்துகளையும் உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.

இரத்த ஓட்டம்:

மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றன.உடம்பு முழுவதும் இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் நீளம் ஏறத்தாழ ஒரு இலட்சம்மைல்கள்! ஒவ்வொரு நாளும் சிறுநீரகங்கள் வழியாக சுமார் 400 காலன் அளவுக்கு இரத்தம் சுத்தம்செய்யப்படுகிறது!

எலும்புகள்:

பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள்குறைகின்றன!

மூளை:

வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள்மூளையில் சாகின்றன. அவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை. (வயதாக வயதாகமனிதனின் ஞாபக சக்தி குறைவதற்கு இதுவும் காரணமோ?). மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில்ஐந்தில் ஒருபங்கு மூளைக்குச் செல்கிறது!

குடல்:

இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல்தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!

ரேகைகள்:

மனிதனை வேறுபடுத்தி அறிய, அவனது கைரேகை உதவுகிறது. அதேபோல் சருமம், நாக்குஆகியவையும் தனித்தனி ரேகைகளைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியானஅமைப்பைக் கொண்டுள்ளது!

இத்தனை அற்புதங்களுடன் மனித உடலைப் படைத்திருக்கும் அல்லாஹ் நிச்சயமாகபடைப்பாளார்களிலெல்லாம் மிக அழகியப் படைப்பாளன். அவனை அளவற்ற அருளாளன் நிகரற்றஅன்புடையோன் என்றால் மிகையில்லை

அடுத்து நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகளைப் பற்றி பார்ப்போம்


குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்

தசைகள் 5 நாட்கள்

இதயம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ...

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று....அல் குர் ஆன் - 13:16

Source: mutur1st News & நான் பார்க்கும் உலகம்

Quran

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்

- நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

அல் குர்ஆன் 39:53


"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!

(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:)

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

அல் குர்ஆன் 2:286


Quran

"தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.

அல் குர்ஆன் 15:2

திருக்குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம்



திருக்குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம்

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளை எடுத்துக் காட்டி, மக்களை அமல் செய்வதற்கு ஆர்வமூட்டும் விதமான செய்திகள் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன.
திருக்குர்ஆனை ஓதுபவருக்கு அல்லாஹ் அள்ளி வழங்கும் நன்மைகளை இவ்விதழில் பார்ப்போம்.
நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம்
ஓதுபவருக்கு உவமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020)
மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்
குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி
பொறாமைப்படுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர), நூல் : புகாரி (5025)
எழுத்துக்குப் பத்து நன்மை!
“அல்லாஹ்வின் வேதத்திருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அஃப், லாம், மீம் – என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி
சூழ்கின்ற அருட்கொடையும் சுற்றி நிற்கும் வானவர் படையும்
“அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்
இந்தச் செய்திகளின் அடிப்படையில் குர்ஆனை அதிகமதிகம் ஓதி நன்மையை அடைவோமாக!
ஷம்சுல்லுஹா:


Thanks to முகவை கான்  

அல்குர்ஆனைக் கொண்டு மருத்துவம்



அல்குர்ஆனை அல்லாஹ் நமக்கொரு மருந்தாக ஆக்கியுள்ளான். இதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.


يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ (يونس : 57

மனிதர்களே உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (யூனுஸ் : 57)

அல்குர்ஆனிலே மருத்துவம் இருக்கிறது அதை ஓதுவதனால் மறைமுகக் காரணிகளால் ஏற்பட்டுள்ள நோய்கள் குணமடைகின்றன.


மேலும் அல்லாஹ் இது பற்றிக் கூறும் போது

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ (الإسراء : 82

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். (அல்இஸ்ரா:82)

Anñisa | முஸ்லிம் பெண்கள்
உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Quran






நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள், நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது மக்களெல்லாம் அவர்களை நோக்கி விரைந்தார்கள். நானும் மக்களுடன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அவர்களின் முகம் பொய் சொல்லும் முகமாகத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஸலாத்தை பரப்புக்குங்கள், (பசித்தவருக்கு) உணவளியுங்கள், மக்கள் உறங்கும் வேளையில் தொழுங்கள், மன அமைதியுடன் சொர்க்கம் செல்வீர்கள்’ என்பது தான் அவர்களின் பேசிய முதல் பேச்சாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள்,
நூல்: திர்மிதீ 2409, இப்னுமாஜா 1323, தாரமீ 1424 — with Mohammed Arif Hussain.