Kayal Samayal - களறி கறி


காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.
கல்யாணத்து வர முடியாத பெரியவங்க, வயசு பெண்கள், மற்றும் கர்பிணிகள் இருக்கும் வீட்டுக்கு இந்த தாளத்தில் வைத்து உணவு கொடுப்பார்கள்..

செய்முறை:கறி- 1 கிலோ
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
தயிர் - அரை கப்கறிவேப்பிலை - சிறிது
பச்சமிளகாய் - 3-4
ரம்பை இலை - சிறிது (இருந்தால் போடுங்க)
மஞ்சள்தூள் - ஒருமேசைக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
காயல் கறி மசாலாத்தூள் - 6-7 மேசைக்கரண்டி காரம் கம்மியாக வேண்டும் என்பவர்கள் அளவினை கம்மி பண்ணவும். ( இந்த மசாலாத்தூள் இல்லாதவர்கள் தனி மிளகாய்த்தூள் - 3 கரண்டி , மல்லித்தூள் - 1கரண்டி, சீரகத்தூள் - 1/2கரண்டி சேர்க்கவும்.)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
தேங்காய்எண்ணெய் - 150 - 200 கிராம்
நெய் - 100 கிராம்
தேங்காய் - கால் மூடி
கசகசா - 4 தேக்கரண்டி
முந்திரி - 12

செய்முறை:

1. கசகசாவை முதலில் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து பின்னர் துருவின தேங்காய், முந்திரி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

2. கறியுடன் காயல் கறி மசாலாத்தூள் 1 தேக்கரண்டி போடவும். கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் க.பிலை, பச்சமிளாய் - 1 போட்டு விரவி 1/2 மணி நேரம் வைக்கவும்.

3.குக்கரில் எண்ணெய் , நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ரம்பைலை போட்டு தாளிக்கவும்.

4.பிறகு மீதியிருக்கும் வெங்காயம் போட்டு வதக்கவும், இஞ்சி பூண்டு பேஸ்ட், க.பிலை,ப.மிளாகாய் தக்காளி மஞ்சள்த்தூள், தனிமிளகாய்த்தூள் போட்டு வதக்காவும்.

5.வதங்கிய பின்பு விரவி வைத்த கறியை போடவும் அதன் மீது தயிரை ஊற்றிஅப்படியே விசில் போடாமல் மூடியினை மட்டும் போட்டு மூடி சிம்மில் 10நிமிடம் வைக்கவும்.

6. அதன்பின்பு அரைத்த தேங்காய் விழுதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மீதி இருக்கும் காயல் கறி மசாலாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

7 .கறி குழம்பு கொதி வந்த பின்பு இதனை ஊற்றவும். இதனுடன் நறுக்கிய வாழைக்காய் போடவும்

8.குக்கரில் வெயிட் போட்டு நன்றாக கறி வேகும் வரை 2 வீசில் ஹையிலும் 2 வீசில் சிம்மிலூம் வைக்கவும்..

பின் குறிப்பு: இதனை எங்க ஊர்ரில் குக்கரில் சமைக்கமாட்டார்கள். சட்டியில் தான் கறியினை வேக வைப்பார்கள். சட்டியில் வேக வைக்கும் பொழுது சுவை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். )ஆனால் இப்ப இருக்கும் அவசர காலத்தில் அதிக நேரம் சமைக்க நேரம் இல்லை.. அதான் குக்கரில் சீக்கரம் சமைத்து விடுகிறோம்)

தண்ணீர் அதிகமாக இருந்தால் முடியினை திறந்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வற்ற வைக்கலாம்.இந்த சுவை மிகுந்த களறி கறியினை நீங்களும் செய்து பார்த்து கருத்துச்சொல்லூங்கள்.என்றும் நட்புடன்

ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்

Thanks to 
https://www.facebook.com/photo.php?fbid=714168175289706&set=a.712535888786268.1073741828.712370512136139&type=1&theater

Small Story


ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.
அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.
இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.
அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.
அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.
விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.
இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.
அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.
அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…
நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.
இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,
”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.
அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.
ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,
எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,
உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.
அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,
பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.
என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!
நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!
எனவே,
அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.....!

அண்ணல் நபியை இகழ்ந்த நாவுகளே அண்ணல் நபியை புகழ்ந்த அதிசயம்!


ஹோலன்ட் நாடாளமன்றத்தின்செயல் திறன் நிறைந்த உறுப்பினர்களில் ஒருவர் தான் அர்னோல்ட் இவர் 47 ஆண்டுகளாக ஹோலன்ட் நாடாளமன்றத்தின் உறுப்பினராக செயலாற்றி வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் கடுமையாக விமர்ச்சித்து திரைபடம் தயாரித்ததும், பிறகு மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்று கொண்டதும் மாநபியின் பள்ளியில் அமர்ந்து கதறி அழுததும் அனைவரும் அறிந்ததே.

