சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டெக் கிரன்ச் (TechCrunch) வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஒரு புதிய ஸ்மார்ட் போனுக்கான மென்பொருளை வடிவமைப்பதில் தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்கும் பேஸ்புக் போன் குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.
கிட்டதட்ட ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்ஸ் மற்றும் டேப்லட் கம்ப்யூட்டர்ஸ் பயன்படுத்துவதால் இவர்களை இலக்காக கொண்டு பேஸ்புக் போனை கொண்டுவர பேஸ்புக் ஆர்வம் காட்டி வருகிறது. — with Mohammed Arif Hussain.
No comments:
Post a Comment