தினம் ஒரு பயனுள்ள பழச்சாறு தகவல்


வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு... என்ன ஜூஸ் குடிக்கப் போறீங்க...

கோடைக்காலம் ஆரம்பித்த நிலையில் உடலில் வறட்சி ஏற்படவும் ஆரம்பிக்கும். அப்போது வெயிலில் சென்று வீட்டிற்கு வந்தால், தாகம் அதிகரிக்கும். ஆகவே அந்த நேரம் நிறைய தண்ணீர் குடிப்போம். ஆனால் அவ்வாறு எப்போதுமே தண்ணீர் குடிக்க முடியாது. எனவே அப்போது பலர் ஜூஸ் குடிக்க ஆசைப்படுவார்கள். குறிப்பாக கோடைக்காலத்தில் கடைகளில் கார்போனேட் கூல்ட்ரிங்ஸ், ரஸ்னா, சர்பத் போன்றவை விலை மலிவாக கிடைக்கும். எனவே மக்கள் பலர் அதனையே வாங்கி சாப்பிடுவார்கள். அத்தகைய பானங்களில் எந்த ஒரு சத்துக்களும் கிடையாது, நோய்கள் தான் உள்ளன.

ஆகவே உடலை ஆரோக்கியமாகவும், நோயில்லாதாகவும் வைப்பதற்கு பழங்களை வைத்து ஜூஸ் குடித்தால் நல்லது. இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, உடலும் நன்கு வலுவோடு இருக்கும். மேலும் பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளன என்பது நன்கு தெரியும். ஆனால் அவற்றில் சத்துக்கள் மட்டுமின்றி, வயிற்றையும் நிறையச் செய்யும்.

சரி, இப்போது எந்த பழ ஜூஸில் என்ன நன்மைகள் நிறைந்துள்ளன என்பதைப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழச்சாராக பார்த்து வருகிறோம் அவற்றில் இன்று....

பீச் ஜூஸ் :

பீச் பழத்தால் செய்யப்பட்ட ஜூஸை பருகினால், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், மனதில் ஏற்படும் கவலை மற்றும் அழுத்தம் போன்றவை குணமாகும்.

இறைவன் நாடினால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழச்சாராக வழங்குகிறோம்...

No comments:

Post a Comment