பாடசாலை மாணவர்களுக்கு விஞ்ஞான கோட்பாடு (Scientifical theories) களை விளங்கப்படுத்தும் ஆசிரியர்கள், அதனை மாணவர்கள் மனதில்சரியாக பதியவைக்க வேண்டும் என்பதற்காக ஆய்வு கூடங்களை பயன்படுத்தி செயல்படுத்தியும் (Practical)காண்பிக்கிறார்கள்.
இது கல்வி அறிவை மேன்மைப்படுத்துவதற்கு தேவையான ஒரு முக்கிய அம்சமாகும். குறிப்பாக வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, இதுகோட்பாடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் செயல்வடிவில் காண்பிக்கும் ஒரு முயற்சியாக இந்த முயற்சி பர்ணமிக்கிறது.
இந்த செயன்முறை கல்வி திட்டம் இல்லாமல் ஒரு வைத்தியரால் தனது பணியை எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டதும்அனுமதித்ததுமாகும்.
ஆனால் அதே பாடசாலையில் படிக்கும் மாணவர்கள், எப்படி பொய் சொல்லுவது?, எப்படி களவெடுப்பது? எப்படி மது அருந்துவது? எப்படி அந்நியபெண்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்வது? எப்படி விபச்சாரம் செய்வது? என்பதையெல்லாம் செயல்வடிவில் சொல்லும், காண்பிக்கும் ஒருஊடகம், எல்லா நாடுகளிலும் ஆளும் கட்சி அரசியல் ஆதாரவுடன் மிகப் பரபரப்பாகச் செயற்பட்டுவருகிறது.
ஒரு தீராத நோய்க்கு கடைசியாக மது தான் மருந்து என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிற போது, மது மக்களுக்கு பயனளிக்கிறது என்று சொல்லிதெருவெல்லாம் மதுக் கடைகளை கட்டியெழுப்புவதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமோ, அது போல் தான் இந்த வழிகெடுக்கும் ஒரு ஊடகம்எம்மை ஆடிப் படைக்கிறது.
அது தான் ‘சினிமா’ என்கிற சமூக எதிரியாகும்.
அங்கம் ஒன்று:
பாதையில் பயணிக்கும் போது காணும் ஒரு தேலைப் பிடித்து சட்டைக்கும் இடுவதும், பக்கத்து வீட்டுக்காரன் இருக்கும் போது மனைவியின் அழகைதிறந்து காட்டுவதும் எப்படி பாதிப்பைத் தருகிறதோ, அதைவிடவும் பல் மடங்கு தீங்கு தருவது தான் இந்த சினிமா என்கிற ஷாத்தான்.
சினிமாத் துறையில் பணம் சம்பாதிக்கும் , காலம் கடத்தும் சிலர், சினிமாத் துறை சமூக சீர்த்திருத்தத்திற்கும் வழிகாட்டகளுக்கும் முக்கிய பங்கைவகிக்கின்றது என்ற அறிவற்ற கருத்துக்களையும், பேட்டிகளையும் வழங்கிவருவதை பரவலாகப் பார்க்கமுடிகிறது.
இன்று உலகலவில் இயற்றப்படும், திரையிடப்பதும் சினிமாப் படங்கள், சின்னத்திரை தொடர் நாடங்கள், பாடல்கள் அனைத்தும் எமது சமூகத்தின்கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் அளித்தொழிக்க பிறந்த ஒரு ஊடகமாகும்.
சமூகத்தை வழிகாட்ட மதங்கள், மார்க்கங்கள் பிறந்தது என்று சொல்லுவது போன்று அதே சமூகத்தை வழிகெடுத்த வந்தது தான் சினிமாத்துறை என்றால்அது 100 சத வீதம் உண்மையாகும்.
சினிமாத்துறைசார் இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள் திரையிடப்படும் சினிமாப் படங்கள் அனைத்திலும் தவிர்க்கமுடியாத சில அங்கங்களைவடிவமைத்திருக்கிறார்கள்.
குறித்த சில பகுதிகளை தவறது உற்படுத்தியவாறு வெளியிடுவார்கள், அவைகளில் சில,
* எல்லா சினிமாப் படஙகளிலும் காமத்தைத் தூண்டும் அல்லது காதலைத் தூண்டும் பாடல் வரிகள் இருக்க வேண்டும். அந்த பாடல் வரிகளைசெயலுருவில் காண்பிக்கும் காட்சிகளை நடிகனும் நடிகையும் நடித்துக் காண்பிப்பார்கள்.