இறைதுதர்களின் கண்ணியத்தை காப்போம் என்ற தலைப்பில் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக மாநாட்டிர்கு சிறப்பு அழைப்பாளராக சகோ அர்னோல்ட் வருகை தந்திருந்தார் மாநபியை ஒரு காலத்தில் இகழ்ந்தவர் அதே மாநபிக்கு புகழ் மாலை சூட்டுவதை கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். மாநபியை இகழ்ந்த உதடுகளில் இருந்தே மாநபியின் புகழ் பாடும் வார்த்தைகள் புறப்பட்டு வந்தது உண்மையிலேயே பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அந்த மாநாட்டு நிகழ்வின் முதல் அமர்வின் இறுதியில் மக்கா மதினா பள்ளிகளின் நிர்வாககுழு தலைவராக உள்ள மார்க்க அறிஞ்ஞரும், சிறந்த காரியுமான அப்துரஹ்மான் சுதைஸ் அவர்கள் தான் அணிந்திருந்த மேலங்கியை களட்டி சகோ அர்னோல்ட் அவர்களுக்கு அணிவித்து அவரை கவுரவித்தார். அந்த அழகான காட்சியை தான் படத்தில் காண்கின்றீர்கள்.

நன்றி.
முகநூல் நண்பர்கள்.
&
http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=4493

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?



1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

Read Quran

Asalam alaikum wa rahmadulillahi wa barakathuhu......

Masha Allah alhamdulillah
TV chenal nanberkalukkum patthirkai karar nanberkalukkum entha mari vesaiyam na kannuku thattu padathu pola mmm yeppa paru summa vena pona padathuku 100 vathu naal kondaduvathu athil naducha nadikargel endra perula vepacharaigalukku awards kudupathu yennada entha chinna pennuku antha mari seingada apram entha patthirikai nanberkalukku yeppa paru epdi news kalla thodarbu konda news kananvani kalla kathalanukkaga kondra manaivi next vittle thaniyaga iruntua marumagel idam mammanar thunpurthal epdi news tha kedaikum pola ya Allah 
Yellam padaitha Allah Ku yellam pugalum

நரகத்திலே...


ஒரு மனிதன் இருந்தான் நரகத்திலே...

அவன் அல்லாஹ்விடத்திலே பேசினான்!!

அல்லாஹ் அவன் கேட்டதை எல்லாம் கொடுத்தான்!!!

அல்லாஹ் அவன் கேட்டதை விட அதிகமாக தருகின்றேன் என்று சொன்ன பொழுது!!!

அவன் அல்லாஹ்வை பார்த்து என்னை கேலி செய்கின்றாயா?? என்றான்...

அல்லாஹ் என்ன தருவதாக கூறினான்???

அவன் கேட்ட இந்த கேள்விக்கு அல்லாஹ்வின் பதில் என்ன??

இந்த வீடியோவை கொஞ்சம் அல்லாஹ்வின் அன்பை உணர பாருங்கள் ...

http://www.youtube.com/watch?v=mlsoqZGPSMg

ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம்!!



(இஸ்லாமிய முறையில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தாள்...

இயந்திரமாகும் இந்த உலக வாழ்கையில்...

உங்கள் பிள்ளைகளோடு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்..)

ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம்.

மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?

தந்தை: கேளேன்...

மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?

தந்தை: 100 டாலர் ...

மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா!

தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார்.

மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான்.

தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்?

மகன் : முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 100 டாலர் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்க அப்பா. உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.

தந்தைக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.


குடும்பத்துக்காக உழைக்கும் நீங்கள் குடும்பங்களின் சந்தோசத்தையும் கவனியுங்கள். சில மணி நேரத்தை உங்கள் குடும்பத்தோடு செலவழியுங்கள்.

நாளை நாம் மரணித்தால் நாம் பணி புரிந்த நிறுவனம் நமக்கு பதிலாக வேறொருவரை பணிக்கு அமர்த்திக் கொள்ளும். ஆனால் நமது குடும்பம் துக்கத்தோடும், துயரத்தோடும் நம்மை எண்ணி எண்ணி வாழுமே!!


From:-Thasbeeh Media

Hell



முஸ்லிம் சகோதரிகளே!!

இந்த நபி மொழியை மனதிலே பதிய வையுங்கள்...

எந்த ஓர் பெண் கணவனின் பொருத்தத்தை பெற்ற நிலையில் மரணம் அடைகின்றாலோ அந்த பெண் சுவர்க்கம் நுழைவால்.

