வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்.


அன்று உலகத்திற்கே தன் அறிவையும், ஆற்றலையும் வாரிவழங்கிய சமுதாயம், இவ்வுலகையே கட்டி ஆண்ட ஒரு சமுதாயம் இன்று தான் அறிவு பெருவதற்காகவும், தம் வாழ்வுரிமைக்காகவும் மாற்றாரிடம் மண்டியிட்டு மடிபிச்சை கேட்கும் அளவிற்கு பரிதாப நிலையில் உள்ளதை நம் கண்கூடாகக் காண்கிறோம். உலக முஸ்லிம்களின் இன்றைய நிலையை சற்று ஏறிட்டு பார்ப்போமானால் அவர்களுக்கெதிரான அநீதிகளும், கொடுமைகளும், எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்ப்பிரகடனங்களும் கண்கூடாகத்தெரியும்.

முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு; அவர்களை ஒட்டுமொத்தமாக நசுக்கிய போதிலும் கேட்பதற்கு நாதியற்ற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும் 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற போதிலும் இத்தகைய அவல நிலைக்கு என்ன காரணம்? 
....
மேற்கண்ட நபிமொழிக்கு நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும்? 'வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடவேண்டும் மேலும் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் வைத்து மரணத்தை வெறுக்கவும் வேண்டும் என்றா பொருள்?' இல்லையே. ''வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள்'' என்றால் அவ்வாறு நீங்கள் ஆகிவிடக்கூடாது மாறாக ''வெள்ளத்தின் விசைபோல் ஆகிவிடுங்கள், வீரத்துடன் வாழுங்கள்'' என்ற நபி (ஸல்) அவர்களின் ஒரு எச்சரிக்கை பிரகடனமல்லவா அது.

அதைப்போல ''இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைப்பார்கள் மரணத்தை அஞ்சுவார்கள்'' என்றால் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்காதீர்கள் மேலும் இறைவன் விதித்த மரணத்திற்கும், இறைவனுடைய பாதையில் மரணமாவதற்கும் அஞ்சாதீர்கள் என்றல்லவா பொருள்.

எனவே மேற்கண்ட நபிமொழிக்கு உண்மைக்கு மாற்றமான தவறான பொருள் கொண்டால் மட்டும்தான் நாம் பலகீனமாகிவிட்டோம், வெள்ளத்தின் நுரைபோல இருக்கிறோம் எனவே நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்க இயலாது என்ற தாழ்வுமனப்பான்மையான முடிவிற்கு வரஇயலும். சரியான முறையில் சிந்தித்தோமென்றால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடக்கூடாது, மறுமை வாழ்கையைவிட இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்கக் கூடாது, வீர மரணத்திற்கு அஞ்சிடக் கூடாது என்ற நிலைபாட்டிற்கே நம்மால் வரஇயலுகிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள் எனவேதான் அத்தகைய நிலையில் நாம் இருக்கிறோம் என்ற கருத்தை மீண்டும் உறுதியாக நம்புபவர்களை நோக்கி பலவகையான கேள்விகளும் எழுகிறது.

உதாரணமாக நபி (ஸல்) இந்த ஒரு விஷயத்தை மட்டும் முன்னறிவிப்பு செய்துவிட்டுப் போகவில்லை மாறாக பலவகையான நிகழ்வுகளைப்பற்றியும் முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள். அவ்வரிசையில் மறுமையின் அடையாளங்களைப் பற்றிக் கூறியபோது ''அந்நாளில் விபச்சாரம் பெருகிவிடும். கொலை செய்வது மிக மலிந்து காணப்படும். தற்கொலைகள் அதிகமாகிவிடும்'' என்றெல்லாம் முன்னறிவிப்பு செய்தார்கள்.

எனவே மேற்கண்ட முன்னறிவிப்பை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேன்டும்?
....
தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க!
 
http://ottrumai.net/TArticles/9-WaveFoamsN73Sects.htm
 
இப்படிக்கு
 
ஒற்றுமை இணையக்குழு

No comments:

Post a Comment