அதில் காட்சி தரும் நடிகை அல்லது நடிகைகள் முழு ஆபாசமாக, வெரும் இரண்டு பீஸ்களுடன் மட்டும் வருவார்கள்.
* ஒரு பணக்காரனை அச்சுறுத்தி, பிலக்மைல் பண்ணி அவனது பணங்களை கொல்லையடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் காட்சி.
* போதை பொருட்கள் பாவணை, புகைத்தல், மது அருந்துதல்.
* அந்த போதையில் பெண்களை கற்பளித்தல், பிறரை துன்புறுத்தல், கண்ணில் படும் மனிதர்களுடன் வீணாக சண்டையில் ஈடுபது...
* நல்ல மனிதர்களுக்கு அநியாயம் செய்தல்.
* கல்லூரியில் எடுக்கும் படமாக இருந்தால், வகுப்பில் ஆசிரியர்களுடன் மோசமாக நடந்துகொள்ளுதல், சக மாணவிகளை ஸைட்டடித்தல், ஆபாசபேச்சுக்களில் ஈடுபடல், தகாத உறவுக்கு வழிவகுத்தல்.
* பஸ் பயணம் அல்லது ரயில் பயணம் தொடர்பான கட்டமாக இருந்தால்,
பயணத்தின் போது டிகட் எடுக்காமல் பயணிப்பது எப்படி?
பக்கத்து சீட்டில் இருக்கும் கன்னிப் பெண்ணை எப்படி கற்பளிப்பது?
பக்கத்து சீட்டில் இருக்கு பயணியின் பணப் பையை எப்படித் திருடுவது? என்ற காட்சிகள் தாராலமாக காண்பிக்கப்படும்.
* வீட்டில் இடம்பெறுவது போன்ற காட்சியாக இருந்தால், அப்பாவுக்கு தெரியாமல் தகாத குறும்புகளில் ஈடுபடுவது எப்படி?, அப்பாவிடம் பொய் சொல்லிஎப்படி பணம் பறிப்பது? போன்ற மாதிரியான காட்சிகளுக்கு அளவிருக்காது.
* குடும்பப் படங்கள் என்ற பெயரில் இன்னும் சில சினிமாக்கள், சின்னத்திரை தொடர் நாடங்கள், இவைகள் அதிகமாக எமது பெண்களால் பார்க்கப்படுபவை.
இதிலும் பல அட்டகாசங்கள்:
கனவனுக்கு எப்படி பொய் சொல்லுவது?,
சொந்தக் காரர்களுடன் எப்படி சண்டை வளர்த்துக் கொள்வது?,
மாமன் மாமிகளுடன் எப்படி கெளரவமற்ற முறையில் நடந்து கொள்வது?
கனவன் இருக்க, அவனுக்கே தெரியாமல் வேறு ஒருவனுடன் கல்ல உறவை வளர்த்துக்கொள்லவது எப்படி?
மனைவி இருக்க வேறு ஒருவளுடன் குடும்ப நடத்துவது எப்படி? போன்ற காட்சிகள் எல்லையற்று காணப்படும்.
* இவைகளுக்கும் மேலாக கதாநயகன், கதாநாயகியாக நடிக்கும் வாலிபனும் யுவதியும்எப்படி ஒருவரை ஒருவர் கட்டியணைப்பது, முத்தமிடுவது,
ஓரே போர்வையில் உறங்குவது போன்று காட்சிப் படுவது,
நிர்வாணமாக குளிப்பது அனைத்தும் எந்த வகையில், எந்த மததில் அனுமதிக்கப் பட்டது?
எந்த பெற்றோர்களால் ஆசிர்வகிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது?
* படக் காட்சி எடுப்பதற்காக ஊர் ஊராக, நாடு நாடாகப் பயணிக்கும் இந்த சினிமாக் கும்பல் பயணத்தின் எப்படி நடந்துகொள்கிறார்கள்.
எத்தனை நடிகைகள் தங்கள் கற்பை தனது துணை நடிகனுக்கும், இயக்குநருக்கும் விருந்தாகக் கொடுக்கிறார்கள்?
இந்த இழி செயலை எத்தனை சினிமாத் துறை ஆண்மக்கள் பயன்படுத்தாது, தனது தங்கையாக அந்த சக நடிகையை நினைத்து பரிசுத்தவானாகநடந்துகொள்கிறார்கள்?