ஒரு வேளை கணவன் உங்கள் மீது கோபத்தோடு இருக்கும் நிலையில் மரணித்தால்??

அல்லாஹ் பாதுகாப்பானாக!!

அந்நிய பெண்களை பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்??





பார்த்தல் என்ன தவறு என்ற கேள்வியும் இருகின்றதா??

அல்லது கட்டுபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்!! ஆனால் முடியவில்லையே??? என்ற பதிலா???

இதோ ஓர் வரலாறு உங்களுக்கு முன்னால்??

இந்த விடியோவை ஒரு முறை பார்த்து விட்டு கொஞ்சம் முடிவு செய்யுங்கள்??உங்கள் நிலைபாட்டை???

Click Here:-

http://www.youtube.com/watch?v=KTZRD0773qg

தவறான படங்களை பார்த்து ரசிக்கும் பழக்கம் இருகின்றதா??




தவரான முறையில் இச்சைகளை தீர்க்கும் பழக்கம் இருகின்றதா??

அல்லது இதெல்லாம் சரி தான்??என்ற எண்ணமா??

அல்லது எப்படி விடுபடுவது என்று வழியை தேடி கொண்டு இருக்கின்றீர்களா??

இதோ உங்களுக்கான வழி...

இந்த 2 வீடியோக்களை கொஞ்சம் பாருங்கள் உங்கள் வாழ்வின் மாற்றத்துக்காக...

http://www.youtube.com/watch?v=cIeNg3zBidM

http://www.youtube.com/watch?v=PvevWItX1A0
 — 

அல்லாஹ்வை சந்திக்க விருப்பமா??


அல்லாஹ்வை சந்திக்க விருப்பமா??

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:-

யார் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்புகின்றான்!!!

ஆம், நானும் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றேன்,ஆனால் கேள்வி என்ன வென்றால்???

அவனை சந்திப்பதற்கு சுத்தமான ஈமானோடு தான் நான் இருகின்றேனா????

இந்த கேள்வியோடு இந்த வீடியோவை பாருங்கள்:-

Click Here:-

http://www.youtube.com/watch?v=6KcK2OY7hLs

(யா அல்லாஹ்!!!! நான் உன்னை சந்திக்க வரும் அந்த நேரத்திற்கு முன்னால் என் ஈமானை சுத்தமான நிலையில் மாற்றுவதற்கு எனக்கு நீ உதவி செய்வாயாக!!

Photo:-Dr.Bilal Philips.

Thanks:

என் வாழ்வின் உண்மைய போராட்டம்!!




வெற்றியா?? தோல்வியா???

நபியவர்கள் சொன்னார்கள்:-
உண்மையான சிறந்த ஜிஹாத்(அற வழி போர்) என்பது நீ உன் உள்ளத்தில் இருக்கும் தீய சக்தியை அழிப்பதற்காக நீ உன் உள்ளதோடு போராடுவது தான்.

உள்ளங்களை அடக்கி ஆளும் என் இறைவா!!என் உள்ளதை பரிசுத்தபடுத்து!!!!

உன்னை மறந்து வாழும் என் உள்ளதை உன் நினைவால் வாழ வைப்பதற்கு நீ உதவி செய்!!!

உள்ளதோடு போராடி வெற்றி பெற்ற அந்த நல்லவர்களோடு என்னையும் சேர்த்து விடு!!

:-(எப்படி என் உள்ளதோடு போராடி வெற்றி பெறுவது என்ற கேள்வியா??

இந்த உரையை கொஞ்சம் கேளுங்கள்)

Click Here:-
http://www.youtube.com/watch?v=l2nF6FvNybg

உலக வாழ்கையின் உண்மையான இன்பத்தை அடைய வேண்டுமா??


உலக வாழ்கையின் உண்மையான இன்பத்தை அடைய வேண்டுமா??

நபியவர்கள் சொன்னார்கள்:-

உலகம் எல்லாம் இன்பம் தான்,அந்த இன்பங்களில் சிறந்த இன்பம் நல்ல ஸாலிஹான( மார்க்கம், ஒழுக்கம், குணம் உள்ள) பெண் (கிடைப்பது) தான்.

!!!!இன்னும் திருமணம் முடிக்க வில்லை என்றால்!!!

யா அல்லாஹ்!! இப்படி பட்ட ஸாலிஹான பெண்களை திருமணம் செய்ய கூடிய பாக்கியத்தை தருவாயாக!!!

!!!!!!திருமணம் முடித்திருந்தால்!!!!!!!

யா அல்லாஹ்!!!எங்கள் மனைவிமார்களை ஸாலிஹான பெண்களாக ஆக்குவாயாக!!!