ஒவ்வொரு முறை பாபரி மஸ்ஜித் வழக்கு நீதிமன்றம் வருகின்ற போதும். நீதிபதிகள் தங்களை இராமபக்தர்களாக காட்டி இருக்கின்றார்கள்.
குறிப்பாக நமது உச்சநீதி மன்றம் இதுவரை பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் எப்படி நடந்திருக்கின்றது என்பதைப் பார்ப்போமேயானால், நாம் நொடிந்துபோவோம்.
இவற்றை அடிக்கடி நாம் வைகறை வெளிச்சம் வாசர்களுக்குச் சுட்டிக் காட்டி வருகின்றோம்.
பாபரி மஸ்ஜித் - ஐ இடிக்க சதி செய்தவர்கள் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் என்றொரு குற்றச்சாட்டு. அந்தக் குற்றச் சாட்டை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம்.
அந்த நீதிமன்றம் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி இன்னும் 18 பேர் ஆகியோர் சதி செய்யவில்லை என்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை மே 4 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டு வழங்கிற்று.
சிறப்பு நீதிமன்றம் சொல்வதெல்லாம் சரிதான் என்றொரு ஆமாம் சாமி தீர்ப்பை, நமது நாறிப்போன அலஹாபாத் நீதிமன்றம் மே 20, 2010 இல் வழங்கிற்று.
இந்த இரண்டு நீதிமன்றங்களும் தந்த தீர்ப்புகள் சரி இல்லை, என்றொரு மேல் முறையீட்டை நமது உச்ச நீதி மன்றத்தில், பதிவு செய்தார்கள், நமது சிஙிமி என்ற மத்தியப் புலனாய்வுத் துறையினர்.
இந்த வழக்கு மீதான ஒரு விவாதம் ஜனவரி 16 ஆம் நாள் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் வாதாடிய துணை சாலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர், விவேக் தன்கா, புகழ் பெற்ற பாபரி பள்ளி மஸ்ஜித் இடிப்பு என தன் வாதத்தைத் தொடங்கினார்.
உடனேயே உச்ச நீதிமன்ற நீதிபதி "டட்டு" (Dattu) "பாபரி மஸ்ஜித் இடிப்பு புகழ்பெற்றதுமல்ல, புகழ் பெறாததுமல்ல அது ஒரு சாதாரண நிகழ்வுதான்" என மறுத்துப் பேசியுள்ளார். (THE HINDU. 17-01-2011)
தன்னுடைய முதல் சொல்லுக்கே நீதிபதி இப்படி முகத்தில் அறைந்தாற்போல் கூறியதில் அதிர்ந்து நின்றார், அரசு தரப்பு வழக்கறிஞர்.
நீதிபதி டட்டு தன்னுடைய மனதில் என்ன இருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். இனி நாட்டு மக்கள் இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில், பாபரி மஸ்ஜித் இடிப்பில் அத்வானி முதலானோர், சதி செய்தார்களா? என்பதை உச்ச நீதி மன்றம் 27 பிப்ரவரி அன்று இறுதியாக விசாரிக்கும்.
நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் நடந்தனவற்றை ஒரு வரலாற்றுத் தடயமாக இங்கே பதிவு செய்கின்றோம்.
When additional solicitor general Vivek Tenka described the matter as the famous Babari Masjid demolition case Justice Dattu retorted It Is neither famous nor unfamous, just an incident that happened". (THE HINDU. 17-01-2011. P 13)
ஒரு நிகழ்வு
பாபரி மஸ்ஜித் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மஸ்ஜித். இந்தியாவின் தொல்லியல் சின்னம். பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு மட்டும் முக்கியமானதல்ல, மொத்த இந்தியாவிற்கும் முக்கியமானது.
இப்போது அது உலக அளவில் மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகிறது.
மதசார்பின்மையைப் பீற்றிக் கொள்ளும் உச்சநீதிமன்றம் சிறுபான்மையினருக்கு சொந்தமான பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் எப்படி நடந்து கொள்கின்றது என்பதை உலகமே உற்று நோக்கிவருகின்றது. உலக முஸ்லிம்கள் ஒவ்வொரு அசைவையும், கூர்ந்து கவனித்து வருகின்றார்கள்.
பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து பால்தாக்ரே போன்றவர்களின் தலைமையில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகள் எல்லாம் நீதிபதி 'டட்டு' போன்றவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வுதான். இதுதான் நீதிபதிகளின் மனநிலை என்றால் இந்த நீதிபதிகள் எப்படி இதில் ஒரு சதி இருந்தது என்பதை ஏற்றுக் கொள்வார்கள், அத்வானி போன்றவர்களைத் தண்டிப்பார்கள்.
எதிர்பார்க்க வேண்டாம் நீதியை, உச்ச நீதிமன்றத்தில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில்....
- எம். ஜி. எம்.
No comments:
Post a Comment