சென்னை: அதிமுகவின் இணையதளத்தை சில நாட்களுக்கு முன்பு ஹேக் செய்து முடக்கிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனராம். அவரது பெயர் ஈஸ்வரன். பெங்களூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட அவரை தற்போது போலீஸார் புழல் சிறையில் அடைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஹேக்கர்கள் பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஜெயா டிவியின் இணையதளம் ஆகியவை முடக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னை காவல்துறையின் சைபர் பிரிவில் அதிமுக தரப்பில் புகார் தரப்பட்டது. சென்னை போலீஸார் அதி வேகமாக செயல்படத் தொடங்கினர். அண்ணா பல்கலைக்கழகத்தின் சாப்ட்வேர் நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டது. இந்த தீவிர விசாரணையில் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர்தான் இந்த வேலையைச் செய்ததாக கண்டறியப்பட்டது. இதையடுத்து ஈஸ்வரனைப் போலீஸார் கைது செய்தனர். அவரை அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அடுத்து அவரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/chennai-police-nab-software-engineer-hacking-admk-website-187066.html
No comments:
Post a Comment