உதாரணமாக, ஒரு நடிகை 20 படங்களில் நடிக்கிறால் என்றால் 20 வேறு நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் வேறு பல கதாபாத்திரங்கள் தரிக்கும்ஆண்களுடனும் தனது காம இச்சையை பகிர்ந்து கொள்கிறால்? (ஒரு பெண்ணாக இருந்து அவள் அனுமதி மறுத்தால், சினிமாத்துரையிலிருந்து அவள்துக்கியெறியப்படுவால்).
அப்படியென்றால் அவளுக்கு என்ன பெயர் சமூகத்தில் சொல்லுவது? அதனை வாசகர் கருத்துக்கு விட்டுவிடுகிறேன்.
இந்த செயல்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது தான், அதனால் தான் நாங்கள் எங்களுடைய பிரதேசங்களில் அல்லது எங்களது சொந்தங்களைஅனுமதித்திருக்கிறோம் என்பதற்கு இந்துக்கள் தங்கள் வேத நூல்களிலிருந்து ஆதாரத்தைக் கொண்டு வரட்டும், கிறிஸ்தவர்களும் தங்கள் ஆதாரத்தைக்கொண்டு வரட்டும், யூதர்களும் பெளத்தர்களும் அவர்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வரட்டும், அதே போன்று இஸ்லாமியர்களும் தங்கள் வேதபுத்தகங்களிலிருந்து ஆதாரங்களை கொண்டு வரட்டும் பார்க்கலாம்.
சமூக சீர்திருத்தம் தொடர்பாக பேசும், எழுதும், செயல்படும் எத்தனை தியாகிகள் உலகில் வாழ்ந்துகொண்டிருக்க, கேவலம் சினிமாவில் பாடல்வரிகள்எழுதினார், எழுதுகிறார் என்பதற்காக எத்தனை பதக்கங்கள், பட்டங்கள் கொடுக்கப்பட்டது, கொடுக்கப்பட்டுவருகிறது?
அந்த பாடல்வரிகளுக்கு இசை அமைத்தார் என்பதற்கு எத்தனை பாராட்டுக்கள்? பட்டங்கள்?
சினிமாவில் ஒரு நடிகன் காம வெறியால் தனது நாக்கால் ஒரு வயசுப் பெண்ணில் தொப்புலில் வட்டம் போட்டார் என்பதற்காக, சிறந்த நடிகர், நடிகைகள்என்று எத்தனை பாராட்டு விழாக்கள், பதக்கங்கள், பட்டங்கள்?
இது தான் சமூக சீர்திருத்தமா?
இவர்கள் சமூக சீர்திருத்தவாதிகளா?
இந்த சினிமாத் துறையின் தாக்கத்தை பாருங்கள்,
மகன் படிக்க வேண்டும் என்ற பேராசையுடன் பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள் பெற்றார்கள், பாடசலை வழியிலேயை தனது நண்பர்களுடன்சேர்ந்து கொண்டு சினிமாப் பார்ப்பதற்காக அல்லது திருடுவதற்காக அல்லது ஒரு சக மாணவியை கடத்துவதற்காக வகுப்பை கட் செய்வதை பரவலாகப்பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட தகவல்களை எல்லா செய்தி ஊடகங்களிலும் பார்க்க கேட்க முடிகிறது. இந்த நிலையை உருவாக்கியது சினிமாத் துறைஎன்றால் அதை எவராலும் மறுக்க, மறைக்க முடியாது.
இதை மறுப்பவர்களுடன் இது தொடர்பாக பகிரங்கமாக விவாதிக்கலாம்.
அங்கம் இரண்டு:
ஒரு வைத்தியர் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டால் என்றால் அதை தவிர்த்துக் கொள்கிறோம்,
புகை பிடிக்க வேண்டால் அல்லது மது அருந்த வேண்டாம், உங்கள் நோயை சீர் செய்ய அதுதான் நல்லது என்ற வைத்திய ஆலோசனையைக்கேட்ட உடன் நிருத்திவிடுகிறோம் அல்லது அதற்கு முயற்சிக்கிறோம். காரணம் எமது நீண்ட ஆயுளுக்கு அது துணை புரிகிறது. அதே போன்று எமதுமூலை, சிந்தனை சீர் பெறுவதற்கும் விவேகமாக இயங்குவதற்கும் எம்மிடத்தில் இருக்கின்ற மருந்துகளில் ஒன்று, சினிமாப் பார்க்காமல் அதிலிருந்துதவிர்ந்திருப்பதும் என்றால் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள்.
