திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்..........!!


ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும். சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது. திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது.

திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும். திராட்சை பல நிறங்களில் கிடைக்கிறது. இது வெள்ளை, வெளிர்பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா அல்லது கறுப்பு என பல நிறத்தில் இருக்கும். சில வகைகளில் விதைகள் இருக்காது.

அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது. திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது. இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

No comments:

Post a Comment