கலோரிகள் - ஒரு கண்ணோட்டம்

ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்ஷியஸ் உயர்த்துவதற்கு தேவையான வெப்பம் அல்லது 1 டிகிரி செல்ஷியஸ் குறைக்கும்போது, வெளிவிடும் வெப்பத்தின் அளவு 1 கலோரி எனப்படும்.

நாம் சாப்பிடும்  உணவில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட் ஆகிய சத்துப் பொருட்களே நம் உடலின் தேவைக்குரிய சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்தி கலோரியில் கணக்கிடப்படுகிறது. நல்ல உடலில் சேமித்து வைக்கும் இந்த சக்தி சுவாசித்தல், இரத்த ஓட்டம், ஜீரணம் ஆகிய வேலைகளுக்கு பயன்படுகிறது. மேலும் நாம் செய்யும் கடின வேலைகளுக்குத் தக்கவாறு சக்தி செலவு செய்யப்படுகிறது.


கடின உழைப்பாளிகளுக்கு கூடுதல் கலோரிகள் கொடுக்க கூடிய உணவுமுறை கையாளப்பட வேண்டும். ஆபீஸ் வேலை போன்ற உடலை வருத்தாமல், செய்யக்கூடிய வேலைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சற்றுக் குறைந்த அளவு கலோரிகள் தரக்கூடிய உணவுப் பொருட்கள் தேவைப்படும்.

நம் உடலை இயக்குவதற்குத் தேவையான சக்தி அநேகமாக எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவுதான் தேவைப்படும். ஆனால் அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்ப, ஒருவருக்குத் தேவைப்படும் கூடுதல் சக்தி மாறுபடும்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஒருவரின் வயது, எடை, உயரம் இவற்றை மனதில் கொண்டுதான் ஒருவருக்குத் தேவையான சக்தியும் ( ENERGY )  உணவின் கலோரி மதிப்பீடும் நிர்ணயிக்கப்படுகிறது.
நீங்கள் இருக்க வேண்டிய எடையைத் தெரிந்து கொள்ளுங்கள்.


நீங்கள் இருக்கும் உயரம் 160 செ.மீ என்றால், அதிலிருந்து 100 ஐக் கழித்து விடவும். மீதியிருப்பது 60. இதுவே உங்கள் எடையாக இருக்கவேண்டும். தோராயமாக நீங்கள் 60 கிலோ இருக்கலாம். ஒன்றிரண்டு கிலோ கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
ஒரு நாளைக்கு, நம் உடலுக்குத் தேவையான கலோரிகள் – வயதின் அடிப்படையில் (தோராயமாக)


14 வயதுக்குக் கீழ் – 1000 கலோரிகள்
15 லிருந்து 20 வயதில் இருப்பவர்களுக்கு  - 2000 முதல் 2500 கலோரிகள்
25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு


நீங்கள் இருக்க வேண்டிய எடையை விட, 5 முதல் 10 கிலோ குறைவாக இருந்தால் – 35 கலோரிகள் * உங்களின் சரியான எடை
நீங்கள் சரியான எடையில் இருந்தால் – 30 கலோரிகள்  * உங்களின் சரியான எடை
நீங்கள் இருக்க வேண்டிய எடையைவிட, 10 கிலோ அதிகமாக இருந்தால் -  25 கலோரிகள் * உங்களின் சரியான எடை
நீங்கள் இருக்க வேண்டிய எடையைவிட, 20 கிலோ அதிகமாக இருந்தால் -  20 கலோரிகள் * உங்களின் சரியான எடை
இந்த கலோரி அட்டவணையில் கொடுத்துள்ளவற்றை தவறாமல், ஒவ்வொருவரும் கடைபிடித்தால்,  நிச்சயமாக ஸ்லிம்மாக இருக்கலாம்.
நாம் அன்றாடம் செய்யும்  சில பணிகள் மூலம் உடலில் எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்ற அட்டவணை ( ஒரு மணி நேரம் செய்தால் )
தொலைபேசியில் பேசுவது                    - 50
குளிப்பது                                                          - 100
படுக்கை சுத்தம் செய்வது                     - 300
பல் விளக்குவது                                        - 100
தலைவாருதல்                                             - 100
உடை உடுத்தும்போது                             - 150
பர்னிச்சர்களை துடைப்பது                   - 150
ஆபிஸில் ஃபைல் செய்வது                  - 200
துணிக்கு இஸ்திரி போடுவது               - 100
தரையை மெழுகுவது                              - 200
உணவு சமைப்பது                                    - 100
படிப்பது                                                          - 25
தைப்பது                                                        - 50
டைப் அடிப்பது                                        - 50
துரிதமாக சைக்கிள் ஓட்டுவது        - 600
மெதுவாக சைக்கிள் ஓட்டுவது       - 300
மலை ஏறுவது                                       - 400
பெயிண்ட் செய்வது                             - 150
பாடுவது                                                    - 50
வேகமாக ஓடுவது                              - 900
மெதுவாக ஓடுவது                             - 600
மாடிப்படி ஏறி இறங்குவது              - 800
பாத்திரங்கள் தேய்ப்பது                      - 75
மெதுவாக நீந்துவது                           - 400
வேகமாக நீந்துவது                            - 300
கூடைப் பந்து விளையாடுவது       - 550
பாட்மின்ட்டன் விளையாடுவது       - 400
உடற்பயிற்சி செய்தல்                          - 600
தோட்ட வேலை                                      - 250
துணிதுவைத்தல்                                     - 75




இவ்வாறு நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் நம் உடலை சீரான எடை இருக்கும்படி வைத்துக் கொள்ள முடியும்.

1 comment:

  1. Ithellam evlo neraththil entru kurippittu irunthaal nandraaga irukkum

    ReplyDelete