உங்கள் சூழலில் வாழும் எந்த சிந்தனையாளர்களிடமும் அல்லது எந்த மனோதத்துவ அறிஞர்களிடத்திலும் ஆய்வாளர்களிடத்திலும் இதை பற்றிக்கேளுங்கள். இந்த உண்மையை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
நாம் வயிற்றுப்பசியைத் தீர்ப்பதற்கும், மேலும் வளர்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தினந்தோறும் மூன்று தடவை உணவு உண்ணுகிறோம்,ஆனால் எத்தனை பேர் எமது மூலை வளர வேண்டும் நல்ல முறையில் சிந்தனைத் தெளிவு கிடைக்க வேண்டும் என்று அதற்கு உணவு படைக்கிறோம்?
எமது சிந்தனை சீர்பெறுவதற்கும் மூலை அபிவிருத்தி அடைவதற்கும் உரிய உணவு என்ன வென்றால், அந்த மூலை வளர்ச்சியை பாதிக்கும் நச்சுத்தன்மைவாய்ந்த செயலிருந்து தூரமாகி இருப்பது மிக முக்கியமானதாகும். அப்படியென்றால் வாருங்கள் சமூக சீரழிவை உண்டுபன்னும் சமூகத்தின்கலாச்சாரத்தை பாதிக்கச் செய்திருக்கும் சினிமாவிலிருந்து ஒதுங்குவோம், அதற்கெதிராக குரல் கொடுப்போம். சினிமாத் துரையை வளர்க்கும்அரசாங்களையும் ஆதரவு அமைப்புக்களையும் சிந்திக்கச் செய்வோம்.
அங்கம் மூன்று:
சில நவீன கால அறிஞர்கள், முஸ்லிம்கள் சினிமாவில் நடிப்பதும், பார்ப்பதும் கூடும், அதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது என்று கருத்துத்தெரிவித்துவருகிறார்கள். அதற்குஆதரவாக ஃபத்வாவும் கொடுத்து வருகிறார்கள். இப்படிப் பட்டவர்களை எம்மில் சிலர் தங்களது மேலான மார்க்கஅறிஞர்களில் ஒருவராகவும் பார்த்து, அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு அலைகிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம் என்று கூட ஃபத்வா.
ஏன் மார்க்கத்தை விலை பேசுகிறீர்கள், மார்க்கத்தில் உங்கள் மனோ இச்சைகளை திணிக்கிறீர்கள் என்றால் அதற்கு பதில் இல்லை.
இந்த அறிஞர்களிடத்தில் அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களிடத்தில் சில கேள்வியை சில சிந்தனையாளர்கள் முன் வைக்கிறார்கள்,
1. நீங்கள் அனுமதிக்கும் இந்த சினிமா இன்று எந்த நாட்டில், திரை அரங்குகளில் காட்சிப் படுத்தப்படுகிறது?
2. ஒரு பெண் அந்நிய ஆணுடன் தேவையற்ற தொடர்புகளை வைத்துக் கொள்வதை இஸ்லாம் தடுப்பதால், சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் எப்படிகதாநாயகனாக, கதாநாயகியாக வேடம் போட்டு நடிக்க முடியும்? முடியாது என்றால்,
3. அனுமதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து நடிக்கலாம் என்றால் தந்தையையும் மகளையும் கதாநயகனாகவும் கதாநாயகியாக்வும் நடிக்கஅனுமதிப்பீர்களா?
4. அல்லது அனுமதிக்கப்பட்ட கனவனும் மனைவியும் சினிமாவிலும் அதே கனவனும் மனைவியும் போல் நடிப்பது தவறில்லை என்றால், நீங்கள்இயற்றும் படத்தில் அதே கனவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவதையும், முத்தமிட்டுக் கொள்வதையும் சண்டை பிடித்துக்கொள்வதையும், ஒன்றாக படுத்துத் தூங்குவதையும் காட்சிப் படுத்துவீர்களா?
5. பெண்கள் சினிமாவில் நடிக்கமுடியும் என்றால் சந்தர்ப்பம் கிடைத்தால் இன்றை சினிமாவில் உங்கள் வீட்டுப் பெண்களை நடிக்க அனுமதிப்பீர்களா?
No comments:
Post a Comment