யார் இந்த சச்சின் தென்டுல்கர்.? Sachin Tendulkar





ஏன் இந்த நபருக்கு இவ்வளவு மரியாதை?
இவர் என்ன இந்தியாவின் முதல் குடிமகனா?
ஏன் இவருக்கு கவுரவ எம்.பி. பதவி?
நாட்டின் வளர்ச்சிக்கு ஏதேனும் பாடுபட்டாரா?
இவரும் நம்மைப்போல் ஒரு சாதாரண இந்தியக் குடிமகன்தான்...பிறகு ஏன் இவருக்கு பாரத ரத்னா விருதிற்கு பரிந்துரைக்கின்றனர்.?
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதேனும் பங்களிப்பு செய்தாரா?
கிரிக்கெட் விளையாடினார் என்பதற்கா?
அப்படி அவர் நம் நாட்டிற்காக செய்தது என்ன?
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.இவர் கிரிக்கெட் விளையாடி சாதனை புரிந்ததர்க்கும் , நம் நாட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
ஏனெனில் , BCCI என்பது இந்திய அரசின் நிறுவனம் இல்லை.அது தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இயங்கும் ஓர் தனியார் விளையாட்டு அணி மட்டுமே.
ஆக ஒரு தனியார் அணியின் விளையாட்டு வீரர் ஒருவருக்குத்தான் இந்திய அரசு, நாட்டின் உயர்ந்த விருதினை கொடுக்க முயல்கிறது .


நாட்டிற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத இவருக்கு , மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு இவருக்கு பரிசுப்பொருளாக கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்திய தேசியக்கொடி பொரித்த தலைக்கவசத்தை அணிந்து விளையாடி சம்பாதித்தது மட்டுமல்லாமல் விளம்பரங்களின் மூலமும் சம்பாதித்து அப்பணத்தையெல்லாம் வெளிநாடுகளில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார் இவர்.

இதன்மூலம் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வரிப்பணம் வேறு நாட்டிற்கு போய்ச்சேர்கிறது.

இவர் ஏதோ தன் உயிரை பணையம் வைத்து நாட்டிற்கு உழைத்ததை போல,இவரைத்தான் கிரிக்கெட்டின் கடவுள் (?) என்று விபச்சார ஊடகங்களும், சிந்திக்கும் தன்மையற்ற இவரின் ரசிகர்களும் தலைமேல் தூக்கிவைத்தக்கொண்டு கொண்டாடிருப்பவர்கள் இனியாவது திருந்துவார்களா..?

இந்தியர் என்பதைத்தவிர இவரால் நாட்டிற்கு எள்ளலவும் நன்மையில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.!!

ஆக்கம் - விக்கிரவாண்டி-பக்கம்


No comments:

Post a Comment