சோதனைகள்..



-- மனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே உள்ளதுமுஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் மறுமைக்காகவேஉள்ளதுஇவ்வுலக சோதனைகளில் மனமுடைந்து விடாமலிருக்க பின்வரும் குர்ஆன் வசனங்கள்ஹதீஸ்கள் உதவும்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாதுஅவன் எங்கள் அதிபதிநம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையேசார்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?அவர்களுக்கு வறுமையும்துன்பமும் ஏற்பட்டனஅல்லாஹ்வின் உதவி எப்போதுஎன்று ( இறைத்தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும்கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்கஅல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்
விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களாஅவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம்உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான்.
பொய்யர்களையும் அறிவான்.

திருக்குர்ஆன் 29:2,3

ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான்.ஒரு மனிதருக்கு (மறுமையில்அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான்என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும்தமது பிள்ளைகள் விஷயத்திலும்தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்அல்லாஹ்வைச் சந்திக்கும்நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அபூ ஹுரைரா (ரலி)

நூல்திர்மிதீ 2323

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலிதுன்பம்நோய்கவலைஅவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாகஅவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப்போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5023

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லைமன்னித்துவிடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்புகாரி 6664

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமானவிஷயங்கள் எழுகின்றனஅவற்றை (வெளிப்படுத்திப்)பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர்அதற்கு நபி (ஸல்அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகையஉணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள்அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவானஇறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் 188

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்தஅனைவரும் (இறைவனால்மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர.ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்)மறைத்துவிட்டிருக்க , இன்னாரேநேற்றிரவு நான் (பாவங்களில்இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தைஇரவில் (பிறருக்குத் தெரியாமல்இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன்தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்புகாரி 6069

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழேஎன்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பர்விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாககுடித்துக் கொண்டேயிருப்பார்ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரகநெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அபூ ஹுரைரா (ரலி)

நூல்புகாரி 5778

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனைமறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கைஇழக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 12:87

No comments:

Post a Comment